இடுகைகள்

விற்பனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?

படம்
 சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா? அண்மையில் சிங்கவலிமையை மனிதர்களுக்கு கடத்தும் பேரீச்சை பழ பிராண்டு ஒன்றை வாங்கினேன். கால்கிலோ பாக்கெட் 105 ரூபாய். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரீதியில் கடையில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தது. விவகாரம் என்னவென்றால், உண்மையில் அந்த பேரீச்சம்பழம் தரமானதா இல்லையா என்பதுதான். பாக்கெட் பளபளவென அழகாக உருவாக்கி இருந்தனர். விஷயம் வீக்காக இருந்தால் பப்ளிசிட்டி பீக்காக இருக்கும் என்ற தத்துவப்படியே பழ பிராண்டு இருந்தது.  தேயிலை, காபித்தூளுக்கு கொடுப்பது போல ஜிப்லாக் பாக்கெட்டை தயாரித்து இருந்தார்கள். ஆனால், ஈராக்கில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழம் பக்குவப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்டுகிறது. அது எந்தளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்? பழம்தான் புதிதாக இருக்குமா என்ன? அதற்கு எதற்காக ஜிப்லாக் பாக்கெட். வெட்டி விளம்பரம்தான். முக்கியமாக பழத்தை கழுவி சாப்பிடுங்கள் என பான் இ்ந்தியா லெவலில் பன்மொழி முன்னறிப்பு வேறு. ஆனால், தண்ணீரில் கழுவினால் பேரீச்சையில் கொட்டை மட்டுமே மிஞ்சியது. அந...

ஆன்லைன் வணிகத்தில் முதலை - அலிபாபாவின் வெற்றி

படம்
  ஆன்லைன் வணிகத்தில் முதலை சீனாவில் உள்ள ஆன்லைன் வணிகத்தில் எண்பது சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது அலிபாபா. இபே, அமேசான் ஆகிய தளங்களை ஒன்று சேர்த்தால் வரும் வருமானத்தை விட அதிகம். ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம், சிறுகுறு வணிகர்களை இணையத்தின் வழியாக இணைக்கிறது. 2014ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனம்.  இபே நிறுவனம், சீனாவில் தொடங்கப்பட்டபோது அலிபாபா அதை எதிர்கொள்ள தாபோபாவோ என்ற இணையத்தளத்தை தொடங்கியது. ஆன்லைன் வணிகத்தில் பொருளை விற்பவர், இணையதளத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். அலிபாபாவின் தாவோ இணையத்தளத்தில் அப்படி எந்த தொகையும் தரவேண்டியதில்லை. இபேவின் தளத்தில் பொருட்களை விற்க காசு கட்டவேண்டும். தாவோ தளம் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றது.  அப்போது ஆன்லைன் வணிகத்தில் சீனா திறன் பெற்றிருக்கவில்லை. பொருட்களை வாங்கிவிட்டு இணையத்தில் பணம் கட்டுவதற்கு வசதி கிடையாது. வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாமே வங்கிகளை மாற்றுவோம் என்றார் மா. அதன்படி, அலிபே என்ற இணையவழி பணம் செலுத்தும் வசதியை உருவாக்கினார். நாடெங்கிலும் உள்...

பிளாக் மித் - வுகோங் உலகை கலக்கும் சீன வீடியோகேம்

படம்
      உலகை கலக்கும் சீன வீடியோ கேம் - பிளாக் மித் வுகோங் சீனாவில் இருந்து வெளிவரும் அனைத்தையும் உலக நாடுகள் அச்சத்துடன் பார்த்து வருகின்றன. தொழில்நுட்ப ரீதியான சீனா, மாபெரும் வளர்ச்சியையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிளாக் மித் என்ற வீடியோ கேம் வெளியிடப்பட்டு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியிட்ட மூன்று நாட்களில் பத்து மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் வருமானம் 854 மில்லியனாக உயரும் என வணிக மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன. சீனர்களைப் பொறுத்தவரை இது வெறும் வீடியோகேம் மட்டுமல்ல. அவர்களின் கலாசாரமும் இணைந்துள்ளது. ஆப்ரோசெஞ்சு, பிளாக் மித் விளையாட்டை விளையாடி இரண்டு மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளார். ஏறத்தாழ அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார். காத்திருப்பு வீண் போகவில்லை. விளையாட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கணினி விளையாட்டு சீன நாட்டுப்புறக்கதையான ஜர்னி டு வெஸ்ட் என்ற கதையை ஆதாரமாக கொண்டது. பல்வேறு நவீன மாற்றங்களுடன் கணினி விளையாட்டு பயனர்களின் கைகளுக்கு வந்துள்ளது. தொன்மை புனைவுகளோடு, நவீன கண்டுபி...

