தமிழ் இணையம் 2024 செயற்கை நுண்ணறிவு
தமிழ் இணையம் 2024 செயற்கை நுண்ணறிவு உலககெங்கும் கணினி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. சந்தையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு துறைகளிலும் ஆய்வுகளை செய்துவருகின்றன. வணிக ரீதியாக செயற்கை நுண்ணறிவை இணையத்தில் பயன்படுத்தும் முறையை ஓப்பன் ஏஐ நிறுவனம், நவம்பர் 2022ஆம் ஆண்டு செய்து காட்டியது. இதன் வழியாக கிடைத்ததுதான் சாட்ஜிபிடி சேவை. அறிமுகமான ஒரு வாரத்திலேயே பல கோடி மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். செயற்கை நுண்ணறிவு சார்ந்து உதவும் கருவிகளை மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே சந்தையில் கொண்டிருந்தன. ஆனால் அவை வணிகரீதியாக துல்லியமாக இல்லை. சாட்ஜிபிடியின் வருகை இணையத்தில் அதுவரை இருந்த தேடுதல் வணிகத்தையே மாற்றியமைத்திருக்கிறது. பொதுவாக தேடுபொறியில் ஒரு தகவலைத் தேடும்போது, இணையதளங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காண்பிக்கப் பெறும். ஆனால், சாட்ஜிபிடியில் தேடும் தகவலே சுருக்கமாக வந்துவிடும். குறிப்பாக உளவியலில் வாசிக்க வேண்டிய முக்கிய நூல்கள் ஐந்து அல்லது பத்து வேண்டும் என்...