இடுகைகள்

எரிமலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்மைக் காலத்தில்

பாதாள உலகில் வாழும் புதிய அரிய உயிரினங்கள்!

படம்
  பூமிக்கு அடியில் வாழும் உயிரினங்கள்!  இயற்கைச்சூழல் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வாய்ப்பு அளிக்கிறது. ஹவாய் தீவில் உள்ள எரிமலை குழாய்களில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிந்தால் உங்களுக்கு இப்படி வியப்பு ஏற்படலாம். இங்கு நிலத்திற்கு கீழே வெளுத்த கண் பார்வையற்ற நிறைய உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எரிமலைகள் ஹவாய் தீவு நெடுக அமைந்துள்ளன. இருளான வெளிச்சமில்லாத சூழலையும் சமாளித்து வௌவால், எலி தவிர நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.  பிக் ஐலேண்ட் எனும் இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் அறிவியலுக்கு புதிய உயிரினங்கள் (Planthoppers,Omnivores,Milipedes) தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், ஆராய்ச்சி குழுவினர் எரிமலைக்குழாயில் மேலும் ஆய்வு செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. “இங்கு நாங்கள் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொருமுறையும் புதிய உயிரினங்கள் கண்டறியப்படுகின்றன. அவை புதிய உயிரினங்கள் அல்லது அறிந்த உயிரனத்தின் புதிய வகையாகவே இருப்பது ஆச்சரியம்” என்றார் ஹவாய் பல்கலைக்கழக உதவி

மெக்சிகோவின் கலாபகோஸ் தீவுகள்! - ரெவில்லேஜிஜெடோ தீவுகள்

படம்
  மெக்ஸிகோவின் கடற்புரத்தில் ரெவில்லேஜிஜெடோ தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை மெக்ஸிகோவின் கலாபகோஸ் என்று புவியியலாளர்கள் அழைக்கிறார்கள். இதற்கு, இங்கு காணப்படும் பல்லுயிர்த்தன்மையே முக்கியக் காரணம். கடல் பகுதியில் அமைந்துள்ள சங்கிலித் தொடரான தீவுக்கூட்டங்களுக்கு ஆர்ச்சிபெலகோ என்று பெயர்.  இவற்றில் நிறைய எரிமலைகள் அமைந்துள்ளன. இவை என்ன காரணத்தில் வெடிப்புக்குள்ளாகின்றன என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  1953ஆம் ஆண்டு பார்சினாவில் உள்ள ஆர்ச்சிபெலகோ எரிமலை லாவாவை வெளியேற்றியது. பிறகு, 1993 ஆம் ஆண்டு பசிபிக் பகுதியிலுள்ள எவர்மன் எரிமலை, வெடித்தது.இந்த இரண்டு எரிமலைகள் இரண்டுமே இன்று வரை இயங்கி வருகின்றன. “நாங்கள் இந்த எரிமலையில் வெளியாகும் லாவா அளவையும், ஏற்படும் ஆபத்து பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் நெதர்லாந்தின் உட்ரெச்ட் பல்கலைக்கழக பேராசிரியரான தூவே வான் ஹின்ஸ்பெர்ஜன் (). எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்ற பயம் இருப்பதால்தான் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர். எனவே, எரிமலைகளின் வெடிப்பை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.  லாவாவில் க

பூமியின் அடித்தட்டு மர்மம்!

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

தொன்மைக்கால மக்களை அழித்த எரிமலைக் குழம்பு!

படம்
தொல்குடியிருப்புகளை மூழ்கடித்த எரிமலைக் குழம்பு! மெக்ஸிகோவின் உள்ள மெக்ஸிகோ சிட்டியில் அமைந்துள்ளது, போபோகாடெபெட்ல் (Popocatepetl) எரிமலை. உலகிலேயே ஆபத்தான எரிமலை என்று புவியியல் வல்லுநர்களால் கூறப்படும் எரிமலை இது. கடந்த 23 ஆயிரம் ஆண்டுகளாக லாவா குழம்பை வெளித்தள்ளி வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளை அறியும்போது, எளிதாக எதிர்கால வெடிப்புகளைக் கணிக்க முடியும் என புவியியல் வல்லுநர்கள் நம்புகிறார்கள். இதற்காக, லாவா குழம்பு, இதனால் உருவான பாறைகளையும் ஆய்வு செய்து கனிமங்களை  அடையாளம் கண்டறிந்து வருகிறார்கள்.  ”நாங்கள் இப்போது செய்யும் ஆராய்ச்சி மூலமாக எரிமலை வெடிப்பு நடந்தபோது உள்ள சூழ்நிலைகளை அறிய முடியும். ஒருவகையில் எரிமலையின் கடந்தகால வரலாற்றை மறு உருவாக்கம் செய்ய தகவல்களை சேகரித்து வருகிறோம்” என்றார் புவியியல் ஆய்வாளர் இஸ்ரேல் ராமிரெஸ் உரைப்.  ஹவாயில் உள்ள எரிமலைகளில் வெடிப்பு வேகமும், அடர்த்தியும் குறைவு. நிலப்பரப்பில் தினசரிக்கு 1 - 33 மீட்டர் நீளத்திற்கு பரவுகிறது. ஆனால்  மெக்சிகோவில் உள்ள போபோ எரிமலை வெடித்து வெளியேறும் லாவாவின் அடர்த்தி அதிகம். லாவா குழம்பில் ஏர

