சீரியல்கொலைகாரரா, கொலைகாரரின் மகனா? -பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் !
பிணவறை மருத்துவரை சுற்றிச்சுழலும் பால்யகால மர்மங்கள் தி லிஸ்டனர் சீன டிவி தொடர் 34 எபிசோடுகள் சீன தொடர்களில் பிணவறை மருத்துவரைப் பற்றிய தொடர்கள் நிறைய உள்ளன. அவற்றில் அனைத்துமே தரமாக இருப்பதில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அதை அடிப்படையாக கொண்டு அறிக்கை தயாரிப்பதும், பிணத்தை கூராய்வு செய்து கொலை மர்மத்தை உள்ளபடியே கூறுவதும்தான் அவருடைய வேலை. சீன தொடர்களில் அவரே குற்றம், வன்முறை குழுவின் தலைவர் போல செயல்படுவார். விசாரணை செய்வார். குற்றவாளிகளை அடித்து துவைப்பார். இன்னும் என்னென்ன நாயகத்துவங்களை செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்வார். இந்த தொடர் இதே வகையில்தான் வருகிறது. பிணவறை மருத்துவரான மிங் சுவான், மர்மமான ஆசாமி. அவர் எப்போத ஆய்வகத்தில் இருப்பார். வெளியில் போவார் என அவருடைய உதவியாளருக்கே தெரியாது. ஆனால் வழக்கு சம்பந்தமான விஷயங்களை துல்லியமாக தேடி ஆராய்ந்து வழக்கை வேறு கோணத்தில் அதை விசாரிப்பவர்களுக்கு காட்டி குற்றவாளியின் திசையை ஆருடம் சொல்லிவிடுவார். காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து ஆறு மணிக்கு வீடு செல்லும் ஆள் கிடையாது. மணமாகாதவர். அவ...