இடுகைகள்

மும்பை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாஃபியாவை சட்டப்பூர்வமாக மாற்றும் அநீதியின் காவலன்! பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு

படம்
  பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு, காஜல், நாசர் பிஸ்னஸ்மேன் -தெலுங்கு அடடா... அப்பப்பா பாத்திரங்கள் - Character Sketch பிஸினஸ்மேன் சூர்யா பாய் (மகேஷ் பாபு) தெலுங்கு இயக்குநர் – பூரி ஜெகன்னாத்   சாதாரண ஆள், ஆந்திராவிலிருந்து மும்பைக்கு சென்று பெத்த மாஃபியா டான் ஆகும் கதை. அதற்கான காரண காரியங்களை இயக்குநர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள். அதெல்லாம் தாண்டி நாயக பாத்திரம் எந்தளவு உறுதியாக உள்ளது, என்னென்ன விதமான வலிகளைப் பொறுக்கிறது என்பதே,  படத்தைப் பார்ப்பவர்கள் எந்த வயதாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்க்க வைக்கிறது. பேச வைக்கிறது. ‘’குற்றவாளி கிடையாது. ஆனால் குற்றவாளி போல யோசிப்பவன்” என மும்பை கமிஷனர் அஜய் கோபத்துடன் கூறும் அளவுக்கு சூர்யா அநீதியின் தலைவனாக வேலை பார்க்கிறான். கமிஷனர் அஜய் பரத்வாஜ், ‘’இனி மும்பையில் இனி எந்த டானும் இல்லை’’ என பிரஸ் கிளப்பில் கூட்டம் வைத்து பேசியபிறகுதான், மும்பைக்கு ரயிலில் வந்து இறங்குகிறான் சூர்யா. காட்சி ரீதியாகவே அவர் சொன்னதை உடைப்பதற்குத்தான் நாயகன் வருகிறான். பூரி ஜெகன்னாத்தின் ஆக்ரோஷ ஹீரோக்களில் இன்றும் ரசிக்க வைக்கும் விதமாக இருக்கும்

உதயமாகும் பேரரசன் - ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ஆனந்த் மகிந்திரா வாகனத்துறையில் வேகமாக முன்னேறி வரும் தொழிலதிபர். தொடக்கத்தில் இரும்பு உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்ட மகிந்திரா இன்று 20க்கும் மேற்பட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வருமானத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் உள்ளவர்தான், ஆனந்த் மகிந்திரா. ட்விட்டரில் தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடி அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அவரின் சிந்தனைகள் எப்படியானவை, நோக்கம் என்ன, வெற்றி சூத்திரங்கள் என்ன என்பதை அறிய நீங்கள் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும்.. அமேசான் வலைத்தளம் https://www.amazon.in/dp/B0BSLYLGBB

உங்கள் சிந்தனைப்படி வேலை செய்தால் ஜெயிக்கலாம்! - மிலி சாவேகர், இன்டீரியர்ஸ் பை மிலி

படம்
  மிலி சாவேகர் கிரியேட்டிவ் ஹெட், இன்டீரியர்ஸ் பை மிலி 2016இல் தான் சொந்த நிறுவனத்தை மிலி தொடங்கினார். அதற்கு முன்னரே மும்பையில் இருந்த ஏராளமான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். வீடுகள், வில்லா, அலுவலகங்கள் என மிலியின் குழுவினர் அலங்கார வடிவமைப்பை செய்து வருகிறார்கள். அவரிடம் பேசினோம்.  இப்படி ஒரு வடிவமைப்பு நிறுவனம் தொடங்க ஆர்வம் பிறந்தது எப்படி? வடிவமைப்பு பற்றிய ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது. நோட்டின் பக்கங்களில் எப்போதும் ஏதாவது டூடுல்களை வரைந்துகொண்டே இருப்பேன். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது இந்தியாவில் வடிவமைப்பு சார்ந்த பற்றாக்குறை, தேக்கம் இருப்பதை உணர்ந்தேன். எனவே நான் மக்களுக்கு தேவையான அலங்கார தன்மையை உருவாக்கி வழங்க நினைத்தேன்.  என்னுடைய பாணியில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பு பணிகளை ஏற்று செய்யத் தொடங்கினேன். அப்படித்தான் சொந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன்.  உங்களுக்கான ரோல் மாடல் யார் என்று சொல்லுவீர்கள்.  ஒருவரை மட்டுமே கூறுவது கடினம். எனக்கு கெல்லி வியர்ஸ்ட்லெர் வடிவமைப்பு மிகவும் பிடிக்கும். பின்ட்ரெஸ்ட் உலகில் அவரது வடிவமைப்ப

புகைப்படம் எடுப்பது என்பது வேட்டையாடுவதைப் போன்றது! - பாப்லோ பார்த்லோமியூ

படம்
  பாப்லோ பார்த்லோமியூ புகைப்படக்கலைஞர்.  எழுபது, எண்பதுகளில் இருந்ததை விட ஸ்ட்ரீட் போட்டோகிராபி என்பது எப்படி மாறியுள்ளது? இன்று ஒரு பட்டனை தட்டினால் படத்தை எளிதாக பதிவு செய்து பார்த்துவிடலாம். அன்றைய காலத்தில் நீங்கள் ரோல் பிலிமை முழுக்க படம் எடுத்து தீர்த்தால்தான் அதனை புரோசஸ் செய்து படங்களை பார்க்க முடியும். அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். நீங்கள் வெளிப்புறத்தில் இருந்தால், படங்களை எடுத்து முடித்து அதனை எடிட் செய்து பார்க்க சில மாதங்களே தேவைப்படும். 1989ஆம் ஆண்டு நான் வடகிழக்கு இந்தியாவில் இருந்தேன். அங்கிருந்த நாகா பழங்குடிகளை புகைப்படம் எடுத்தேன். பிறகு ