இடுகைகள்

அறிவியல் கேள்விகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ? விமானத்தில் பயணிக்கும்போது ஜெட் லாக் ஏன் ஏற்படுகிறது ? ஜெட் லாக் என்பது உடலின் உயிரியல் கடிகாரத்தோடு பகல் , இரவு ஆகிய காலச்சூழல்கள் ஆகியவை பொருந்தாமல் ஏற்படுத்தும் முரண்பாடு . இதனால் உடல் உறக்கமிழந்து களைப்படையும் . விமானத்தில் பறக்கும்போது ஜெட்லாக் ஏற்படும் . லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் எட்டு நேரமண்டலங்கள் இடையில் வருவதால் , உடல் அதனை புரிந்துகொள்ள முயன்று தடுமாறும் . இங்கிலாந்து டூ தென் அமெரிக்கா செல்லும்போது நேர வித்தியாசம் இல்லை என்பதால் ஜெட் லாக் ஏற்படுவதில்லை . மனிதர்கள் மட்டுமல்ல தாவரங்கள் , விலங்குகள் , பாக்டீரியாக்களுக்கும் கூட உயிரியல் கடிகாரம் உண்டு . சிலருக்கு ஜெட்லாக் தாக்குதல் தீவிரமாக இருப்பதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர் .  2 ஏன் ? எதற்கு ? எப்படி ? பாம்புகள் தம் விஷத்தை எப்படி தயாரிக்கின்றன ? பாம்புகளின் தம் விஷத்தை உமிழ்நீர் சுரப்பி மூலம் தயாரித்துக்கொள்கின்றன . சாதாரணமாக எச்சிலில் உணவை செரிமானம் செய்வதற்கான என்சைம்கள் மட்டுமே இருக்கும் .