இடுகைகள்

பிளாண்டே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோருக்கு நீதிவேண்டி பெண்களை கொலை செய்யத் தொடங்கிய சீரியல்கில்லர்- ஸ்டானியாக்

படம்
  போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டானியாக், அவரது சிறுவயது வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பெற்றோர், தங்கை ஆகியோர் காரில் சென்றபோது இன்னொரு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். குடும்பத்தின் மீது பாசம் வைத்திருந்த ஸ்டானியாக், மனம் உடைந்து போனார். போலந்து நாட்டின் நீதித்துறையும் ஊழலுக்கு அடிபணிந்ததுதான். அங்கேயும் நீதிதேவதையை   பாண்டேஜ் வகையில் ஆதி தொழிலுக்கு அனுப்பிவிட்டார்கள். ஸ்டானியாக்கின் பெற்றோரைக் கொன்ற வாகனத்தை ஓட்டி வந்தவர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் அல்லது தொடர்புகளை வைத்திருந்தவர். விமானப்படை கேப்டன் மனைவி. நீதித்துறை காசுக்கும் செல்வாக்குக்கும் எப்போதும் அடிபணியும் என்ற வாக்கு மீறப்படவில்லை. அவரை குற்றவாளி இல்லை என விடுவித்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரின் தலைமுடி பொன்னிறமாக இருந்தது. அதை மனதில் குறித்து வைத்துக் கொண்டவர், படித்து முடித்து வேலை தேடினார். அரசு அமைப்பில் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்தது. அங்கு சில ஆண்டுகள் வேலை செய்து எப்படி பெற்றோரின் சாவுக்கு நீதியைப் பெறுவது என யோசித்தார். அதற்கு செய்யவேண்டிய முதல் வேலை, அரசு நாளிதழுக்கு