இடுகைகள்

ரோபோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையின் கட்டளைக்கு ரோபோக்கள் பணிந்தால்...

படம்
  மூளையின் கட்டளைக்கு பணியும் ரோபோ! ஸ்விட்சர்லாந்து நாட்டின் தொழில்நுட்ப மையம் (EPFL), செயல்பட்டு வருகிறது. இதிலுள்ள  இரண்டு குழுக்கள்  மூளையின் கட்டளைக்கு ஏற்ப, ரோபோக்கள் செயல்படும் ஆய்வை செய்துவருகிறார்கள். இந்த ஆய்வில் கிடைக்கும் முடிவுகள், கை, கால் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு (Tetraplegic) உதவும்.  மனிதர்களின் மூளையில் உருவாகும் மின்தூண்டல்களுக்கு ஏற்ப ரோபோக்களை செயல்பட வைக்க முயன்று வருகிறார்கள். இவ்வகையில், மாற்றுத்திறனாளிகள், எளிதாக பிற மனிதர்கள் போல தினசரி வேலைகளை தாங்களே செய்யலாம்.   பேசுவது, உடல் பாகங்களை அசைப்பது என எளிதான விஷயங்களைக் கூட செய்யமுடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களை ரோபா ஆய்வில் பங்கேற்க வைத்து, சிறு வேலைகளை கொடுத்து சோதித்து வருகிறார்கள்.  ”விபத்தின் காரணமாக தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். இதனால் உடலின் பெரும்பாலான பாகங்கள் செயலிழந்துபோய்விட்டன. இதனால் ஒரு சிறிய பொருளை பிடிப்பது போன்ற மோட்டார் இயக்கங்கள் கூட கடினமானதாக உள்ளது. இவர்களின் வேலைகளை இனி ரோபோ புரிந்துகொண்டு சாமர்த்தியாக செய்யும்” என்றார்  ஆய்வாளர் ஆடா பில்லார்ட். ரோபோக்கள் மாற்றுத

ரோபோக்களை அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய அமெரிக்க எழுத்தாளர்! - ஐசக் அசிமோவ்

படம்
  எழுத்தாளர் ஐசக் அசிமோவ் அறிவியல் ஜெகஜால எழுத்தாளர்  ஐசக் அசிமோவ் கலையும், அறிவியலும் தனித்தனி உலகம் என்று கூறுபவர்கள் உண்டு. இன்றுவரையிலும் இதனை கோட்பாடாக கருதி விவாதம் செய்பவர்கள் பலர். ஆனால்,  அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் இரண்டு பிரிவுக்கும் தொடர்புண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என கூறினார்.  கலைஞனின் அறிவுடன் பிரபஞ்சத்தைப் பார்ப்பது என கூறினார் ஐசக் அசிமோவ். இவரும் இதற்கு எடுத்துக்காட்டாகவே வாழ்ந்தார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியல் பேராசிரியராக பணியாற்றினார் ஐசக் அசிமோவ்.  அறிவியல் புனைவுகளை எழுதியதில் இவர் இன்றளவும் மகத்தான எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். இவர் எழுதிய காலாடிக் எம்பயர், ரோபோட் ஆகிய தொடர் கதைகளின் வழியாக மூன்று முக்கிய எழுத்தாளர்களின் வரிசையில் இடம்பெற்றார். இப்பட்டியலில் ஆர்தர் சி கிளார்க், ராபர்ட் ஹெய்ன்லெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  சோவியத் யூனியனிலிருந்து இடம்பெயர்ந்த யூதக்குடும்பம் ஐசக்கினுடையது. 1920ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். இவர்களது பெற்றோர் அமெரிக்காவில் தங்களது எதிர்காலத்தை உருவாக்க கடினமாக உழைத்தனர். மிட்டாய், செய்திதாள், மாத இத

