இடுகைகள்

தெலுங்கு சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர் பார்த்து வைத்த அமெரிக்க மாப்பிள்ளையை கைவிட்டு ஓடும் இளம்பெண்ணின் பயணம்!

படம்
  சசிரே கா பரினாயம் இயக்கம் – கிருஷ்ண வம்சி இசை – மணிசர்மா – வித்யாசாகர்   தருண், ஜெனிலியா   ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு   சொந்த ஊரில் திடீரென கல்யாணம் உறுதியாகிறது. புஜ்ஜம்மா எனும் சசிரேகாவுக்கு யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை. டௌரியாக 20 லட்சம் பேசி நடக்கும் பஞ்சாயத்தில் கலவரமாகிறது. இதனால பயந்துபோன சசி, கல்யாண வீட்டில் இருந்து தப்பியோடுகிறார். அவருக்கு இளைஞர் ஆனந்த் உதவுகிறார். இருவரது வாழ்க்கையும் என்னவானது, ஓடிப்போன பெண்ணை பெண்ணின் அப்பா பிடித்தாரா, டௌரி பஞ்சாயத்தில் அவமானப்பட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வன்மதை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதே கதை.   கிருஷ்ணவம்சி படம் தெலுங்கு பெருமை. விஜயவாடாவின் அருமை,பெருமை புகழ். தெலுங்கு கல்யாண சடங்குகள், அதன் மகத்துவம் என படம் கலாசார வழியில் பயணிக்கிறது. படத்தில் நம்மை நெகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக நிறைய காட்சிகள் உள்ளன. பெற்றோர் பிள்ளைகளோடு எந்தளவு மனம்விட்டு பேசவேண்டும், அதுவும் திருமணம் என்ற விஷயத்தில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதை இரண்டரை மணி நேரத்தில் சொல்கிறார்கள். மணிசர்மா,

அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003

படம்
  சத்யம் சுமந்த் அக்கினேனி படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.  படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.  சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் நடைமுறை வாழ்க்க

ஐஏஎஸ் சா, அப்பாவா முடிவெடுக்க தடுமாறும் மகன்! - போருகாடு -2008

படம்
  போருடு 2008 அப்பா ரௌடி, மகன் குடிமைத்தேர்வில் வென்று நேர்காணலுக்கு செல்லவிருக்கிறார். இதுவே பொங்கலுக்கு வடகறி போல இருக்க, அவர்கள் வாழும் நகரில் உள்ள இரு மாஃபியா குழுக்களுக்கு இடையில் தகராறு. இதில் ஒரு குழுவில் நாயகனின் அப்பா இருக்க, வேறு என்ன நடக்கும்? அப்பாவுக்காக மகன், மகனுக்காக அப்பா என பாசம் ஆவேசம், ஆக்ரோஷத்தை வளர்க்க படம் 2.30 நிமிடம் ஓடுகிறது.  படத்தில் முக்கியமானது அப்பாவுக்கும், மகனுக்குமான பாசம் நேசம் முரண்பாடுகள்தான். அப்பாவைப் பொறுத்தவரை தான் ஆதரவின்றி நிற்க, தன்னை பாதுகாத்து வளர்த்த நாயக் தெய்வம். எனவே, சுயமாக அறியாமலேயே நாயக்கின் சட்டவிரோத விஷயங்களுக்கு துணையாக நிற்கிறார். அப்பா பாண்டுவுக்கு விசுவாசம் முக்கியம். அவருக்கு மகன் படித்து வேலைக்கு எதற்கு போகவேண்டும்? தன் அருகில் இருந்தாலே போதும் என நினைக்கிறார். ஆனால் மகன் அஜய்யைப் பொறுத்தவரை அப்பா மீது பாசம் உண்டு, அக்கறை உண்டு. ஆனால் அவரின் முதலாளி மீது கிடையாது. அவரின் செயல்பாடுகளை அஜய் இறுதிவரை ஏற்பதும் இல்லை.  ஐஏஎஸ் நேர்காணலுக்கான பயிற்சியில்... தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு அதை பகுதிநேரமாக மாணவர்களுக்கு சொல்லித்தருவதே அஜ

ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ

படம்
  இதே கோல்ட் இஹெ இயக்கம் - வீரு போட்லா இசை - சாகர் மகதி தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை.  படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது  சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான்.  அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோசிக்கும் வகையில் நி

சொந்த சாதி மாப்பிள்ளை கிடைத்தாரா- எவரிக்கி செப்போது படம் எப்படி?

