இடுகைகள்

தொழில்முனைவோர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா

படம்
  மலோபிகா பானர்ஜி எம்ஜே  பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர் மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.  உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.  உங்களின் ரோல்மாடல் யார்? என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.  மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு பிடித்தமானது. இது உடலையு

உங்களைச் சுற்றியே ரோல்மாடல்கள் நிறையப் பேர் உண்டு! பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா

படம்
  பெனு சேகல், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் பெனு சேகல் இயக்குநர், ஃப்ரீபோர்ட் ரீடெய்ல் இந்தியா பெனு, 23 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ஆம்பியன்ஸ், டிஎல்எஃப் யுடிலிட்டிஸ், இன்டர்நேஷனல் ரீகிரியேஷன் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர். ரீடெய்ல் துறையில் விநியோகம், வணிக முறை, இடங்களை வாடகைக்கு பிடிப்பது என பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.  உயிரிதொழில்நுட்பத்தில் முதுகலை படித்துள்ளவர், மனிதவளத்துறை நிர்வாகத்திலும் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளார். அவரிடம் பேசினோம்.  ரீடெய்ல் தொடர்பான வணிகத்தை எப்படி கையில் எடுத்தீர்கள்? தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்லுவார்கள். இந்த இயல்பு நம் அனைவருக்குள்ளும் இருக்கும். சிலர் தொடக்கத்திலேயே இதை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறர் இந்த தீப்பொறியை வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.  வணிகம் என்பது எனக்குத் அப்படித்தான் வந்தது. இத்தனைக்கும் நான் முதுகலை படித்தது உயிரி தொழில்நுட்பம் மற்றும் வேதியியல் தான். ஆனால், நான் என் வேலைவாய்ப்பை அதில் தேடவில்லை. கல்லூரியில் மாணவர்களின் தலைவராக இருந்தவ

பெண்களை தொழில்முனைவோராக்கும் அங்கிதி போஸ்!

படம்
  அங்கிதி போஸ் அங்கிதி போஸ் தொழில்முனைவோர், ஸில்லிங்கோ 2015ஆம் ஆண்டு. அங்கிதிக்கு வயது 23. அப்போதுதான் தனது வேலையை விட்டு விலகி தனக்கென தனி வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.ஸில்லிங்கோ என்பதுதான் அதன் பெயர்.  வணிக நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் இது.  சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வணிக ரீதியான பிரச்னை ஏற்பட்டு வந்த சமயம். பாங்காக் சென்றிருந்தார் அங்கிதி. அங்கு சிறு, குறு வணிகர்கள் தங்களுக்கென இணையநிறுவனங்களே இல்லாமல் வேலை செய்து வந்தனர். அவர்களின் பொருட்களை இணையத்தில் வாங்க முடிந்தால் இன்னும் எளிதாக வருமானத்தை அவர்கள் பெறலாம் என அங்கிதி நினைத்தார்.  இதற்காக துருவ் கபூருடன் சேர்ந்து ஸில்லிங்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க வணிகர்கள் சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதை கைவிட்டு வேறு நிறுவனங்களை தேடி வந்தனர். இந்த நேரத்தில் தெற்காசியாவில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்தன. ஆன்லைனில் இந்த  நிறுவனங்கள் இருந்தால் எளிதாக வணிக வாய்ப்பை பெற்றிருக்க முடியும். இதற்கான பல்வேறு கட்டமைப்புகளை, வசதிகளை அங்கிதி, வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க தொடங்கினார்.  இந்தோனேஷி

பெண்கள் தங்கள் கனவை எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது! ஃபர்கா சையத், ஃபேஷன் டிசைனர்

படம்
  ஃபர்கா சையத் ஃபேஷன் டிசைனர் சிறுவயதிலிருந்து பொம்மைகளுக்கு துணிகளை பொருத்திப் பார்த்து தைத்துக் கொண்டிருந்தவர், இன்று ஃபேஷன் டிசைனராக மாறியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லைதான். சிறிய நிறுவனமான தனது தொழிலைத் தொடங்கியவர் இன்று எஃப் எஸ் குளோசட் என்ற நிறுவனமாக வளர்ந்திருக்கிறார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது ஃபேஷன் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஃபர்கா.  தனது திறமையால் இன்று இந்தி திரைப்பட உலகிலும் நுழையவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  ஃபேஷன் டிசைனிங் துறைக்குள் வர உங்களைத் தூண்டியது எது? எனக்கு சிறுவயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் இருந்தது. எனது டிசைன் சார்ந்த வணிகத்தை 2018இல் தொடங்கினேன். எனக்குப் பிடித்ததை சரியாக செய்யவேண்டும் என்பதுதான் லட்சியம். எனது பிராண்டை பிரபலப்படுத்த நான் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். இன்று என்னுடைய பிராண்ட் பலருக்கும் தெரியும் விதமாக மாறியிருக்கிறது.  இத்துறையில் உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்? சிக்கலான சவால்களை சமாளித்து தங்களை காத்துக்கொள்ள முன்னிலைப்படுத்திக்கொள்ள போராடும் அனைத்து பெண்களுமே எனக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தான். அவர்கள் த

ஃபோர்ப்ஸ் 30 / 30

படம்
ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெறுவது என்பது பலரின் கனவு.  இதில் ஆசியாவைச்சேர்ந்த முப்பது முன்னோடி தொழில்முனைவோர் இடம்பெற்றுள்ளனர். 23 நாடுகளிலிருந்து வந்த 2000 விண்ணப்பங்களிலிருந்து 300 பேர்களைத்தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் சிலரைப் பார்ப்போம். லியு லியுவான்(29), லியாவோ வென்லாங் (29)(கவாரோபாட், சீனா) தானியங்கி தொழில்நுட்பம்தான் லியு, லியாவோவின் ஐக்யூ சொத்து. 2015 ஆம் ஆண்டு கார்களை தானியங்கி முறையில் உருவாக்க முயற்சித்தவர்களுக்கு கைகூடியது சூட்கேஸ்தான். ஆம் சூட்கேஸை நீங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இழுத்து வருகிறீர்கள் அல்லவா? இனி அது தேவையில்லை. அதுவே உங்களை ஃபாலோ செய்யும். தொந்தி அங்கிள் இடிக்கிறா, மயிலாப்பூர் மாமி தடுக்கிறாரா அத்தனையையும் ரோவர் சூட்கேஸ் சமாளித்து உங்களை பின்பற்றும். சீனாவில் 800 டாலர்களுக்கு விற்கும் இந்த சூட்கேஸ் வெளிநாடுகளில் 66 டாலர்கள் அதிகமாக சேல்ஸ் ஆகிறது. 12 ஆயிரம் சூட்கேஸ்களை விற்று சாதனை செய்தவர்கள் அதோடு நிற்கவில்லை. அடுத்து ட்ரக்குகளை தானியங்கி முறையில் செயல்படுத்தி விற்கத் தொடங்கிவிட்டனர். 50 ட்ரக்குகளை விற்றவர்கள், தானியங்கி பயணிகள் கா