கிம் கதர்ஷியன் - உடலையே பிராண்டாக்கி ஸ்கிம்ஸ் ஆடை நிறுவனத்தை தொடங்கிய துணிச்சல்காரி

படம்
  ஸ்கிம்ஸ் - ஆடைகள் கிம் கதர்ஷியன் கிம் கதர்ஷியன் - ஸ்கிம்ஸ் கிம் கதர்ஷியன் உங்களுக்கு இந்த பெயர் தெரியாமல் இருக்காது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என பல்வேறு இடங்களில் கிம்மைப் பார்த்திருப்பீர்கள். கிம், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது உடல் அமைப்பு மூலம் பிறருக்கு அறிமுகமானவர். மார்பகங்கள், புட்டங்கள் என தன்னை அலங்காரப்படுத்திக்கொண்டு கூடுதல் பெண் தன்மையோடு இருப்பவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான மக்கள் பின்தொடர்கிறார்கள். கிம், தனது பிரபலம் அப்படியே காலத்திற்கும் இருக்கும் என நம்புகிற முட்டாள் அல்ல. எனவே, அந்த பிரபலத்தை வணிகத்திற்கு திருப்பிவிட முடிவெடுத்தார். அதன்படி தோழி, தோழியின் கணவர் ஆகியோருடன் சேர்ந்து ஸ்கிம்ஸ் என்ற ஆடை நிறுவனத்தை தொடங்கினார். தொந்தி இருக்கும் பெண்கள் அணியும் ஷேப் வேர் எனும் உடைகளை இந்த   நிறுவனம் தயாரித்து விற்கிறது. பெரும்பாலும் இணையத்தில் உள்ள வலைத்தளம் மூலமாக அதிக ஆர்டர்கள் வருகின்றன. கிம், ஏற்கெனவே நகைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். இதற்கென தனி நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், வெற்றிகரமானவை என்று கூற முடியாது. ஸ்கிம்ஸ் நி...

யாவரும் ஏமாளி 2 - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளத்தில்.... விரைவில்

படம்
 

யாவரும் ஏமாளி - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  ஒரு வாரத்தில் எத்தனை முறை உங்கள் பர்சைத் திறக்கிறீர்கள் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதனால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கிறீர்கள், எதனால் ஒரு பொருளை வாங்கவேண்டுமென தோன்றுகிறது ஆகிய கேள்விகளுக்கு பின்னால் உள்ள உளவியல் விஷயங்களை நூல் பேசுகிறது. எப்படி பெருநிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை தயாரித்து விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். மக்களை பெருமளவு செலவு செய்ய வைக்க என்னென்ன உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை யாவரும் ஏமாளி நூல் வெளிப்படுத்துகிறது.  நூலை கீழுள்ள முகவரியில் தரவிறக்கி வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.com/dp/B0C3CBVYNP

யாவரும் ஏமாளி புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
  நூல் விரைவில் அமேஸானில் வெளியாகும்..... நன்றி!

உடைகளை விற்க செக்ஸ் கூட ஒரு மகத்தான கருவி- கால்வின் கிளைன் உருவாக்கிய விளம்பரங்கள்

