பெண்களுக்கான தொழில், பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம் பற்றி கேள்வி கேட்கும் வரலாற்று சீனத்தொடர்!
நியூ லைப் பிகின்ஸ் சீன தொடர் ஆறாவது இளவரசர், தனது துணைவியை அதிகாரப்பூர்வ மனைவியாக மாற்றிக்கொள்ள என்னென்ன செய்கிறார், அவரது துணைவியின் திறமைகள் எப்படி இளவரசரின் நிர்வாக பணிகளுக்கு உதவியாக உள்ளன என்பதே கதை. பொதுவான சீன தொடர்களில் ஆண்கள், பெண்களை காதலுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இந்த தொடரில் வரும் இளவரசர் பாத்திரம் தனது மனைவியை அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார். அவரது மனைவியும், கணவரின் அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. அதேசமயம், பெண்களுக்கான வேலை, சுயமரியாதை, முன்னேற்றம் என்பதில் தன் அம்மாவிடம் கற்றுக்கொண்டதை ஷின் மாகாணத்தில் செயல்படுத்துகிறார். இந்த கதை நடக்கும் காலகட்டத்தில் ஷின் மாகாணம், பிற ஒன்பது மாகாணங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு. அன்றைய காலகட்டத்தில் பெண்களை சந்தைப்பொருளாக அரசியலில் பயன்படும் காய்களாக மக்கள் எண்ணினர். இதனால், பிற மாகாண மக்கள் தங்களது செல்வாக்கு, அதிகாரத்திற்காக இளம்பெண்களை மனைவி அந்தஸ்தில், அல்லது அதிகாரப்பூர்வ மணமின்றி துணைவியாக இருக்க அனுமதித்தனர். இது சமூகத்தில் உள்ள ஆண்களின் மேலாதிக்க வெறிக்கு