இடுகைகள்

தாவோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறக்கும் நிலையிலுள்ள இளவரசனை கொலை செய்ய முயலும் கூலிப்படையினர்!

படம்
    இல் மாஸ்டர் ஆப் பேக் கிளான் குன்மாங்கா.காம். பேக் என்ற இனக்குழுவில் பிறக்கும் மூத்த பிள்ளை, தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள முடியாத உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. பிறக்கும்போதே, ஆன்ம ஆற்றல் தடை என்பது உடலில் ஏற்பட்டுவிடுகிறது. இதனால், அவனுக்கு வரவேண்டிய குடும்ப தலைவர் பதவி தம்பிக்கு செல்கிறது. யிகாங், குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்டு சற்று தொலைவில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்படுகிறான். இழிவும் அவமானப்படுத்தல்களும் தினசரி நிகழ்ச்சியாகின்றன. இப்படியான சூழலில் அவனை படுகொலை செய்ய அன்னிய சக்திகள் முயல்கின்றன. அந்த முயற்சியில், அவன் அன்பு கொண்டிருந்த பணிப்பெண் சோ ஹ்வா இறந்துபோகிறாள். அது அவனது மனதை பாதிக்கிறது. நாயகன் யிகாங், தப்பி ஓடும்போது ஓரிடத்தில் நிலவறை போல ஓரிடம் உள்ளது. அங்கு உள்ள துருப்பிடித்த வாளை கையில் எடுக்கிறான். அதில் உள்ள ஆன்மா தூக்கம் கலைந்து எழுகிறது. அது வேறுயாருமல்ல. பேக் இனக்குழுவின் முன்னோடியான வாள்வீரர் ஒருவர்தான். அவரின் ஆன்மா, வாளோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர், நாயகன் யிகாங் உடலில் புகுந்து எதிரிகளை கொல்கிறார். இதனால், யிகாங் அவனது அப்பாவைப் பார்க்கும் வாய்ப்பு ...

டீ இசம் - அகாகுரா காகுஸோ - மின்னூல் வெளியீடு

படம்
  டீ இசம் நூல், தேநீர் அருந்துவதில் உள்ள விழிப்புணர்வை பற்றி பேசுகிறது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அகாகுரா, மேற்கு நாட்டினருக்கு தேநீர் அருந்துவது பற்றிய கலாசாரத்தை பற்றி விளக்கிப் பேசுகிறார். ஜப்பான் நாட்டில் இன்று வரை டீ செரிமொனி முக்கியமானதாக கடைபிடிக்கப்படுகிறது.  தேநீர் அருந்துவதை ஜென், தாவோயிசம் ஆகிய மதங்கள் எப்படி வளர்த்தெடுத்தன என்பதை வரலாற்று கண்ணோட்டத்தில் சான்றுகளோடு அகாகுரா நூலில் விளக்கியுள்ளார். இந்த நூலை படித்தபிறகு நீங்கள் தேநீர் குடிப்பதை மனமார்ந்து விழிப்புணர்வோடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஜென், தாவோயிச மடாலயங்களில் தேநீர் அருந்துவது, முக்கியமான தியான சடங்குகளில் ஒன்று.  பத்திரிகையாளர் த. சக்திவேல் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம். அவரது நட்பு மற்றும் ஆதரவில்தான், நான் ஏராளமான தேநீர் கடைகளுக்கு சென்று பல்வேறு விதமான தேநீரை சுவைக்க முடிந்தது.  நூலை வாசிக்க க்ளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B0CHFJ22QQ

தெரிஞ்சுக்கோ - மொழி, கொடி, மதம்

படம்
  தெரிஞ்சுக்கோ   - மொழி ஜிம்பாவே நாட்டில் பதினாறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒரு நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவே அதிகம். இருபத்தொன்பது நாடுகளில் பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள எண்பது சதவீத பேசப்படும் மொழிகளை ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே பேசி வருகிறார்கள். உலக மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு இரு மொழிகளில்   எழுத, பேச தேர்ச்சி உண்டு. கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் தனது செய்திகளை லத்தீன் உட்பட ஒன்பது மொழிகளில் மக்களுக்கு பகிர்கிறார். ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் இவைதான். அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய மொழி. விசில் ஒலிகளைக் கொண்டுள்ள மொழியை சில்போ என்று அழைக்கிறார்கள். கானரி தீவுகளில் உள்ள லா கோமெரா மக்கள்   ஐந்து கி.மீ. அளவில் விசில் ஒலியைக் கொண்டு தகவல் தொடர்பு கொள்கிறார்கள். 12.3 சதவீத மக்கள் சீனாவின் மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள்.   கொடி பாரகுவே நாட்டின் தேசியக்கொடி ஓராண்டில் நான்கு முறை மாற்றப்பட்ட வரலாறு கொண்டது. 1811-1812 காலகட்டத...