இடுகைகள்

உலகப்போர் 2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மனி!

படம்
இரண்டாம் உலகப்போர்  இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, ஜெர்மனி நாடு. இந்த நாடு ஆக்ரோஷமாக போலந்து நாட்டை ஆக்கிரமித்தது. இப்படி உலக நாடுகளுக்கு இடையில் தொடங்கிய போர் ஐந்து ஆண்டுகள் நீடித்தது.  இந்தப் போரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இவர்களுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிரே நின்றன.  இரண்டாம் உலகப்போரில் 30 நாடுகள் கலந்துகொண்டன. இதன் விளைவாக இங்கு வாழ்ந்த 100 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஏராளமான மக்கள் தற்கொலை, மன அழுத்தம், ஆயுத தாக்குதல், நோய் பாதிப்பு என 85 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். மனிதகுல வரலாற்றில் இது மறக்கமுடியாத களங்கமாக மாறியது.  செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி உலகை ஆட்சி செய்யும் வேகத்தில் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் எதிர்வினையாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன.  1939ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பொறுத்தவரை நவீனமான ஆயுதங்களைக் கொண்டிருந்தது ஜெர்மனிதான். இதன் காரணமாக போரின் தொடக்கத்தில் இ

கேரட் தின்றால் இருட்டில் பார்க்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி கேரட் தின்றால் இருட்டில் கண்கள் தெரியுமா? கண்களில் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் நல்லது. கேரட்டும் அப்படியே. அதற்காக நாய், பூனை போல உங்கள் கண்கள் இருட்டிலும் கவனிக்கும் திறன் பெறமுடியாது. கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின், கண்களிலுள்ள ரெட்டினாலுக்கு உதவுகிறது. இதனால் கண்பார்வை ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறலாம். இரண்டாம் உலகப்போரில் இரவில் தாக்கிய ஜெர்மனி நாட்டு விமானங்களை சுட்டுவீழ்த்த கண்பார்வை இல்லை என வீர ர்கள் தடுமாறினர். அப்போது அவர்களுக்கு அரசு கேரட்டை வழங்கியதாகவும், அதனால் அவர்கள் ஜெர்மனியை வீழ்த்தியதாகவும் கதை உண்டு. ஆனால் அது உண்மையல்ல. ரெட்டினாலிலிருந்து கிடைக்கும் ரெட்டினல் எனும் சுரப்பி கண்பார்வை, பெருக உதவுகிறது. மற்றபடி விட்டமின் ஏ வீக்காக இருந்தால் ஸ்பெக்ஸ் மேக்கர்ஸிடம் அப்பாய்ட்மெண்ட் கேட்டு கண்ணாடி வாங்கி போட்டுக்கொள்வதே நல்லது. நன்றி - பிபிசி