உலகை மெல்ல வளைக்கும் செயற்கை நுண்ணறிவு! - கோவிட் -19 ஏற்படுத்திய மாற்றம்

படம்
              கொரோனா தொடங்கிய ஏ . ஐ புரட்சி ! தானியங்கி எந்திரங்கள் முன்னர் தொழி்ற்சாலைகளில் இயக்கப்பட்டாலும் , அதன் பரவலை கோவிட் -19 காலம் வேகப்படுத்தியுள்ளது . பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுக்கான தளர்வுகளில் வணிக வளாகங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகி்ன்றன . சிங்கப்பூரில் தூய்மை செய்யும் பணிகளுக்கு கூட புற ஊதாக்கதிர்களைக் கொண்ட எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன . ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட நேரடி தொடர்புகளை தவிர்த்து , முழுக்க செயலி வசம் அனைத்து செயல்பாடுகளும் வந்துவிட்டன . உணவு , மருத்துவ சேவைகளுக்கும் கூட பாட் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன . ’’ பெருந்தொற்று காலம் , சுகாதாரமாக வாழவும் , மனிதர்களை நேரடித்தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியோடு பல்வேறு விஷயங்களையும் செய்ய வைத்துவிட்டது . செயற்கை நுண்ணறிவின் வேகமான பரவல் நமக்கு நன்மையும் கூடத்தான்’’ என்கிறார் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பாக் . நான்காவது தொழிற்புரட்சியின் பாகங்களாக செயற்கை நுண்ணறிவை கூறுகின்றனர் . இதன் வருகையால் , வேலையிழப்பு பாதிப்பும் இப்போது

கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்மஸ்! - ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள்

படம்
                  ஜிங்கிள் அண்ட் ஜாங்கிள் 2020 Directed by David E. Talbert Produced by Lyn Sisson-Talbert David E. Talbert Kristin Burr John Legend Mike Jackson David McIlvain Written by David E. Talbert Starring Forest Whitaker Keegan-Michael Key Hugh Bonneville Anika Noni Rose Madalen Mills Phylicia Rashad Lisa Davina Phillip Ricky Martin Music by John Debney Cinematography Remi Adefarasin படம் கிறிஸ்மஸ் சிறப்பைச் சொல்லும் நன்னெறி சார்ந்த படம் . படத்தில் வரும் ஜெரோனிகஸ் என்ற கண்டுபிடிப்பாளர் , முக்கியமான பாத்திரம் . இவரின் கண்டுபிடிப்புகள்தான் அங்குள்ள நகரவாசிகளுக்கு முக்கியமான பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது . அங்கு வேலை செய்யும் கஸ்டாஃப்சன் , தானும் கண்டுபிடிப்பாளராக முயல்கிறார் . ஆனால் அவருக்கு அதில் உள்ள பிரச்னையை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது . அவருக்கு ஜெரோனிகஸ் புகழ்பெறுவது பொறாமையைத் தூண்டுகிறது . அப்போது பார்த்து ஜெரோனிகஸ் கண்டுபிடிக்கும் பேசும் எந்திர மனிதன் இந்த பொறாமையை சாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள கஸ்டாப்சனை தூண்டுகிறான் . இதனால் ஜெரோ

உணவுத்துறையில் ரோபோக்களின் பங்கு!