படம்
எவரிக்கி செப்போது - தெலுங்கு இயக்கம் பசவா சங்கர் ஒளிப்பதிவு - விஜய், தேஜா, சத்யஜித் இசை - சங்கர் சர்மா கதை - சாதிதான். உடனே நிமிர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். நாங்களும் அப்படித்தான் ரியாக்ஷன் கொடுத்தோம். முதுகெலும்பை உடைத்து விட்டார்கள். ஆஹா நாயகி ஹாரதி - கார்கேயி யெல்லப்பிரகடா. படம் முழுக்க இவர் கொடுக்கும் ரியாக்சன்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பிரமாதப்படுத்தி இருக்கிறார். காதலனை பொது இடத்தில் சாதிகேட்டு கத்துவதும், தன் சாதியில்லை என்றதும் லவ் செஞ்சால் டைம் வேஸ்ட் என பேசும் வசனத்தில் முத்திரை பதிக்கிறார். இதற்கு இணையாக ஹரி - ராகேஷ் நடித்திருக்கிறார். காதலி ஒவ்வொரு முறை கோபத்தில் எரிமலையாகும்போதும் அன்டார்டிக் ஐஸாக குழைந்து பேசி கூல் செய்து நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக கதையை நடத்தி செல்பவர் ஹாரதியின் தந்தை. சாதிப்பித்து பிடித்தவராக, மகளின் பள்ளி நண்பர்களை கூட சொந்த சாதியில் தேடச்சொல்லி மிரட்டுகிறார். ஐயையோ கதைதான். கான்செஃப்டை நன்றாக பிடித்தவர்கள், அதை சொல்லும்போது இப்படியா இழுப்பது. படம் பார்க்கும்போது நாலு லைட்ஸ் பற்ற வைத்து விட்டு வந்தால

கனவில் கொலை - துரத்தும் கொலையாளிகள்- 118 சாகச அனுபவம்!

படம்
118 - தெலுங்கு சினிமா இயக்குநர் - கே.வி. குகன் ஒளிப்பதிவு - இயக்குநரே இசை - சேகர் சந்திரா மருத்துவ மாஃபியா ஒரு இளம்பெண்ணை கொலை செய்து புதைக்கிறது. அதனை எப்படி இளம் சரி வேண்டாம் வாலிப வயது பத்திரிகையாளர் உலகத்திற்கு தெரிய வைக்கிறார் என்பதுதான் கதை. தந்தியில் எழுதிவிடும் கதைக்கருதான். ஆனால் எடுத்த விதம் படத்தை அட்டகாசப்படுத்துகிறது. திரில்லர் படத்திற்கான உயிர் எதில் உள்ளது ஒளிப்பதிவில்தானே? கே.வி. குகன் சமரசமின்றி அதற்காக உழைத்திருக்கிறார். 118 என்ற பாரடைஸ் ஹோட்டல் ரூம்தான் கதைக்களம். அங்கு தங்குபவர்களுக்கு குறிப்பிட்ட நாளன்று ஒரு கனவு வருகிறது. மற்றவர்கள் சாதாரணமாக விட்டுவிடலாம். பத்திரிகையாளர் சும்மா இருப்பாரா? நந்தமூரி கல்யாண் ராம் முதல்முறை விட்டுவிடுகிறார். ஆனால் இரண்டாம் முறை விழித்துக்கொண்டு துப்புதுலக்குகிறார். கூடவே அவரது காதலி, மாமா உதவுகிறார்கள். அப்போதுதான் மரபணுவை மாற்றி சோதனை செய்யும் குழு பற்றி கண்டுபிடிக்கிறார்கள். அதற்குமுன்னே அவர்கள் கல்யாண்ராமை போட்டுத்தள்ள முடிவெடுத்துவிடுகிறார்கள். யார் ஜெயித்தார்கள் என்பதே கதை. இயக்குநராகவும் , ஒளிப

வித்தியாசமான ஆனால் டல்லான திரில்லர் படம் - சந்தீப் கிஷன் சூப்பர்!

