இம்ரான் அமைச்சரவைக்குழு!
இது இம்ரான்கான் கூட்டம்! ஆசாத் உமர் ராவல்பிண்டியில் பிறந்து கராச்சியில் எம்பிஏ பட்டம் வென்று என்க்ரோ நிறுவனத்தின் இயக்குநராக(2004-2012) நினைத்து பார்க்கமுடியாத சம்பளம் பெற்ற மனிதர். 2012 ஆம் ஆண்டு தெரீக் இ இன்சாஃப் கட்சியில் இணைந்த உமருக்கு நிதி அல்லது வெளியுறவுத்துறை அமைச்சக பதவி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜஹாங்கீர் கான் தரீன் தெரீக் இ இன்சாஃப் கட்சியிலேயே நல்ல வசதியானவர். வங்கதேசத்தில் பிறந்து லாகூர் கிறிஸ்டியன் கல்லூரி, வடக்கு கரோலினா பல்கலையில் படித்த அரசியல்வாதி 2002 ஆம் ஆண்டு முதலாக நாடாளுமன்ற உறுப்பினர். கட்சிக்கூட்டங்கள்,மாநாடு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பதில் திறமைசாலி. ஷிரின் மஸாரி வெளியுறவுத்துறை, பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு நியமிக்கப்படும் திறன்கொண்ட பெண்மணி. இந்தியா ,அமெரிக்கா, ஏன் எதிர்க்கட்சிகளை கருத்துக்களால் நொறுக்கும் முன்னாள் பத்திரிகை ஆசிரியர். இவர்களோடு பர்வேஸ் கட்டாக், ஷா மஹ்மூத் குரேஷி உள்ளிட்டோரும் இம்ரான்கானின் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான்.