இடுகைகள்

கிராம மக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்ம விருதுகளைப் பெற்ற சாமானியர்கள்! - பினோதேவி, ராய் சிங்காபாய், லதா தேசாய்

படம்
  பினோ தேவி லூரெம்பம் பினோ தேவி, 77 மணிப்பூரைச் சேர்ந்த கலைஞர். பினோ தேவி, தனது மாநிலத்தில் அழிந்து வந்த லீபா எனும் உடையில் செய்யும் அலங்கார வேலைக்காக புகழ்பெற்றவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தேவி. ஐம்பது ஆண்டுகளாக அழிந்து வரும் கலையைக் காப்பாற்ற போராடி வருகிறார்.  கலையின் மீதான ஆர்வத்தால் தனது மாமியாரிடம் இருந்து லீபா கலையைக் கற்று செய்து வந்தார். மேலும் அதனை ஆர்வமுள்ள மாணவர்களும் கற்றுக் கொடுத்தார். மெய்டெய் எனும் இனக்குழு மக்களை நினைவுபடுத்துவது லீபா எனும் இக்கலை என்பது குறிப்பிடத்தக்கது.  வி எல் என்காகா வி எல் என்காகா 91 மிசோரம் மாநிலத்தில் இந்தி பிரசார சபையை தொடங்கி வைத்தவர். 1954இலிருந்து இந்தியை அங்கு பரப்ப முயன்று வருகிறார். மிசோரம் மாநிலத்திற்கும் இந்தி மொழிக்கும் கலாசார பாலம் அமைத்து வருகிறார். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகவே இப்பணியை என்காகா செய்து வருகிறார். மொழியை அனைவருக்கும் கற்பிப்பதன் வழியாக அரசையும் மக்களையும் ஒன்றிணைக்கிறார் என்று விருதுக்கான குறிப்பில் எழுதியிருக்கிறார்கள்.  காமித் ராமிலாபென் ராய்சிங்காபாய் காமித் ராமிலாபென் ராய்சிங்காபாய் 52 பழங்குடி மக்களு