சிறிய விஷயங்களைச் செய்வதால் மாறும் வாழ்க்கை!
12 டினி திங்க்ஸ் ஹெய்டி பார் சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளர் ஹெய்டி, இந்த நூலில் பனிரெண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அதன் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். வெளிப்படையாக சொன்னால், இவரது கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை விட நூல் நிறைவுற்றபிறகு, பின்புறமாக கொடுத்துள்ள சில அறிவுறுத்தல்களை படித்தாலே நமக்கு நிறைவான தெளிவு கிடைத்துவிடும். பனிரெண்டு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா, இதில் இடம், வேலை, ஆன்மிகத்தன்மை, கிரியேட்டிவிட்டி, உணவு, நாகரிகம், இயற்கை, இனக்குழு, வீடு, உணர்வு, கற்றல், தகவல்தொடர்பு என பல அம்சங்கள் கூறப்பட்டு, அவை விளக்கப்படுகின்றன. இந்த விஷயங்களைப் படித்துமுடித்தபிறகு சில கேள்விகளை நூலாசிரியர் கேட்கிறார். அதற்கான பதில்களை வாசகர்கள் வழங்கவேண்டும். அதன் வழியாக தெளிவு கிடைக்கலாம். இதில் கூறப்படும் விஷயங்கள் முழுக்க புதுமையானவை அல்ல. ஆனால், நாம் மறந்துபோனவையாக அதிகம் உள்ளது. உணவை கவனம் கொடுத்து மணம், சுவையை அனுபவித்து உண்பது, உடற்பயிற்சி செய்வது, சில நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக சிந்தனைகளை குறைத்து இருப்பது, இ...