விழிப்புணர்வோடு உரையாடலுக்கான மொழியைத் தேர்ந்தெடுத்து பேச கற்க வேண்டும்
We are dangerous when we are not conscious of our responsibility for how we behave, think, and feel.non violent communication பிறரிடம் பழகும்விதம், சிந்திப்பது, உணர்வது ஆகியவற்றில் விழிப்புணர்வு இல்லாத நிலையில், அபாயகரமானவர்களாக மாறுகிறோம். We can replace language that implies lack of choice with language that acknowledges choice.-non violent communication வாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ள மொழியைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து, வாய்ப்புகளைக் கொண்ட மொழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் Our language obscures awareness of personal responsibility.-non violent communication தனிப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்ட அதை வெளிக்காட்டும் உரையாடல் மொழியைப் பேச பழக வேண்டும் நவீன காலத்தில் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டால் வருகிற நேரடி பதில் போல யாரும் எந்த பதில்களையும் கூறுவதில்லை. தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் கூட அதை ஏற்று பதில் கூற மறுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரது பள்ளிக்கு மாணவர்கள் குறைவாகவே வருகிறார்கள். அவர்களை அவராகவ...