இடுகைகள்

வங்கதேசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயகம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

படம்
  ஜனநாயக வழியில் என்னை தூக்கி எறிய முடியாது - ஷேக் ஹசீனா என்னை அழிக்கவேண்டுமென்றால் கொல்லவேண்டும். மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார் என்று  கூறி தனது வழியில் நாட்டை ஆட்சிநடத்திக் கொண்டு செல்கிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. 170 மில்லியன் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியாக, நாட்டின் பிரதமராக எழுபத்து நான்கு வயதிலும் உறுதியாக நிற்கிறார்.  மத்திய கிழக்கு நாடுகளை விட அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு. அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் ராணுவ ஆட்சி காலம், நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டுக்குள் கூட்டிச்சென்றது. இதெல்லாம் கடந்து 2009ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலமாக அங்கு ஆட்சி செய்வது ஹசீனாதான். எனது பெரும் பலமே மக்கள்தான். என்னுடன் மக்கள் நிற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறுபவர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்கரேட் தாட்சர் ஆகியோர் செய்த தேர்தல் சாதனைகளை கடந்து நிற்கிறார்.  வங்கதேசத்தில் புகழ்பெற்ற வலிமை பெற்ற இரு கட்சிகள் உண்டு. ஒன்று, ஹசீனாவின் ஆவாமி கட்சி, அடுத்து வங்கதேச தேசியவாத கட்சி. அண்மையில் தேசியவாத கட்சி, வங்கதேசத்தில் பிரதமரு

அமெரிக்காவிற்கு சாகச பயணமாக இடம்பெயர்ந்த வங்கதேச மனிதரின் கதை!

படம்
  விவேக் பால்ட் ஆவணத் திரைப்பட இயக்குநர் இன் சர்ச் ஆஃப் பெங்காலி ஹர்லேம் என்ற படத்தை அண்மையில் உருவாக்கியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எப்படி அமெரிக்காவிற்கு வந்து பிழைக்கிறார் என்பதை சொல்லும் படம். படத்தின் உதவி இயக்குநரான அலாவுதீன் உல்லா என்பவரின் தந்தை பற்றிய கதை இது.  அகதி ஒருவரைப் பற்றிய கதையை எப்படி எடுத்தீர்கள்? 1999ஆம் ஆண்டு அலாவுதீனின் தனிக்குரல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்குப் பிறகு என்னை சந்தித்த அலாவுதீன், தனது தந்தை பற்றிய கதையை சொல்லி அதை படமாக்க கேட்டார். அந்த கதை இதுவரை நான் அறிந்த விஷயங்களை மாற்றிப்போட்டது. 1965ஆம் ஆண்டு வரையில் கூட அமெரிக்காவில் வெளிநாட்டினர் வந்து குடியேற முடியாத நிலையை சட்டம் உருவாக்கியிருந்தது. ஆன்டி ஆசியன் இமிகிரேஷன் என்பதுதான் அதன் பெயர். ஆனால் 1920ஆம் ஆண்டில் அலாவுதீனின் தந்தை அமெரிக்காவிற்கு வந்து புவர்டோ ரிகோ பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணந்து வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமான கதைதான். இப்படி இடம்பெயர்ந்த மனிதர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் இதுவரையில் இல்லை.  இவர் இப்படி அமெரிக்கா சென்றது விதிவிலக்கான செயல் என நினைக்கிறீர்களா? கல்கத்

ஒருவரை பலவீனங்கள் கொண்ட மனிதராக காட்சிபடுத்தினால் பிரச்னையில்லை! - இயக்குநர் ஷியாம் பெனகல்

படம்
  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் -  IE ஷியாம் பெனகல் திரைப்பட இயக்குநர் முஜீப் - தி மேக்கிங் ஆப் எ நேஷன் எனும் ஷேக் முஜிபர் ரஹ்மான் சுயசரிதையை படமாக எடுத்துள்ளார். இப்படத்தை வெளியிட தயாராக உள்ளார்.  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் - இந்தியா டுடே பொதுவாக அரசியல் சார்ந்த ஒருவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எடுப்பதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. இதை எப்படி எதிர்கொள்ள நினைத்துள்ளீர்கள்? படத்தில் ஒருவரை மனிதராக பார்க்கும் தன்மையை இழக்கவிட்டுவிடக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் உருவாக்கும் படம் சூப்பர்மேன் தனமாக வாழ்க்கையைத் தாண்டியதாக உருவாகிவிடும். ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவரின் பலவீனங்களையும் பார்க்கத்தான் வேண்டும். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவீனங்கள் உண்டு. அதைத்தாண்டி அவரின் திறன், பலம் இருக்கிறதா என்பதை பாருங்கள். அதை யாரும் ஒருவரிடமிருந்து அகற்றி விட முடியாது. இதை நீங்கள் மனதில் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.  ஷேக் முஜிபர் ரஹ்மானிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் இருக்கின்றன? நல்ல பழக்கவழக்கங்களைக் கூறலாம். அவர் தனது மக்களை நேசித்தார். அவர்கள

சிறந்த தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு! - நூல் அறிமுகம்

படம்
  புத்தகம் புதுசு! தி கிரேட்டஸ்ட் தமிழ் ஸ்டோரிஸ்  எவர் டோல்டு தொகுப்பு சுஜாதா விஜயராகவன் மினி கிருஷ்ணன் ஆலெப் 699 கடந்த நூற்றாண்டில் தொடங்கி நடப்பு ஆண்டு வரையிலான சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. பாரதியார், சா.கந்தசாமி, பாமா, பெருமாள் முருகன், பூமணி ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன.  பெட்டர் ஆப் டெட்  லீ சைல்ட் - ஆண்ட்ரூ சைல்ட் பாந்தம் பிரஸ் 699 ஜேக் ரீச்சரை மையமாக கொண்ட சாகச நாவல். இதில் அரிசோனாவில் விபத்துக்குள்ளான காரிலிருந்து எழும் ரீச்சர், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து சூழும் பிரச்னைகளிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே கதை. கூடவே ஃஎப்பிஐ ஏஜெண்ட் மிச்செலா ஃபென்டன் தனது சகோதரியை தேடிக்கொண்டிருக்கிறார்.  தி ஷாடோஸ் ஆப் மென் ஆபிர் முகர்ஜி ஹார்வில் செக்கர்  699 1923ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெறும் கதை. ஆங்கிலேயர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு இந்து தத்துவவாதி ஒருவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரைக் கொன்றது யார் என மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஊரில் உருவாகிறது. அதனை தடுக்க குற்றவாளியை போலீசார் எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதுதான் கதை.   இந்தியா அண்ட் தி பங்களாதேஷ் லிபரேஷன

பாகிஸ்தான் ராணுவம் பெண்களுக்கு இழைத்த அநீதி! - நீதி கேட்கும் ஆவணப்படம்!

படம்
போரின் கொடுமை நினைத்துப் பார்க்க முடியாதது 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போர் அங்கு பெரும் சோகங்களையும், வேதனைகளையும் ஏற்படுத்தியது. காரணம், இந்த பிரிவினைக்காக அங்கு ஏராளமான உயிர்பலிகள், வல்லுறவுகள் நடைபெற்றன. இதுபற்றி எழுத்தாளர் லெஸ்ஸா காசி ஆவணப்படம் எடுத்துள்ளார். இவர் வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரிடம் அவரின் ஆவணப்படமான ரைசிங் சைலன்ஸ் பற்றி பேசினோம். இந்த ஆவணப்படும் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு வாழ்க்கை தொடர்பானது. எப்படி இந்த மையத்தை ஆவணப்படமாக எடுக்கவேண்டும்  என்று தோன்றியது? என்னுடைய தந்தை விடுதலைப் போராட்ட வீரர். அவர் விடுதலையில் ஈடுபட்ட பிரங்கானா என்ற பெண்களைப் பற்றிய கதைகளை கூறுவார். அவர்கள் விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததாக கூறுவார். எனக்கு அந்த சிறுவயதில் அவர்களைப் பார்த்தபோதும், அவர்களின் முகங்களை நினைவுகொள்ள முடியவில்லை. பின்னர் அவர்களை தேடியபோது பலரும் காற்றில் கற்பூரம் போல மறைந்துவிட்டனர். காரணம், அப்போது வங்கதேசத்தை உருவாக்கிய தேசத்தந்தையான முஜிப

சர்வாதிகார நாடாகிறதா வங்கதேசம்?

படம்
வங்கதேசத்தில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த தற்காக கவிஞர் ஹென்றி, வழக்கறிஞர் இம்தியாஸ் ஆகியோர் தடாலடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. கவிஞர் ஹென்றி, கத்தோலிக்க பிஷப் ஏப்ரல் 22, 2019 அன்று நடத்திய கலாசார நிகழ்ச்சியை தள்ளி வைத்திருந்தால் பல நூறு பேர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என செய்தியை சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அந்நாளுக்குப் பிறகுதான் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. உடனே கோபமான அடிப்படைவாதிகள், ஹென்றிக்கு கொலைமிரட்டல்களை விடுக்க தொடங்கினர். ஹென்றி தன் நகரத்தில் நடக்கும்  ஊழல், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றைப் பற்றியும் எழுதி வந்தவர் ஆவர். அவர் தற்போது டிஜிட்டல் பாதுகாப்பு சட்டப்படி கைதாகியுள்ளார். பொதுவாக மதம் குறித்து எழுதினால் முஸ்லீம் அடிப்படைவாதிகள்தான் கொந்தளித்து எழுவார்கள். இப்போது கிறிஸ்தவர்கள் அந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை மனநல சிகிச்சைதான். எனவே வழக்கை தடை செய்து கவிஞர் ஹென்றியை விடுதலை செய்ய வேண்டுமென ஸ்வாகிரிட்டோ நோமன் என்பவர் எழுதியுள்ளார். வங்காளி ஒருவர் காக்ராச்சாரி பகுதியில