இடுகைகள்

முத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சிறைக்கு சென்ற ஆசிரியர், விடுதலையாகி தனது மகன், மகளைத் தேடி அலையும் கதை!

படம்
   சீக்ரெட் ஆப் பியர்ல்ஸ் துருக்கி டிவி தொடர் யூட்யூப் 36 அத்தியாயங்களை தாண்டிப்போனாலும் நாயகனது பிளாஷ்பேக் கதையை சொல்லாமல் இழு இழுவென இழுத்துவிட்டார்கள். அதெல்லாம் கடந்து தொடர் கொஞ்சமேனும் பார்க்கும்படி இருக்கிறதென்றால் அதற்கு துருக்கி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக வரும் நாயகனின் நடிப்பையே அடையாளமாக சுட்டிக்காட்ட வேண்டும். வயதானவரை நாயகனாக வைத்து டிவி தொடர் எடுத்து அதை எப்படி வெற்றிகரமாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அசீம் பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் உடல்மொழி, முக உணர்வு, வசனம் என அத்தனையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அசீம், அவரது மனைவி ஹண்டேவைக் கொன்றதாக குற்றம்சாட்டி சிறையில் பல்லாண்டுகள் தள்ளப்படுகிறார். தண்டனை முடிந்து வரும்போது அவரின் ஆண், பெண் என இருபிள்ளைகளும் அரசு விதிகள்படி காப்பகத்தில் இருந்து தத்து கொடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அசீம் கண்டுபிடிப்பதே மீதிக்கதை. மேற்சொன்ன கதை மட்டுமே வைத்துக்கொண்டாலே கதையை உணர்ச்சிகரமாக கொண்டு செல்லமுடியும். ஆனால் இயக்குநர், அதோடு சேர்ந்து அசீம் தங்கும் மலிவான குறைந்த விலை விடுதியில் நடனக்...

இரண்டாவது முறையாக கால வேட்டையர்களைத் தடுக்கும் பத்திரிகையாளர் குழு - கால வேட்டையர்கள் - 2

படம்
              கால வேட்டையர்கள் நூலில் உள்ள இரண்டாவது கதை....... இதில், புதுமையான பகுதிகளை சுற்றிப்பார்க்க ஆர்வமுடையவர்களை டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று வரவேற்கிறது. அவர்களின் பின்புலங்களை விசாரித்து முடிந்தளவு தனிநபர்களாக இருக்கும்படி பார்த்து சுற்றுலாவிற்கு கூட்டிச்செல்கிறது. இப்படி செல்பவர்கள் எவரும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதில்லை. இதுபற்றி புலனாய்வு செய்ய பத்திரிகையாளர் மீண்டும் மாறுவேடத்தில் சுற்றுலா பயணியாக செல்கிறார். அப்படி செல்லும்போது, பயணத்தில் புதுமணத்தம்பதியாக முதல் கதையில் பார்த்தோமே ஆர்வக்கோளாறு லௌரியும் இருக்கிறாள். அவளுக்கு அந்த பயண பின்னணி தெரியாது. ஆனால் ஒருமுறை பத்திரிகையில் டிராவல்ஸ் விளம்பரத்தை பார்க்கிறாள். அது வினோதமான அறிவிப்பாக இருக்கிறது. மேலும், அதுபற்றி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு செ்ன்று விசாரிக்கிறாள். அங்கு வயதான பெண்மணி தன்னுடைய மருமகள் பயணத்திற்கு சென்றாள். ஆனால் திரும்ப வீடு திரும்பவில்லை என புகார் கொடுத்தபடி நிற்கிறாள். இதுபற்றி விசாரிக்க முற்படுகையில் அவளை குள்ளர்களின் ஆட்கள் சூட்களில் கடத்துவதற்கு நெருங்குகிறார...