படம்
  மார்க் வால்பெர்க் - கேட் மோஸ் விளம்பரம் புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ் விளம்பர இயக்குநர் மடோனா பேட்ஜர்  அமெரிக்காவில் வணிக ரீதியாகவும் கலாசா ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை பிறர் ஏற்றுக் கொள்வது கடினம். அந்தளவு செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் தாராள இயல்பில் வேகமாக முன்னேறி வருகின்றனர். துணிக்கடைகளில் ஆண், பெண் என மொழு மொழு பொம்மைகளை வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சிலர் அதை வெறியுடன் வேட்கையுடன் பார்த்துக்கொண்டே கடைகளை கடப்பார்கள். அப்படியான வசீகரத்துடன் பார்க்க படு கச்சிதமான உடல் அமைப்புடன் ஆண், பெண் பொம்மைகள் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் இதைப் பார்ப்பவர்களுக்கு மனதில் என்ன தோன்றும் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா? சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆண், ஆணைப் போன்ற உடல் கொண்ட பெண் என இருவரும் வரும் ஆடை விளம்பரங்கள் தொடக்கத்தில் இருந்தே இளைஞர்களை கவர்ந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய ஆண், பெண் மாடல்களை வைத்து எடுக்கும் விளம்பரங்கள் பிரபலம்.   தொண்ணூறுகளில் விளம்பர ஏஜென்சி வைத்து நடத்திய மடோனா பேட்ஜர், புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ...

பிரச்னையின் பூதாகரமும், பெண்களின் குற்றவுணர்ச்சியை தூண்டுவிடுதலும் விற்பனையைக் கூட்டும்!

படம்
  பற்களை துலக்காமல் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறீர்களா? அப்படி மறந்த நாள் முழுக்க வாய் நாற்றம் அடிக்குமோ, பற்களில் உள்ள ஊத்தை வெளியே தெரிந்துவிடுமோ என்று நினைத்து பயந்திருக்கிறீர்களா? இப்படி பயத்தை உருவாக்கி வெல்வதுதான் பெருநிறுவனங்களின் சாதனை. பழங்காலத்தில் வேப்பங்குச்சி, கரி என்று பல் துலக்கிய ஆட்களை அதெல்லாம் தவறு என்று கூறி, பிறகு அதே பொருட்களின் சாரத்தை பற்பசையாக்கி ‘பற்களுக்கு மிகவும் நல்லது’ என்று சொல்லி நிறுவனங்கள் விற்று வருகின்றன. கோல்கேட் தொடங்கி சென்சோடைன் தொடங்கி விளம்பரங்களை எப்படி எடுத்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இதிலுள்ள மூன்று கோட்பாடுகளைப் பார்ப்போம். அன்று தொடங்கி இன்றுவரை இந்த விதிகள் மாறவே இல்லை. 1.பிரச்னையை அடையாளம் கண்டு கூறவேண்டும் 2.அதை மிகப்பெரியதாக்கி பதற்றம் ஏற்படுத்தவேண்டும் 3. தீர்வைக் கூறவேண்டும் பற்பசை விளம்பரங்கள் மேற்சொன்ன மூன்று அம்சங்களைத்தான் கடைபிடிக்கின்றன. ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்கள் சொத்தையாதல், வலி, கூச்சம் என்று கூறி இருமுறை பற்களை துலக்கவேண்டும் என்று சொல்லி பற்பசையை விற்கிறார்கள். இதிலும், குழந்தை, இளைஞர்கள், குடும்பஸ்தர்கள...

குழந்தைகளே லட்சியம், விற்பனை நிச்சயம்!

படம்
  வீட்டுக்குத் தேவையான சோப்பு. தரையைத் துடைக்கும் பொருட்கள், சலவைததூள், சலவை சோப்பு ஆகியவற்றை வீட்டின் மூத்தவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் சாப்பிடும் பொருட்களைப் பொறுத்தவரை ஒரு வீட்டில் குழந்தைதான் முடிவு செய்யும். டிவிகளில் ஏராளமான விளம்பரங்களைப் பார்த்து, சாக்லெட் என்றால் கேண்டிமேன், கிண்டர் ஜாய், குவாக்கர் ஓட்ஸ், டோமினோ பீட்ஸா, சாண்ட்விட்ச் பிஸ்கெட்டுகள், ட்ராபிகானா ஜூஸ் என பலதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு வீட்டில் செல்வாக்கு அதிகம். பெற்றோர், தாத்தா, பாட்டி, உறவினர்கள் என நிறையப் பேரிடம் அவர்கள் பொருட்களைக் கேட்டுப் பெற முடியும். பொதுவாக குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே சில பிராண்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டால் ஒருவரை எளிதாக மாற்ற முடியாது. சில குடும்பங்களில் அவர்களின் கலாசார இயல்புப்படி, பேஸ்ட் என்றால் கோல்கேட்தான், பிரஷ் என்றால் சென்சோடைன், குளியல் சோப்பு என்றால் சின்தால் என முடிவே செய்திருப்பார்கள். இந்த சூழலில் வளரும் ஒரு குழந்தை தனது தேர்வை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ள முடியாது. உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளை கவருவதற்கு ஜூனியர்...

