இடுகைகள்

தொற்றுநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேகமாக பரவி வரும் மங்கிஃபாக்ஸ் தொற்றுநோய்!

படம்
  சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸை ஒத்துள்ள வைரஸ்தான், மங்கிஃபாக்ஸை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகளில் தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி இங்கிலாந்து அரசு மங்கிஃபாக்ஸ் நோய் பாதிப்பை முதன்முறையாக அறிவித்தது. அண்மையல் அங்கு நைஜீரியாவிற்கு சென்று வந்த பயணி, மங்கி ஃபாக்ஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் இங்கிலாந்திற்கு வந்ததும் தோலில் அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். இவரிடமிருந்து இன்னும் எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.  2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸ் தாக்குதல் அறியப்பட்டது. அப்போதும் நைஜீரியா சென்று வந்த பயணிகளால் தான் பாதிப்பு ஏற்பட்டது.  மங்கி ஃபாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1 முதல் 10 சதவீதம்தான். பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவார்கள். அதுதான் இதில் ஆபத்தான பயப்படும் அம்சம்.  எப்படி பரவுகிறது? நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதால். இன்னொன்று, நோய் பாதிக

ஆன்டிசெப்டிக் முறையை மருத்துவர்களின் பிரசாரம் செய்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியவர்!

படம்
        ஜோசப் லிஸ்டர்       மருத்துவத்துறையில் இன்று டெட்டால் , சேப்லான் என பல்வேறு ஆன்டிசெப்டிக் மருந்துகள் கிடைக்கின்றன . இதனை அறிமுகப்படுத்தியவர் யாரென்று தெரிந்து உய்வோமா ? ஜோசப் லிஸ்டர் என்ற படிப்பில் மூழ்கி ஏராளமான தங்கமுலாம் பூசிய பதக்கங்களை பெற்ற மனிதர்தான் அறுவை சிகிச்சையை பாதுகாப்பானதாக மாற்றினார் . 1827 ஆம்ஆண்டு 5 ஏப்ரலில் பிறந்தவர் குவாக்கர் குடும்ப வாரிசு . இவரது படிக்கும் நேரம் போக மீதி நேரம் போக அப்பாவின் நுண்ணோக்கியில் ஏராளமான நுண்ணுயிரிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார் . இப்படிப்பட்டவருக்கு வேறு என்ற ஆசை இருக்கமுடியும் ? மருத்துவராகவே ஆசைப்பட்டார் . லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்படிப்பு பட்டம் படித்தார் . 1848 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அப்போதுதான் மருத்துவத்துறையில் அனஸ்தீசியாவைப் பயன்படுத்துவது பரவலாகிக் கொண்டிருந்தது . அதில் நிறையப் பேர் சேர்ந்து பயின்று வந்தனர் . 1846 ்ஆம் ஆண்டு ஈதர் அனஸ்தீசியா வல்லுநராக உருவானார் . ஆனால் அப்போதும் பல்வேறு நோயாளிகள் நோய்த்தொற்று காரணமாக இறந்துபோனார்கள் . இதற்கு காரணம் என மோசமான காற்றான மியாஸ்மாவைக் காரண

வருமுன் காப்பதில் கவனமாக இருக்கிறோமா?

படம்
giphy.com வருமுன் காப்பதில் கவனம் தேவை!  உலக நாடுகளின் சுகாதாரத்தை அளவிடும் சுகாதாரப் பாதுகாப்பு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்தியா 57ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் தொற்று நோய்களும், தொற்றா நோய்களும் ஏராளமாக மக்களைத் தாக்கி வருகின்றன. நாம் இவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது முக்கியமானது. இவற்றை நாம் எப்படி கண்காணிப்பது என்றால் அதற்கென பல்வேறு ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் உலக சுகாதாரப் பட்டியல். இப்பட்டியலில் இடம்பெற்ற 195 நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதன்மையாக உள்ளன. இப்பட்டியலில் இந்தியா சுகாதாரம் சார்ந்த பணிகளில் 46.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முதன்மை இடம் பெற்ற மூன்று நாடுகளின் சுகாதாரப் புள்ளிகள் 75 முதல் 83 வரை உள்ளன.  இப்பட்டியலுக்கான ஆய்வு, 140 கேள்விகளை உள்ளடக்கியது. நோய்களை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பது, சிகிச்சை, பாதிப்புகள், மக்களின் நிலை, நிலப்பரப்பு சார்ந்த சமூகப் பொருளாதாரம் என அனைத்தையும் இதில் கவனிக்கின்றனர். ஆய்வில் வழங்கப்படும் புள்ளிகளில் குறைந்தபட்சம் 40 புள்ளிகளு

நேர்த்தி எனும் தொற்றுநோய் - அனைத்திலும் ஒழுங்கு எதிர்பார்க்கிறீர்களா? ஆபத்து!

படம்
எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம், எனக்கு திருப்தியாகலப்பா, இது பெஸ்ட் கிடையாது, நல்லா வொர்க்அவுட் பண்ணுங்க என்ற வார்த்தைகளை நாம் மேலதிகாரிகளிடம் அல்லது ஆசிரியர்களிடம் கேட்டிருப்போம். நாமே அந்த இடத்திற்கு உயரும்போது, நமக்கு கீழிருப்பவர்களிடம் இதே வார்த்தைகளை கூறிக்கூட இருக்கலாம். இதற்கு என்ன பொருள்? நேர்த்தி. இதை சிலர் நேரடியாக சொல்லுவார்கள். நிறையப்பேர் எனக்கு இப்படி இருக்கணும் என்பதைத்தாண்டி பேசமாட்டார்கள். இதனை அவர்கள் தங்களுடைய ஸ்டைலாக நினைத்துக்கொண்டிருப்பார்கள்.  நான் வேலைசெய்த முன்னாள் பத்திரிகை ஆசிரியர் சிறந்த ஆசிரியர். ஆனால், பர்ஃபெக்ஷன் பார்ப்பவர்தான். மாதந்தோறும் வரும் பத்திரிகையை, தனது நேர்த்தியாக செய்யணும் என்ற குணத்தாலேயே  ஆறுமாத பத்திரிகையாக மாற்றினார். காரணம், காத்திரமாக உருவாக்கணும் என்று பதில் சொன்னார்.  டிசைன் செய்யும் முன்பே இருமுறை திருத்தி எழுத திருத்தங்களை இன்டிசைனில் போட்டு கொடுப்பேன். பின் டிசைன் செய்தபின் நான்குமுறை திருத்தங்கள் செய்வார். எப்போது பார்த்தாலும் நான்கு ஏ4 காகிதங்கள் டேபிளில் கிடக்கும். எது எப்போது போட்டது என தேதி எழுதி வைத்து பாத