வெப்பம் குறைந்து வரும் எரிமலைப் பகுதிகள்!

படம்
  வெப்பம் குறைந்துள்ள எரிமலைப்பகுதிகள்! பூமியில் அடியில் உள்ள வெப்பம் காரணமாக, பாறைகளை எரித்தபடி எரிமலைக்குழம்பு வெளியே வருகிறது. இப்படி எரிமலைக்குழம்பு வெளியேறும் இடங்களை எரிமலை என்கிறோம். எரிமலைக் குழம்பு வெளியேறும் நிலப்பரப்பிற்கு ஹாட்ஸ்பாட்(hot spot) என்று பெயர். பொதுவாக இப்படி எரிமலைகள் உருவாகின்றன என்றால் அந்த இடம், பூமியின் அடிப்பரப்பிற்கு நெருக்கமாக உள்ளது என்று பொருள்.  சில எரிமலைப்பகுதிகளில் வெளியேறும் எரிமலைக்குழம்பில் பல்வேறு வேதிப்பொருட்கள் உண்டு. குளிர்ந்த எரிமலையில் சிலசமயங்களில் எரிமலைக்குழம்பு வெளிவந்தாலும் அவை ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.  நிலத்திட்டு, கடல்நீர்த்தட்டு ஆகியவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. நிலத்திட்டின் நடுப்பகுதியில் எரிமலை இயக்கங்கள் ஏற்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஹவாய் தீவுகள், தெற்கு அட்லாண்டிக் அஸ்சென்சன் தீவு, தெற்கு பசிபிக் பிட்கெய்ர்ன் தீவுகள் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.  பல்வேறு தனிப்பட்ட பகுதிகளில் எரிமலை வெடிப்பு இருப்பதை ஆய்வாளர் ஸியுவான் பாவோ என்று ஆய்வா

புவியியல் தகவல்கள்!

படம்
  தெரியுமா? ”பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது” என்றார்  புவி வேதியியலாளரான பால் அசிமோவ். இதன் தோராய வெப்பநிலை 5,537 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பூமியில் மொத்தமாக 40 டெராவாட்ஸ் (terrawatts) வெப்பம் உருவாகிறது. இதன் மையப்பகுதியில் இருந்து கதிரியக்கத் தன்மை காரணமாக வெப்பம் உருவாகிறது என 2011இல் வெளியான ஆய்வு கூறுகிறது. மையப்பகுதியில் ஆன்டிநியூட்ரினோ (antineutrinos)என்ற துகள் காணப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிரியக்கமே வெப்பத்திற்கு காரணம் என புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  "பூமியின் உட்புறத்திலிருந்து வரும் வெப்ப ஆற்றலே அதனை உயிரோட்டமாக வைத்துள்ளது என்றார் அமெரிக்க புவியியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் டாம் கிராஃபோர்டு.  தோரியம், யுரேனியம், பொட்டாசியம் " ஆகிய தனிமங்களின் கதிரியக்க தன்மையால் பூமியில் வெப்பம் உருவாகிறது.  உலகமெங்கும் உள்ள பாலைவன தரைகளில் பாசிகள் (mosses) வாழ்கின்றன. இவை தன்னுடைய தனித்துவமாக மூலக்கூறு அமைப்பு காரணமாக காற்றிலிருந்து நீரைப் பெற்று உயிர்வாழ்கின்றன. தனித்துவமான இலைகள் போன்ற அமைப்புக்க

