இடுகைகள்

ஸ்டேன்சுவாமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடி மக்களிடம் உள்ள கனிம வளங்களை பற்றி மட்டுமே இந்திய அரசு கவலைப்படுகிறது! பிரகாஷ் லூயிஸ்

படம்
  பிரகாஷ் லூயிஸ்  எழுத்தாளர் நீங்கள் ஸ்டேன் சுவாமியிடம் அவரைப் பற்றி நூல் எழுதுவதாக கூறினீர்களா? இல்லை. சில சம்பவங்களால் நான் அவரைப் பற்றி நூல் எழுதுவதை கூறமுடியவில்லை. அவரின் அலைபேசி அவரிடம் இருந்து நீக்கப்பட்டுவிட்டதும் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் பேச முயன்றாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னாடியே சிலரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன்.  நான் எழுதியுள்ள நூலில் ஸ்டேன் சுவாமி, அவரது காலகட்டம், அவரின் செயல்பாடுகள் ஆகியற்றை விளக்கியுள்ளேன்.  ஸ்டேன் சுவாமி இறந்து சில மாதங்களிலேயே அவரைப் பற்றிய நூலை வெளியிட்டு விட்டீர்கள். ஜூலை 5 இல் அவர் மறைந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவரது செயல்பாடுகளைப் பற்றி தகவல் சேகரித்து எழுத முடிந்ததா? 2018ஆம் ஆண்டு பீமாகரேகான் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதிலிருந்தே நான் நூலுக்கான தகவல்களை சேகரித்து வந்தேன். தேசிய புலனாய்வு முகமை உள்ளே வந்தபோது நான் தகவல்களை சேகரித்து ஆராய்ந்துகொண்டிருந்தேன். பிறகுதான் ஸ்டேன்சுவாமி கைதுசெய்யப்பட்டார். சட்டவிரோத செயல்களுக்காக அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்டவிரோ