படம்
நின்னு வீடானி நீடானு நேனே - தெலுங்கு இயக்கம்- கார்த்திக் ராஜூ ஒளிப்பதிவு பிகே வர்மா இசை தமன் எஸ்எஸ் தேறுவது சந்தீப் கிஷன் - அன்யா சிங்கின் காதல், சண்டை எல்லாமே குஷி மூடுக்கு மனசை மாத்துது. ஆனால் கண்ணாடி குறுக்கே வர எல்லாமே மாறுது. இசையும் ஒளிப்பதிவும் அசத்தலாக இருக்கு. ஆனா எங்கே பிரச்னை? கார்த்திக் ராஜூவோட கதையிலதான். எரிச்சல் கதையில் ஹீரோ செய்யறக்கு ஏதாவது காரியம் இருக்கும். இதில் அவர் தான் ஏன் இறந்தோம் எப்படி இறந்தோம்னு கண்டுபிடிக்கிறார். அது குத்தம் இல்ல. ஆனால் பார்க்கிறவங்க பொறுமைய சோதிச்சா எப்படி? பாசம் இருந்தாலும் இன்னொருத்தரோட உடம்பில் தன் மகன், மகள் இருக்கிறார் கிறாள்ங்கிறதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஒருத்தரோட பேருங்கிறது வெறும் சவுண்டு மட்டும் கிடையாது.அவரோட உருவமும் உடனே உங்களுக்கு ஞாபகத்துக்கு வரும் இல்லியா. அந்த இடம் அவுட்டு. இன்னொன்னு, ஹீரோ தன் காதலியோட பிறந்த நாளைக்கூட கொஞ்சம் அட்வென்சரஸ்ஸா அவரைக் கடத்தி கட்டிப்போட்டு நீச்சல் குளத்தில் தூக்கி வீசி கேக்கு வெட்டி கொண்டாடுறார். இந்த மனநிலையில் உள்ளவரால ஏற்படுற விபத்துதான் கார் விபத்து. இதை நின

கிளிஷேக்களிலிருந்து வெளியே வாங்க தேஜா - சீதா(தெலுங்கு)

படம்
சீதா தெலுங்கு தேஜா ஒளிப்பதிவு சிர்ஷா ரே இசை அனுப் ரூபன்ஸ் ஆஹா! வாழ்க்கையில் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நம்புகிற பெண், மனிதர்கள் அதைவிட முக்கியம் என உணருவதுதான் கதை. இதில் இப்படத்தில் தேறுவது சோனு சூட், காஜலின் நடிப்புதான். பெல்லக்கொண்டம் சீனிவாஸ், ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வந்து போகிறார். சோனு சூட், அவரின் அடியாட்களாக வந்து பாடலாகப் பாடும் நடிகர், உதவியாளராக வரும் கணேஷ் ஆகியோர் பிரமாதப்படுத்துகிறார்கள். காஜல் முதல் காட்சியிலிருந்து அட்டாகப்படுத்துகிறார். இசையில் அனுப் ரூபன்ஸ் தன் பங்குக்கு கோயிலம்மா பாடலில் அசர வைக்கிறார். அடச்சே! தேஜாவின் நாயகன், எப்போதும் ஏதோவொன்றை தள்ளி உடைத்து தன் பலத்தை நிரூபிப்பார். நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜீப்பை ஆற்றில் விழுவதிலிருந்து ராணா காப்பாற்றுகிற காட்சி நினைவுக்கு வருகிறதா? அதேதான். இங்கு சீனிவாஸ் அதை அப்படியே மாற்றி பாத்ரூம் கதவை உடைக்கிறார். பஸ் சீட்டைப் பிடுங்குகிறார். கியர் ராடை அசைத்து உடைத்து எடுக்கிறார். இது படத்தின் கதைப் போக்குக்கு எந்தளவு உதவுகிறது. படம் பார்த்த எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தேஜா சார் கிளிஷே

அமைதிதான் வேண்டும் - ரத்தம் தெறிக்க அகிம்சை படம் -அரவிந்த சமேத

படம்
அரவிந்த சமேத வீரராகவ (தெலுங்கு) திரிவிக்ரம் பிஎஸ் வினோத் தமன் எஸ் எஸ் தன் அப்பாவைக் கொன்ற எதிரிகளை அடக்கி ஊரில் அமைதி நிலைநாட்டுவதுதான் நாயகனின் லட்சியம். சாதித்தாரா என்பதுதான் கதை. சூப்பர்! கதை, கரம் மசாலாவிற்கானதுதான். ஆனால் திரிவிக்ரம் தன் பாணியில் அதைக் கையில் எடுத்து அக்கறையாக வசனங்களை எழுதி பாசத்தை நேசத்தை பார்க்கும் அனைவரின் மனதிலும் விதைத்துள்ளார். பாடலுக்கு மட்டும் வரும் நாயகின கதாபாத்திரத்தையும் வலுவாக உட்கார வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தில் வலுவாக பெண்கள் தாங்கி நிற்பதை படமெங்கும் உணர முடிகிறது. மற்றபடி நிலக்கிழார் பெருமை பேசும் படம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அமைதிக்காக தன்னை தாழ்த்தி அமைதி சந்திப்பில் கைகளை உயர்த்துவது, தந்தை கண்ணெதிரே இறப்பதைப் பார்த்து நொறுங்கி மீள்வது என என்டிஆர் நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்பு. அடித்து நொறுக்கியுள்ளார். நானாக்கு பிரேமதா, ஜனதா காரேஜ் படத்திற்குப் பிறகு அவரது கேரியரில் இது சிறந்த படம்தான். ஐயையோ! முதல் காட்சியில் தெறிக்கும் ரத்தம்தான் இது தெலுங்குப்படம் என நினைவூட்டுகிறது. மற்றபடி

சிறுபிள்ளைத்தனமான காமெடி - ரசிக்கலாம் பாஸ் ஆராயாதீங்க!

படம்
சில்லி ஃபெலோஸ் இயக்கம்: பீமனேனி ஸ்ரீனிவாச ராவ் கேமரா: அனிஸ் தருண்குமார் இசை: ஸ்ரீவசந்த் வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன் படத்தின் தெலுங்கு ரீமேக். அலரி நரேஷ்(வீரபாகு), சுனில்(சூரி) இருவரின் அட்டகாச கெமிஸ்ட்ரியில் படம் காமெடியில் கொடி கட்டுகிறது. ஜாக்கெட் ஜானகி ராமன் எம்எல்ஏவின் வலதுகரமான அலரி நரேஷ், செய்யும் அலப்பறைகள்தான் படத்தை ரசிக்க வைக்கின்றன. இலவச திருமணம், பத்து லட்சம் வாங்கி போலீஸ் வேலை வாங்கித் தருவது என செய்யும் உல்டா புல்டா வேலைகளால் சுனில், சித்ரா சுக்லா ஆகியோர் பரம வெறியாகி இவரைத் துரத்துவதே கதை. ஜாக்கெட் ஜானகி ராமனாக, ஜெயப்பிரகாஷ் ரெட்டி பின்னி எடுத்திருக்கிறார். புஷ்பாவாக, நந்தினிராய் கிரிப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி படம் முழுக்க புஷ்பாவிடம் கையெழுத்து வாங்க முயற்சிக்கும் சுனிலின் காமெடி கைவரிசை பின்னி எடுக்கிறது. சித்ரா சுக்லாவை என்ன செய்வது என இயக்குநருக்கும் தெரியவில்லை நமக்கும் தெரியவில்லை. பாடல்கள் கடனே என்று கடக்கின்றன. சீரியசா, காமெடியா என அவரும் முழிக்கிறார். லாஜிக் மறந்து ஜாலியாக ரசிக்கலாம். -கோமாளிமேடை டீம்

தோத்தவன் ஜெயிச்சா அது வெற்றி அல்ல வரலாறு! - சித்ரலஹரி விமர்சனம்!

படம்
சித்ரலஹரி கிஷோர் திருமலா ஜேகே தேவி ஸ்ரீ பிரசாத் பிடித்தது சாய் தரம் தேஜ், கல்யாணி, நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நம்பிக்கையான நடிப்பு. பொசனேனி கிருஷ்ணாவின் அசலான நடிப்பு. சுனிலின் காமெடி டிஎஸ்பியின் சூழலுக்கு ஏற்ற நடிப்பு அசத்தல் கிஷோர் திருமலா இப்படத்திற்காக எழுதிய வசனங்கள் அனைத்துமே பிரமாதம். வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாத ஒருவனின் விரக்திதான் ஒன்லைன். இதை வைத்தே அவன் வாழ்க்கை எப்படி பிறரால் கணிக்கப்படுகிறது என்பதை இந்தளவு ஆழமாக சொல்ல முடியும், அதற்கு பிரபலமான நடிகரான சாய் தரம் தேஜை ஒப்புக்கொள்ள வைத்து நடிக்க வைக்க முடியும் என்பதையே நம்ப முடியவில்லை. வசனம், காட்சி அமைப்புகள் என ஒவ்வொரு பிரேமும் இயக்குநரின் பெயர் சொல்ல வைக்கிறது. அடுத்து, இளையராஜாவின் பக்தரான டிஎஸ்பியின் இசை, கொண்டாட்டமோ, துயரமோ அவ்வளவு பாந்தமாக இழைகிறது. காதலில், பிரேம வெண்ணிலா தாலட்டல் சொக்க வைக்கிறது. வெண்ணிலா கிஷோர் கஞ்சப்பிசினாறி தமிழனாய் நடித்து பின்னியிருக்கிறார். பத்து நிமிடங்கள்தான் படத்தில் வருகிறார். கிடைத்த கேப்பில் ரசிக்க வைப்பது அழகு. கவனிங்க ப்ளீஸ்!