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவி

கடலுக்குள் உள்ளே உருவான எரிமலை

படம்
  கடல் ஆய்வில் வெளியான ஒற்றை எரிமலை! பசிபிக் கடலில் வடமேற்காக  952 கி.மீ. தொலைவில் பயணித்தால் ஹோனோலுலு என்ற இடத்தைப் பார்க்கலாம். இங்கு கடல்மட்டத்திலிருந்து 52 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைச்சிகரங்கள் உண்டு. கடல் பறவைகள் பாறைகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதில்தான் புகாஹோனு (Puhahonu) எனும் எரிமலை உள்ளது என  கண்டறியப்பட்டுள்ளது.  புகாஹோனு என்ற பெயருக்கு, மூச்சை உள்ளிழுக்கும் ஆமை என்று பொருள்.   அண்மையில், இங்கு கடல் படுகை ஆய்வைச் செய்தனர். அப்போதுதான், ஆய்வாளர்கள் ஒற்றையாக இருக்கும் பெரிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர்.  ”நாம் பார்க்கும் பகுதி வெளித்தெரியும் 30 சதவீத மலை. அதற்கு கீழே இன்னும் உள்ளது ”என ஹவாய் பல்கலைக்கழக எரிமலை ஆய்வாளர் மைக்கேல் கார்சியா கூறினார். இதுபற்றிய ஆய்வு 2020ஆம் ஆண்டு எர்த் அண்ட் பிளானட்டரி சயின்ஸ் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலுக்கு கீழே உள்ள மலைகள், எரிமலைகள் என தொடர்ச்சி ஹவாயிலிருந்து ரஷ்யாவின் கிழக்குப்பகுதி வரையில் நீண்டுள்ளது.  ஹவாயிலுள்ள மௌனா லோவா (Mauna Loa,) என்ற எரிமலை, 9,170 மீட்டர் உயரம் கொண்டது. உலகில் பெரிய எரிமலை என

பூமியில் கிடைக்கும் தங்கம் உருவான கதை!

படம்
விண்வெளியிலிருந்து உருவான உலோகம்!  இன்று ஒருவரின் செல்வ வளம், நிலம், சேர்த்து வைத்துள்ள பல்வேறு நகைகளோடும் சேர்த்தே  அளவிடப்படுகிறது. அதிலும் அவர் தங்கத்தை சேர்த்து வைத்தால், அதன் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும்.   உண்மையில் இந்த தங்கம் எப்படி உருவானது? தங்கம் அரிதான உலோகம் என்பதோடு, அதன் உருவாக்கத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.  நட்சத்திரங்களின்  இணைதலின்  விளைவாகவே, தங்கம் உருவாகியிருக்கும் என  அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். நட்சத்திரங்களில் உள்ள சிறு பகுதிகள் ஒன்றாக இணைவதன் வழியாக, அதிலிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நட்சத்திரங்களில் பெருமளவு உள்ள ஹைட்ரஜன் இதில் அதிக பங்களிப்பைத் தருகிறது.   சிறு பகுதிகளின் இணைவு அல்லது மோதலின்போது வெப்பமும், அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாகவே, நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஹீலியம் உருவாகிறது.  இந்த செயல்பாடு சுழற்சியாக நடைபெறுகிறது. இச்செயல்பாடு, இரும்பு உருவாகும் வரை தொடர்கிறது. இரும்பு, வினையில் உருவாகும் ஆற்றலை பெருமளவு உறிஞ்சுகிறது. இதன் விளைவாக, நட்சத்திரம் மெல்ல சிதைவடைகிறது. அதிகரிக்கும்

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா!

படம்
  இந்தியாவில் தற்போது 106 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 40 ஆயிரம் சதுர கி.மீ. உலகின் முதல் தேசியப்பூங்கா எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா?  அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. இதன் பெயர், யெல்லோஸ்டோன் என தலைப்பில் குறிப்பிட்டதுதான். இதன் பரப்பு, 8,104 சதுர கி.மீ.  இந்த தேசியப் பூங்கா வியோமிங் தொடங்கி மான்டனா, இடாகோ ஆகிய மாகாணங்கள் வரை நீண்டுள்ளது. இங்கு 67 வகை பாலூட்டிகள் வாழ்கின்றன. 322 இன பறவைகள். 16 வகை மீன்கள், 1,100 இயற்கை தாவரங்கள் உள்ளன. 400 வகையான வெப்பத்தை விரும்பும் நுண்ணுயிரி வகைகள் அறியப்பட்டுள்ளன.  இங்கு கால்டெரா எனும் எரிமலை உள்ளது. வெப்ப நீரூற்றுகளும் உண்டு. ஓல்ட் ஃபைத்ஃபுல் என்ற வெப்ப நீரூற்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. 60 அல்லது 90 நிமிடங்களுக்கு நீரை வேகமாக பீய்ச்சி அடித்து வருகிறது. 1870ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்தனர். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் முன்னர் எரிமலை இயக்கம் இருந்திருப்பதாக ஆய்வாளர்கள் தகவல் கூறுகின்றனர். புவித்தட்டுகளில் மோதல் இங்கு எரிமலை உருவாக காரணமாக இருந்திருக்கிறது. இதை ஏன் இப்போது நாம் வாசிக்கிறோம்? மார்ச் 1, 1872ஆம்

கடலிலுள்ள உப்பு குறைந்தால், காணாமல் போனால் என்னாகும்?