படம்
  cc   உணவுத்துறையி ல் ரோபோ ! அமெரிக்காவில் பிளென்டி என்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது . இந்நிறுவனம் , வீட்டின் உள்ளறைகளில் உணவுப் பயிர்களை வளர்க்கும் தொழிலை செய்துவருகிறது . இதனை பராமரிப்பது மனிதர்கள் அல்ல ரோபோக்கள்தான் . அந்த வகையில் கொரோனா பாதிப்பால் தற்போது உணவுத்துறையில் ரோபோக்களை நிறுவனங்கள் நாடத் தொடங்கியுள்ளன . காரணம் மனிதர்களிடமிருந்து நோய்த்தொற்று எளிதாக பரவும் ஆபத்துதான் . ” மக்கள் மனிதர்களின் கைபடாத காய்கறிகளை அச்சமின்றி சாப்பிட விரும்புகிறார்கள் . காய்கறிகளை முதல் நபராக மக்கள் தாங்களே தொட்டு சாப்பிட நாங்கள் உதவுகிறோம்” என்கிறார் பிளென்டி நிறுவன இயக்குநர் மேட் பர்னார்டு . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோக்கள் மூலம் தொடங்கப்பட்ட கஃபே எக்ஸ் நிறுவனம் , முதலீடு இன்றி தடுமாறியது . ஆனால் இன்று நோய்த்தொற்று காரணமாக மனிதர்கள் இல்லாத உணவகங்களுக்கு வரவேற்பு பெருகிவருகிறது . பிளென்டி போன்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இ வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன . பீட்சா விற்கும் நிறுவனங்களும் இப்போது மனிதர்களின் கைபடாமல் பீட

உலகை மாற்றும் 2020 தொழில்நுட்பங்கள் இவைதான்!

படம்
pixabay உலகம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. தலைமுறையாக செய்து வந்த தொழில்கள் இன்று இழுத்து மூடப்படுகின்றன. பெரும்பாலான தொழில்கள் இணையம் சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு தொழிற்கூடங்களில் ஆட்டோமேஷன் நுட்பம் இயக்கப்படத் தொடங்கிவிட்டார்கள். செயற்கை நுண்ணறிவும் வேகம் கொள்ளத் தொடங்கி உள்ளது., இதனால் வேலை இழப்பு அபாயமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. புத்தாண்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மிக்ஸ்டு ரியாலிட்டி பிளேடு ரன்னர் படத்தில் ஏஜண்ட் கே, தன் செயற்கை நுண்ணறிவுத்தோழன் ஜோய் உடன் பேசுவது போல காட்சி அமைத்திருப்பார்கள். நிஜமும் அதுதான். தற்போது டிவிகளில் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றை பாப்கார்ன் கொரித்தபடி பார்க்கிறோம். அடுத்த வரவிருக்கும் ஆண்டுகளில், விஆர் ஹெட்செட்டில் அதே விளையாட்டை நாமும் விளையாடியபடி இருப்போம். சூழல் அந்தளவு நெருங்கிவிட்டது. மும்பையைச் சேர்ந்த டெசராக்ட் என்ற மிக்ஸ்டு ரியாலிட்டு தொழில்நுட்ப கம்பெனியை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது இதையே காட்டுகிறது. இத்துறையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இமேஜினேட் என்ற நிறுவனமும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளத

ரோபோக்களின் தயாரிப்பில் சிலந்தி!

படம்
பிபிசி சிலந்தியின் வலை உண்மையில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், அதன் பிரமாண்ட வடிவம். இதோடு ஆஸ்திரேலியாவில் பல கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் வலை கூட சிலந்தியின் கைவண்ணம்தான்.  தற்போது சிலந்தி வலைகளை ரோபோக்களின் உடலில் தசைகளாக பயன்படுத்த முடியுமா என யோசித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் சிறந்த பயனை அளிக்கலாம். பேராசிரியர் மார்க்கஸ் ப்யூலெர் இதுகுறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளார். இவர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. சிலந்தி தன் எச்சிலை காற்றின் மூலம் நூலாக்கி பிரமாண்ட வலையை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.  காற்றில் 70 சதவீத ஈரப்பதம் இருக்கும்போது சிலந்தி மிக எளிதாக வலை பின்னுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இச்சூழலில் 300 டிகிரி கோணத்தில் வலையை சிலந்தி எச்சிலை இழைத்து முறுக்கி பின்னுகிறது. இதற்கு காரணம், வலையை மிகவும் வலிமையாக்குவதுதான்.  இதனால் வலை மிக மெல்லிய அதிர்வையும் மையத்திலுள்ள சிலந்திக்கு எளிதாக கடத்துகிறது. இதனால் வலையில் சிக்கும் எறும்புகள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. வலைய