இடுகைகள்

இஸ்லாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம்

படம்
            சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம் சீனாவுக்கு, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. குறிப்பாக, ஷின்ஜியாங் என்ற பகுதியில் பெருமளவு உய்குர் இன முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தாலிபன், பிற இஸ்லாமிய பிரிவினைக் குழுக்களோடு தொடர்பு இருக்கிறது என சீன அரசு சந்தேகப்பட்டது. தீவிரவாதம், பிரிவினைவாதம், வன்முறை ஆகியவற்றை அழிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதைத் தொடங்கியது. இதில் ரஷ்யா, கசக்கஸ்தான், உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான் என பல நாடுகள் சேர்க்கப்பட்டன. தீவிரவாத எதிர்ப்பு முகமைக்கான தலைமை அலுவலகம் சீனாவில் அமைக்கப்பட்டது. பிராந்திய அலுவலகங்கள் உறுப்பினர் நாடுகளில் அமைந்தன. தொடக்க காலத்தில் இந்தியாவை இதில் இணைத்துக்கொள்ள சீனா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் ரஷ்யாவின் உறவைப் பெற்று மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பெருக்கிக்கொள்ள நினைத்தது. ரஷ்யா, சீனாவின் அமைப்பில் இந்தியாவை உள்ளே கொண்டு வர நினைத்தது. அன்று பாகிஸ்தான், இரான், மங்கோலியா இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவுடன் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டின. நவீன க...

ஹிஜாப்பை விட பெண்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன! - நூர்ஜெகான் சஃபியா நியாஸ்

படம்
  நூர்ஜெகான் சஃபியா நியாஸ், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன் நூர்ஜெகான் சஃபியா நியாஸ்  நிறுவனர், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன்  நூர்ஜெகான், டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  யுவா எனும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் சேர்ந்து முஸ்லீம் சமூக பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.  1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான வாழிடங்களைப் பெற்றுத்தர உழைத்து வருகிறார். பிஎம்எம்ஏ எனும் அமைப்பை 2007இல் தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் குரல்களை பல்வேறு தளங்களில் ஒலிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.  கர்நாடகத்தில் உருவாகிய ஹிஜாப் பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அங்கு நடைபெறுவது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலதுசாரி இந்துத்துவ தாக்குதல்தான். அங்கு இதுபோல நிறைய பிரச்னைகளை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா ஜிகாத் முதல் குழு படுகொலை வரை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் சமூகத்தை மெல்ல சுவர் நோக்கி தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்பதை எதற்கு தடுக்க...

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் ப...

இஸ்லாமிய நாடாக மாற்றப்பட சிரியா நாடு சிதைக்கப்படுகிறது! - சமர் யாஸ்பெக்கின் நூல்

படம்
                பயணம் சிரியாவின்  சிதைந்த இதயத்தை நோக்கி சமர் யாஸ்பெக் தமிழில் ஶ்ரீதர் ரங்கராஜ் சிரியா நாட்டிற்குள் மூன்றுமுறை சென்று வந்த பத்திரிகையாளரும் சிரிய நாட்டவருமான சமர் யாஸ்பெக் என்ற பெண்மணியின் களப்பணி அனுபவங்கள்தான் நூலாகியிருக்கிறது . சிரியாவில் எப்படி ஜனநாயக ஆட்சி மலராமல் இஸ்லாமிய குழுக்கள் பார்த்துக்கொள்கின்றன , உலக நாடுகள் போரை எப்படி ஊக்குவிக்கின்றன , இதனால் அங்கு அழியும் சுன்னி - ஷியா மக்களின் வாழ்க்கை , அரசுப்படைகளின் தீவிரமான வன்முறை என பல்வேறு விஷயங்களை நெஞ்சை உருக்கும் எழுத்துக்களின் வழியாக பேசுகிறார் எழுத்தாளர் . ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள் , நூஸ்ரா முன்னணி , அல்ஹார் என பல்வேறு மதவாத குழுக்கள் கூட்டணி அமைத்து வெளிநாட்டு வீரர்களை உள்ளே கொண்டு வந்து சுதந்திர குடியரசு படைகளைக் கொன்று அரசு படைகளோடு உள்நோக்கத்தோடு போராடுவதும் , வென்ற பகுதிகளில் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்கள் , அலாவித்துகளை அடித்து விரட்டுவதுமான காட்சிகள் திகிலை ஏற்படுத்துவன . மதவாத அமைப்புகள் எப்படி அறக்கட்டளை வழியாக மக்களின...

இந்தியாவைப் போன்ற மத சுதந்திரம் பாக்.கில் கிடையாது!

படம்
ஆரிஃப் ஆஜாகியா , மனித உரிமைகள் செயற்பாட்டாளர் . பாகிஸ்தானின் சட்டங்கள் மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் ஆரிஃப் . தற்போது வெளிநாட்டில் வசிப்பவர் , தாய்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீற்ல்களைக் கண்டித்துப் பேசி வருகிறார் . பாகிஸ்தானில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசி வருகிறீர்கள் . அங்கு நடைபெறும் முக்கியமான பிரச்னையாக எதனைக் கூறுவீர்கள் ? அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்கள் , செய்திகள் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை . ராணுவத்தின் சொல்படி நடப்பவர்தான் அங்கு பிரதமராக முடியும் . பாக் . ராணுவம் சிந்து , பலுசிஸ்தான் , கைபர் பக்துன்காவா ஆகிய பகுதிகளில் கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளனர் . அங்கு சுதந்திரமாக பேசுவது கூட குற்றமாக கருதப்படுகிறது . குழந்தை தொழிலாளர்கள் , கொத்தடிமை முறை , பாலியல் தொழில் , குழந்தைகளின் மீதான வன்முறை ஆகியவை பாக்கில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது . மசூதிகளிலும் மதராசாக்களிலும் இதுபோன்ற அநிதீகள் நடந்தாலும் , அவை இன்னும் கண்டுகொள்ளப்படவிலைல . பாக்கில் சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள் ந...