குற்றவாளி காக்கிச்சட்டை - கவச்சம் எப்படி?

படம்
கவச்சம் (தெலுங்கு) இயக்கம்: ஸ்ரீனிவாஸ் மாமில்லா ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு எஸ்எஸ். தமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய், நேர்மையான போலீசாக இருக்கவேண்டும் என்பதுதான் அவரின் அம்மாவின் ஆசை. அவரின் அப்பாவும் போலீஸ்தான். சாதாரணமாக ரிவைவ் இரண்டு லிட்டர் குடித்தது போல படத்தில் உலாவும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸூக்கு இது போதாதா?  யெஸ். படம் பார்க்கும் நமக்கும் வில்லன்களை அடிக்கும்போதே நவ துளைகளின் வழியாக ரத்தம் வழிகிறது. கதைக்கான முக்கியத்துவத்தை கைவிட்டு ஹீரோவுக்கு ஆரத்தி எடுப்பதிலேயே முழுப்படமும் நாசமாக போய்விட்டது.  விஜய், வேலை பார்க்கும் ஸ்டேஷனலில் சின்டகாயலா ஆவேசம் அவரின் உயரதிகாரி. ஆனால் அனைத்துக்கும் கமிஷன் பார்ப்பதில் வேகமாக இருக்கிறார். விஜயின் ஹானஸ்ட் வேகத்தை தடுக்க மாட்டேன் என்று கூறி, அதற்கான கிரடிட்டை தனக்கு கொடுக்க வற்புறுத்துகிறார். விஜய், சரி நல்லது நடந்தால் போதும் என அதையும் ஏற்கிறார்.  இதுவே ஒப்பனிங் பாடலோடு இருபது நிமிடமாச்சே! ஹீரோயின் எங்கப்பா என்றால் காஜல்(சம்யுக்தா சக்சேனா) ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகிறார். மாலில், தொலைந்த பர்சை எடுத்துக்கொடுத்த

லேடீஸ் டெய்லரின் சில்மிஷங்கள்? காமெடி காப்பாற்றுகிறது.

படம்
mirchi 9 ஃபேஷன் டிசைனர் S/o லேடீஸ் டெய்லர் இயக்கம் வம்சி ஒளிப்பதிவு நாகேஷ் பானெல் இசைமணிசர்மா கோதாவரி ஆற்றுப்புறம் உள்ள கிரியேட்டிவ் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட் என்றால் என்ன புரிகிறது? அதேதான். சூப்பர் டெய்லர். பெண்கள் மிட்ஷாட், லாங் ஷாட், குளோசப் என கண்களால் பார்த்தே பெண்ணுக்கு உடை தைத்து அசத்துவது கோபாலத்தின்(சுமந்த் அஸ்வின்) ஸ்டைல். என்னதான் திறமையிருந்தாலும் கிராமத்தில் அதற்கென்ன மரியாதை இருக்கப்போகிறது? நானெல்லாம் அமெரிக்காவில் இருக்கவேண்டியன்டா பண்டு என நண்பனை இம்சிக்கிறார் கோபாலம். ஒருகட்டத்தில் ஜோசியரைப் பார்க்க, அவர் தொழிலில் ஜெயிக்க முடியுமோ இல்லையா பெண்கள் மேட்டரில் நீ கில்லி.மன்மத ரேகை உன்கையில் ஓடுது என உசுப்பிவிட கதை வேகமெடுக்கிறது. sulekha கோபாலம், மன்மதரேகையை சோதிக்க நினைக்கிறார். காசுள்ள பார்ட்டி கிராமத்தில் யார் என டாப் 10 லிஸ்ட் போட அதில் அம்முலு (மானசா ஹிம்வர்ஷா)முதலில் வந்து நிற்கிறார். இருமுறை பாத்ரூமுக்கு போய் எட்டிப் பார்த்து, ஒருமுறை லேசர்லைட்டை முகத்தில் அடித்தால் வராதா லவ்வு நீங்களே சொல்லுங்கள்? ஆனால் அதற்குப்பிறகு காவராஜூவி