படம்
pixabay ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி திடீரென கடலிலுள்ள டன் கணக்கிலான உப்பும் காணாமல் போனால் என்னாகும்? உடனே நடக்கும் ரியாக்ஷன், நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புதான். அடுத்து பிற இடங்களிலுள்ள நீர், கடல் நீரின் அடர்த்திக்குறைவால் சவ்வூடு பரவல் முறையில் உள்ளே வர முயற்சிக்கும். ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் சிறிது உருகும். ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. நீங்கள் கேட்கும் கேள்வி நிஜமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு எந் பிரச்னையும் இல்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

எரிமலை அருகே மக்கள் வாழ்வது ஏன்?

படம்
குவாத்திமாலா, அகுவா எரிமலை ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலையின் அருகே மக்கள் வாழ்வது எதற்காக? செல்ஃபீ எடுப்பதற்காக அல்ல மக்களே. அங்குதான் விவசாயம், சுற்றுலா என அனைத்து விஷயங்களும் எளிமையாக கிடைக்கிறது. ஜப்பான், இந்தோனேஷியா, ஃபிஜி ஆகிய தீவுகளில் எரிமலையின் பெருமையை நீங்கள் காணலாம். ம எரிமலைக்குழம்பு என்பதை காரம் அதிகமாக வைத்த காரக்குழம்புடன் ஒப்பிட்டு நாம் திகிலாகிறோம். ஆனால் ஐஸ்லாந்து காரர்கள் தங்கள் நாட்டிலுள்ள ஹெக்லா எரிமலையை தங்களது பாரம்பரிய பெருமையாக நினைக்கிறார்கள். இன்றும் உலகில் இயங்கி வரும் எரிமலைகள்    Fuji, Vesuvius, Mt. St. Helens, or even Iceland's infamous Eyjafjallajökull   இவைதான். இவை அனைத்தின் அருகிலும் கணிசமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  எரிமலைகள்தான் உலகின் நிறைய இடங்களில் புது குடியேற்றங்களை உருவாக்கின என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சாகச வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் இதுபோன்ற வாழ்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.  நன்றி: க்யூரியாசிட்டி

உலகம் ஓர் ப்ளூபெர்ரி!

படம்
இப்படியெல்லாம் யோசிக்கலாமா என்று கேட்கக்கூடாது.யோசித்தால் எப்படியிருக்கும் என்பதுதான் விஷயமே. உலகம் திடீரென ப்ளூபெர்ரி பழங்களாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்? உலகில் உள்ள எரிமலைகளில் லாவாவுக்கு பதில் ப்ளூபெர்ரி சாறும், ஜாமும் பெருக்கெடுத்து ஓடும். நிலமும், கடலும் இருப்பதற்கு பதில் பழங்களாக இருப்பதால், பூமியின் சைசும் மாறுபடும். பூமியின் சுழற்சி பத்தொன்பது மணிநேரங்களுக்கு ஒருமுறை என மாறிவிடும். பெர்ரி இருப்பதால் பாறைகளின் அடர்த்தி, எடை, ஈர்ப்புவிசை இருக்காது. எனவே, பூமியின் ஈர்ப்புவிசை குறைந்துவிடுவதால் நிலவு பூமியின் துணைக்கோளாக இனியும் இருக்காது. செயற்கைக்கோள்கள் அப்படியே பூமிக்கு உள்ளிழுக்கப்பட்டு எரிந்துபோகும் வாய்ப்பு உண்டு. இது ஆன்டர்ஸ் சான்ட்பெக் என்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ க ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியின் விளைவாக கூறப்பட்டது. நன்றி: பிபிசி

மேக்வாவிலுள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்க முடியுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலை மேக்மாவில் நமக்கு கனிமங்கள் கிடைக்குமா? உண்மையாகச் சொன்னால் கிடைக்காது. ஏன் என்றால், மேக்மா பாறைகளை உருக்கியபடி வரும் ஒரு நீர்மம். அதில் கனிமங்கள் உள்ளது உண்மை என்றாலும் அதனை அடர்த்தியான தன்மையில் மாற்றினால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேக்மாவை குளிரவைத்து கனிமங்களை திட நிலையில் பெறலாம். மேக்மாவை நீரில் கரைத்து அதிலிருந்து கனிமங்களை பிரித்தெடுக்க முயற்சிக்கலாம். நன்றி: பிபிசி