குழந்தைகளை வாடிக்கையாளர்களாக்கி வளைக்கும் பெருநிறுவனங்கள்!

படம்
  லியோ காபி என்றதும் உங்கள் மனதில் என்ன நினைவுக்கு வருகிறது. ஏ ஆர் ஆரின் விளம்பர இசை நினைவுக்கு வந்தால் சிறப்பு. அதைக்கடந்து ஹாரிஸ்   ஏ ஆர் ஆரின் விளம்பர இசையை முதற்கனவே பாடலில் (மஜ்னு) பயன்படுத்தியதும் நினைவுக்கு வந்தால் மிகச்சிறப்பு.   இதேபோல்தான் குஜராத்தில் தயாரிக்கப்பட்டு இந்துஸ்தான் யூனிலீவருக்கு போட்டியாக சலவை சோப், தூளை விற்ற நிர்மா நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பரம் பலருக்கும் நினைவில் இருக்கும். இப்போதும் இந்த நிறுவனம் போட்டிகளை சந்தித்து சோப்பு, சலவைத்தூளை விற்கிறது. நிறுவனத்தின் ட்ரேட்மார்க்காக பாவாடை பறக்கும் பாப்பா கூட மாற்றப்படவில்லை. நினைவு தெரிந்த நாட்களில் கேட்ட விளம்பர இசை என்பதால் மேற்சொன்னவற்றை ஒப்புக் கொள்ளலாம். இதைக் கடந்து குழந்தை   வயிற்றில் இருக்கும்போதே அம்மாவின் இதயத்துடிப்பு, உடலில் செல்லும் பல்வேறு திரவங்களின் ஒலியைக் கேட்கிறது. கர்ப்ப காலத்தில் அம்மா கேட்கும் கார்த்திக் ஐயரின் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ பாடலைக் கூட கேட்டு வைப் செய்ய முடியும். இப்படி கேட்டு வளரும் குழந்தை, அம்மாவின் இசை ரசனையை எளிதாக கற்று பின்னாளில் மகத்தான இசைக்கலைஞ...

வாசனை மூலம் நினைவுகளைத் தூண்டிவிடுவது சாத்தியமா?

படம்
  மாலுக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள தரைதளத்தில் ஹைப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு சென்றவுடன் செல்ஃபில் உள்ள ஒரு பொருளை எடுக்கிறீர்கள். எப்படி அந்த பொருளை உடனே தேர்ந்தெடுத்தீர்கள், அதன் பின்னால் உள்ள தூண்டுதல் என்ன என்பதை யோசித்திருக்கிறீர்களா? அதைப்பற்றித்தான் இந்த நூலில் விலாவரியாக படிக்கப் போகிறோம். நம்மை நாமே புரிந்துகொள்ள போகிறோம். யாவரும் ஏமாளியாக மாற்றப்படுவது எப்படி அறியப்போகிறோம். சில சம்பவங்களைப் பார்ப்போமா? பல்வேறு விபத்துகளில் காயமாகி தனது பெயர் கூட மறந்தவர்களை, தான் எப்படி மருத்துவமனை வந்தோம் என்பதையே நினைவில் கொள்ளாதவர்களை இயல்பான நிலைக்கு எப்படி கொண்டு வருவது? நவீன மருத்துவத்தில் உடல், மனத்திற்கான பல்வேறு சிகிச்சைகள் அதற்கெனவே வந்துள்ளது. இதிலும் கூட டிமென்ஷியா, அம்னீசியா, கோமாவில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி மீட்பது கடினம். ஆனாலும் முயற்சி செய்தால் என்ன கெட்டுப்போய்விடப் போகிறது? இப்போது சற்று புதுமையான முயற்சி ஒன்றைப் பார்ப்போம். 1996ஆம் ஆண்டு, பிரான்சில் இருநூறுக்கும் மேற்பட்ட அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பவர்கள் ஒன்றாக இணைந்து ஒர...

