இடுகைகள்

காரணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுவயது குற்றங்களுக்கான காரணம்- பிறப்பா?, வளர்ப்பா?, சமூக அழுத்தங்களா?

படம்
    அசுர குலம் 5 ஆங்கில நாளிதழ்களில் கூட சைக்கோபதி குற்றவாளிகளைப் பற்றி போகிற போக்கில் பொதுவான சில கருத்துகளை கூறிச்செல்வார்கள். அதாவது அதில் வரும் துண்டு துண்டான காமிக்ஸ் பகுதிகளில் இதைக் காணலாம். இப்படி தவறாக கூறுவது, பதிவாக மாறிவிடுகிறது. சைக்கோபதி நபர்களை இந்த முறையில் கீழ்மையாக வகைப்படுத்துவது தவறு. சிறுவயதில் ஏற்படும் வறுமை, பாலியல் இன்பத்திற்காக வல்லுறவு செய்யப்படுவது ஆகியவை அவர்களை மடை மாற்றுகிறது. மனதை உடைக்கிறது. இப்படி உடைபடும் மனம் வழிகெட்டு போகிறது. பின்னர் அது சரியான போக்கிற்கு திரும்புவது கடினம். மூளையின் திறன் குறைந்துபோகிறது. தங்கள் மேல் எழுப்பும் கேள்விகளுக்கு வன்முறையாலே பதில் தர முயல்கிறார்கள். மன அழுத்தம், போதை மருந்து பயன்படுத்துவது, தற்கொலை முயற்சி ஆகியவையும் அதிகரிக்கிறது. பிறகு கொள்ளை முயற்சி, வன்முறைத் தாக்குதல் என சீர்திருத்தப் பள்ளி, காப்பகம் செல்லச் செல்ல குற்றங்களை செய்வதில் நுட்பமான தேர்ச்சியை பெறுகிறார்கள். பிறகு அவர்கள் சமூகத்தின் விதி என்பதற்குள் வரவே மாட்டார்கள். அவர்களின் உலகம் தனியாக மாறிவிடுகிறது. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஆறரை வயது சிறும

வாசனை காணாமல் போகிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் மூக்கிற்கு வரும் வாசனை என்னாகிறது? நாம் சாக்லெட் பர்ப்யூம் அணிந்த அழகியைச் சந்திக்கிறோம். அவர் நம்மிடம் பேசிவிட்டு சென்றவுடன் சில நிமிடங்களில் அந்த வாசனை அழிந்துவிடுகிறது. நினைவில் மட்டும் அந்த வாசனை நீடித்திருக்கும். அதற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம். மூக்கின் நுகர்வு எல்லைக்கு, அந்த வாசனை தட்டுப்படாத தற்கு, வாசனை மூலக்கூறுகள் காற்றிலிருந்து அழிந்துபோனதே காரணம். அழுகிய முட்டை, சல்பைடு தன்மை கொண்டது என்பதால் காற்றுடன் வினைபுரிந்து தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. அனைத்து வாசனைகளும், அதன் மூலக்கூறுகளும் இப்படியானவை அல்ல. நன்றி- சயின்ஸ் ஃபோகஸ்