இடுகைகள்

அனுபம் மிஸ்ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தண்ணீரைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டி! அனுபம் மிஸ்ரா -காந்தியவாதி, சூழல் செயல்பாட்டாளர்

படம்
  தண்ணீர் குரு - அனுபம் மிஸ்ரா மகாராஷ்டிரத்தின் வார்தா நகரில் பிறந்த ஆளுமை இவர். புகழ்பெற்ற இந்தி கவிஞர் பவானி பிரசாத் மிஸ்ராவின் மகன். ஆனால் அப்பாவின் வழியில் எதையும் செய்யாமல் தனக்கான செயல்பாட்டை தீர்மானமாக வகுத்துக்கொண்ட மனிதர்.  நீர்சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு முறைகளை தன் ஆயுள் முழுவதும் பிரசாரம் செய்தார். எப்படி மெல்லிய குரல் கொண்ட காந்தியின் கருத்து பல கோடி மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல்தான் தனது செயல்பாடு வழியாக தனது பெயரை மக்களை சொல்ல வைத்தார்.  வறட்சியில் பாதிக்க ஏராளமான மாநிலங்களுக்கு களப்பணியாக சென்றார். அங்கு சென்று, அம்மக்கள் தொன்மைக் காலத்தில் என்னென்ன முறையில் மழைநீரை சேமித்தார்களோ அதனை அடையாளம் கண்டார். இதனை ஆய்வு செய்வதோடு, நூலாகவும் எழுதினார். இப்படித்தான் எட்டு ஆண்டுகள் ஆய்வு முடிவில் ராஜஸ்தான் நீர்நிலைகள் பற்றி நூல் ஒன்றையும் எழுதினார். நூல் எழுதுவதும் அதனை வெளியிடுவதும் முக்கியம் அல்ல. அதில் முக்கியமான வேறுபாடு, ஆங்கிலம் தெரிந்தாலும் கூட மக்களுக்கு விஷயத்தைச் சொல்லுவதற்கு ஏதுவாக இந்தியில் அனைத்து நூல்களையும் எழுதினார்.  தான் எழுதிய அனைத்து நூல்களையும் கிரியேட்