சட்டவிரோத வணிகம் சமூகத்தைக் கடுமையாக பாதிக்கிறது! வூ ஹோவாய் நாம் டங்

  வூ ஹோவாய் நாம் டங் ஆராய்ச்சியாளர்,கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், டென்மார்க் நாம் டங், காண்டாமிருக கொம்புகளை வணிகம் செய்வது பற்றிய வாடிக்கையாளரின் மனநிலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  சட்டவிரோத வணிகம் சமூகத்தை பாதிப்பதாக நினைக்கிறீர்களா? அரசின் சட்டப்பூர்வமான வணிகத்தில் போதுமான கொம்புகள் கிடைக்காதபோது, வாடிக்கையாளர்கள் சட்டவிரோத வணிகர்களை நாடிச்செல்கிறார்கள். இப்படி சட்டவிரோதமாக காண்டாமிருக கொம்புகளை வாங்குவது காட்டின் பல்லுயிர்த்தன்மையை அழிக்கிறது. காடுகளில் கிடைக்கும் சாதாரணமான பொருட்களை குறைந்த வருமானமுள்ள குழுவினர் பெறுகிறார்கள். மிகச்சிலர் மட்டுமே அதிக மதிப்பான பொருட்களைத் தேடுவதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.  எப்படி விலங்குகளிலிருந்து பெறும் பொருட்கள் பற்றிய தகவல்களை சேகரித்தீர்கள்? சட்டவிரோத வியாபாரச் சங்கிலி அமைப்பில் உள்ள வேட்டைக்காரர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என பலரிடமும் பேசியிருக்கிறேன். வியட்நாமில் உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் வயதானவர்களாக, வசதியானவர்களாக இருந்தனர்.  சட்டப்படி விலங்குகளிடமிருந்து பொருட்களை பெற்றுவிற்பது பயன...

அரசு உதவியின் மக்களே அமைக்கும் காற்றாலை!

படம்
  மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை! இங்கிலாந்தின் பிரிஸ்டல் அருகில் உள்ள மக்கள் குழுவினர், தாங்களே நிதி திரட்டி காற்றாலை அமைக்க முயன்றுவருகின்றனர். லாரன்ஸ் வெஸ்டன் என்ற பகுதியிலுள்ள மக்கள்தான் தாங்களே நிதி திரட்டி 150 மீட்டரில் காற்றாலையை அமைக்க முடிவெடுத்துள்ளனர். காற்றாலைக்கு  அரசின் எந்த உதவியும் பெறவில்லை.  4.2 மெகாவாட் திறனில் காற்றாலையை அமைக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மிஞ்சும் மின்சாரத்தை பிறருக்கு விற்க முடிவெடுத்துள்ளனர்.  “மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை திட்டம் இது. இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது மக்களின் கரிம எரிபொருட்களால் ஏற்படும் வறுமை அளவு குறையும். ” என்றார்  லாரன்ஸ் வெஸ்டன் பகுதியில் வாழ்பவரான மார்க் பெப்பர்.  இப்பகுதி மக்கள் இப்படி தூய ஆற்றல் தரும் காற்றாலை திட்டத்தை உருவாக்க அரசை அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு அனுமதி பெறுவது என திட்டம் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகிவந்திருக்கிறது. எனவே, மக்களே நிதி திரட்டி செய்துவிடலாம் என களமிறங்கிவிட்டனர். வணிகரீதியாக அமைக்கப்படும் காற்றாலைகளை விட மக்கள் குழுவாக இணைந்து...

துலிப் மலர் ஏ டூ இசட்- தகவல்களை அறிந்துகொள்ளலாம் வாங்க!

