இடுகைகள்

ஃபுளோரிடா மேன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்கர்களை மகிழ்வித்த ஃபுளோரிடாமேன்! - உண்மையா - பொய்யா?

படம்
es.sott.net தெரிஞ்சுக்கோ! அமெரிக்காவில் இணையம் புகழ்பெறத்தொடங்கிய காலகட்டம். உள்ளூர் பத்திரிகைகள் செய்த காரியம், பத்திரிக்கை துறையையே மாற்றியது. இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம் உருவாக்கியது. புளோரிடா மேன் நாயை கிளப்பில் அனுமதிக்காததால் போலீசை அழைத்தார், மருத்துவமனையை கொளுத்தினார் என்கிறரீதியில் செல்லும் செய்தி மக்களுக்கு எதிர்பார்த்த சுவாரசியத்தைத் தந்தன. ஆனால் மலினமான பத்திரிக்கை செயல் என பின்னர் விமர்சிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் உணர்ச்சிவசப்பட்ட, மனநிலை சீரற்ற தன்மை கொண்டதும் இதற்கு காரணம். அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தில் மட்டுமே மனநலம் சார்ந்து செலவழிக்கும் தொகை குறைவு - 36 டாலர்கள் மட்டுமே செலவழிக்கின்றனர். இங்கு அனுமதிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகம். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஃபுளோரிடா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இங்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான அலிகேட்டர் வகை முதலைகள் உண்டு. நன்றி: க்வார்ட்ஸ்