இடுகைகள்

படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எட்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்ட இரண்டு வாள் வீரர்களின் பிள்ளைகள் போடும் பழிக்குப்பழி திட்டம்!

படம்
 தி ஹைடன் ஃபாக்ஸ்  சீன திரைப்படம்  ஒன்றரை மணி நேரம் ஐக்யூயி ஆப் இரண்டு சிறந்த வாள் வீரர்கள், எட்டு எதிரிகளால் நயவஞ்சகமாக வாளில் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களின் இறப்பிற்கு, அவர்களது பிள்ளைகள் பழிவாங்குவதுதான் கதை.  இந்த திரைப்படத்தின் பலமே சண்டைக்காட்சிகளும். திடீரென நடக்கும் பல்வேறு திருப்பங்களும்தான்.  ஒரே வரியில் மேலே கதையை சொன்னாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு நாயகன் யார், எதனால் இப்படி துரோகியாக மாறி நடந்துகொள்கிறான் என்பது புரியாது. அதற்கெல்லாம் இறுதியாகத்தான் பதில் சொல்கிறார்கள். திரைப்படம் எடுத்த வகையிலும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இறுதிக்காட்சி முழுக்க பனிபோர்த்திய இடத்தில் நடக்கிறது. அதுவே ஒரு  சொல்ல முடியாத திகிலை, பயத்தை மனதில் ஏற்படுத்துகிறது.  ஹூ யிடாவோ என்ற வாள் வீரர் ஒரு பொக்கிஷத்திற்கான சாவியை வைத்திருக்கிறார். அதற்கான வரைபடமும் இருக்கிறது. அதைப் பெறவே எட்டு வில்லன்கள் அவரையும், இன்னொரு எதிராளியையும் திட்டமிட்டு மோதவிட்டு விஷம் வைத்து கொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாத விஷயம், அந்த பொக்கிஷத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது....

சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

படம்
  உலகம் அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும், நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும் உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.   2012ஆம் ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள். இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர் சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.   உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை, உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால்...

எந்த வயதினர் படங்களை பார்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு கூட இல்லை! - வாணி திரிபாதி

படம்
                வாணி திரிபாதி திக்கூ திரைப்பட சான்றிதழ் குழு திரைப்படத்துறை தொடர்பான கொள்கை வகுப்பதற்கான ஐடியா எப்படி உருவானது ? திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது அதைச்சார்ந்த விஷயங்கள் பற்றி சேகர் கபூர் என்னிடம் பேசினார் . அதற்குப்பிறகுதான் எனக்கு இதைப்பற்றி கொள்கை வகுப்பது பற்றிய எண்ணம் தோன்றியது . பொதுமுடக்க காலத்தில் மக்கள் இணையம் சார்ந்து ஓடிடி நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்கினர் . இது பொழுதுபோக்குதுறையை மாற்றியுள்ளது . இவையன்றி விளையாட்டு துறை மற்றும் ஏஐ சார்ந்த விஷயங்களையும் மக்கள் பயன்படுத்துகின்றனர் . நாங்கள் இக்காலகட்டத்தில் இதுபற்றி நிறையமுறை பேசி அதுபற்றிய கொள்கைகளை எழுதி உருவாக்கினோம் . இப்போதுள்ள காலகட்டம் டிஜிட்டல் நிகழ்ச்சிகளுக்கு சரியானது . மத்திய அரசு டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது . நீங்கள் அதில் படைப்பு சுதந்திரம் பற்றி எப்படி பேசுகிறீர்கள் ? நாம் இங்கு பார்த்து வரும் பல்வேறு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இன்னும் முறைப்படுத்தவில்லை . பலரும் போதைப்பொர...