படம்
  உணர்வுகளை சொல்லும் மலர்!  தூலிப் மலர், வெள்ளை, சிவப்பு, ரோஸ், மஞ்சள் என பல்வேறு நிறங்களில் பூக்கிறது. அல்லி மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. தூலிப் மலரில் மட்டும் 75 இனங்கள் அறியப்பட்டுள்ளன. தெற்கு ஐரோப்பா தொடங்கி மத்திய ஆசியப் பகுதிகள் வரை பயிரிடப்படுகிறது. 1055ஆம் ஆண்டு தொடங்கி உலகில் பயிரிடப்படும் தூலிப், ஒட்டமான் பேரரசைக் குறிக்கும் அடையாளமாக கருதப்படுகிறது.  அறிவியல் பெயர் தூலிபா (Tulipa) குடும்பம் லிலியாசியே (Liliaceae) வரிசை  லிலியாலேஸ் (Liliales) ஆயுள்  5 ஆண்டுகள் பூக்கும் காலம் டிசம்பர் முதல் மே மாதம் வரை செடியின் உயரம் 10 செ.மீ முதல் 71 செ.மீ. வரை தாயகம்  மத்திய ஆசியா, துருக்கி மலரின் பொருள் அன்பு (சிவப்பு), விசுவாசத்தை (வெள்ளை), உற்சாகம் (மஞ்சள்)வெளிக்காட்டும் மலர்கள் தூலிப் மலரின் பாகங்கள் இதழ் (Petal) அடர்த்தியான நிறங்களைக் கொண்ட தூலிப் மலரின் இதழ்கள். இவையே பூச்சிகளை ஈர்ப்பதற்கான காரணம்.  மகரந்தப்பை (Anther) மகரந்த துகள்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது.  மகரந்த கம்பி (Filament) மகரந்தப்பையைத்  தாங்குகிறது புல்லிவட்டம் புற இதழ் (...

தொழிலை அறிய அதை தொடங்கிவிடுங்கள் - கனிகா குப்தா ஷோரி, ஸ்கொயர் யார்ட்ஸ்

படம்
  கனிகா குப்தா ஷோரி  நிறுவனர், செயல்பாட்டு இயக்குநர் ஸ்கொயர் யார்ட்ஸ்  வார்ட்டன் வணிகப்பள்ளியில் படித்தவர் கனிகா. தற்போது ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  தனது தொழில் சாதனைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர் கனிகா. இளம் சாதனையாளர், வுமன் ஐகான், நாற்பது வயதுக்குள் உள்ள நாற்பது தொழிலதிபர்கள் என்ற பட்டியலிலும் இடம்பெற்று சாதித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.  வணிகத்திற்குள் எப்படி உள்ளே வந்தீர்கள். உங்களால் ரியல் எஸ்டேட் வணிகத்தில் சாதிக்கமுடியும் என்று தோன்றியதா? குழந்தை பிறப்புக்குப் பிறகு நானும் எனது கணவரும் இணைந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தோம். இத்துறையில் எந்த பாகுபாடுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் நிறுவனங்களும் ஆட்களும் குறைவு.  இதற்காகவே நாங்கள் 2014இல் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். தொழிலை தொடங்கும் முன்னரே வரும் பல்வேறு சவால்களை சமாளிக்க முடியுமா என்று யோசித்தேன். தைரியம் வந்ததும் தொழிலைத் தொடங்கினேன். இவைதான் எனக்கு இப்போதும் தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவுகிறது.  உ...

கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி!

படம்
  கொத்தடிமையாக வேலை செய்தவர்களை மீட்கும் செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. அதுதான் ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றிவிட்டாரல்லவா அப்புறம் என்ன என நினைத்து விடுகிறோம். அதற்குப் பிறகுதான் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதி தொடங்குகிறது. இனி பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் என்பது.  திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், எஸ்ஆர்எல்எம் எனும் திட்டத்தின்படி, கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சில பயிற்சிகளை கற்றுத் தந்து அவர்களது பொருட்களை சிறகுகள் என்ற பிராண்டில் அமேசானில் சந்தைப்படுத்தி வருகின்றது.  மூங்கில் பொருட்களை கொத்தடிமை தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இதில் மொபைல் போன் ஸ்டாண்ட், பிரஷ்களை வைக்கும் ஸ்டாண்ட் என பல்வேறு பொருட்களை உருவாக்கி வருகிறார்கள்.  வேலூர் காட்பாடியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தவர் சண்முகம். 2013ஆம் ஆண்டு இவர் அங்கிருந்து மீட்கப்பட்டார். பிறகு ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வேலைகளை செய்து வந்தாலும் குடும்பத்தை வைத்து காப்பாற்றும் அளவுக்கு சம்பாத்தியம் கிடைக்கவில்லை. ...

வணிகத்தில் உளவியலைக் கசடறக் கற்றுத்தரும் நூல்! - சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் ’பிஸினஸ் சைக்காலஜி ’

படம்
  பிஸினஸ் சைக்காலஜி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பதிப்பகம் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய வணிகத்தொடர்.  இந்த தொடரில் பிராண்ட் என்பது எந்தளவு முக்கியம். அதனை எப்படி வடிவமைப்பது, அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதை விளக்குகிறார்.  வணிகம் என்பதை எப்படி நடத்துவது, வாடிக்கையாளர்களை கவருவது, பொருட்களை விற்றுவிட்டால் போதுமா, அவர்களின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதைப் பற்றியும் சதீஷ் விளக்கமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் காட்டி புரிய வைக்கிறார்.  சதீஷின் எளிமையான சுவாரசியமான எழுத்து, வணிகம் செய்வோரை அல்லாமல் பிறரையும் எளிதாக நூலுக்குள் கொண்டு வருகிறது.  நூல் முழுக்க உளவியல் சார்ந்த அணுகுமுறை கொண்டுள்ளது. இதில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை எப்படி பெறுவது என்பதையே மையமாக கொண்டிருக்கின்றனர். வியாபாரம் என்றாலே ஆறு பொய், நான்கு உண்மை என்பது தான் உண்மை. ஆனால் இதற்கு முன்னால் உள்ள விஷயம், வாடிக்கையாளரை எப்படி நம்ப வைத்து நம்மை கவனிக்க வைப்பது என்பதைத்தான். இதைத்தான் சதீஷ் விளக்கியுள்ளார்.  வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்குபவர்களைப் ப...

சென்னை புத்தக கண்காட்சி வரலாறு!

படம்
  pixabay 1976ஆம் ஆண்டு சென்னையில் முதல்முறையாக புத்தக திருவிழா நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள முகல் இ ஆசாம் என்ற பள்ளியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.  2022ஆம் ஆண்டு நடைபெறும் புத்தக காட்சி 45 ஆவது ஆண்டாக நடைபெறும் புத்தக காட்சி ஆகும்.  பை பதிப்பகத்தில் கே வி மேத்யூ என்பவரே புத்தக காட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்தக காட் சி இயக்கத்தை சென்னையில் உருவாக்கியவர்.  தொடக்க காலத்தில் தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் இடம்பெறவில்லை. காரணம். இதற்கான கட்டணம்தான். பின்னாளில் தொகை குறைக்கப்பட்டது. பல தமிழ் பதிப்பகங்கள் புத்தக காட்சியில் பங்கேற்றனர்.  இப்போது சென்னையில் நடைபெறும் புத்தக காட்சியில் அறுநூறு கடைகள் தமிழ் பதிப்பகங்களுக்கும் மீதியுள்ளவரை பிற மொழிநூல்களுக்கும் பதிப்பகங்களும் வழங்கப்படுகிறது.  பதிப்பகங்கள் அல்லாத எழுத்தாளர்களும் கூட இங்கே தனி ஸ்டால் போட்டு புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.  2021ஆம்ஆண்டு பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. அப்போது கூட புத்தக காட்சியில் 700 ஸ்டால்கள் இருந்தன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான தல...

இப்படியும் நிதியுதவிகளை பெறலாம்! - கடிதங்கள்

படம்
  நன்கொடை மிரட்டல் அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்று பிக்பஜார் கடைக்கு டீஷர்ட் வாங்க சென்றேன். வடபழனியில் தனியாக கடையை அமைத்துள்ளார்கள். துணியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு டிப்டாப் டை கட்டாத ஆட்கள் எங்களை அணுகினர். குழந்தைகள் பசியால் இறக்கின்றனர் என்பதை சொல்லி புள்ளிவிவரங்களைச் சொன்னார்கள். எதற்கு என்னால் நாங்கள் அதற்கு 5 ஆயிரம் தொடங்கி பல்லாயிரம் வரை தானம் கொடுக்கலாமாம். 500 ரூபாய் டிஷர்ட் எடுக்க வந்து ஐயாயிரம் ரூபாய் தானம் கொடுக்கும் தைரியம் எனக்கு இல்லை.  பிக் பஜார் கடையில் இதுபோல வாடிக்கையாளர்களை மிரட்டும் ஆட்கள் புதிதல்ல. இதற்கு முன்னால் வங்கி ஆட்களை உள்ளே விட்டு கிரடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள் என மிரட்டுவார்கள். இப்போது இப்படி. நேருவின் போராட்டகால சிந்தனைகளை படிக்கத் தொடங்கியுள்ளேன். மதம் பற்றிய அவரது உறுதியான சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது.  நன்றி! ச.அன்பரசு  22.3. 2021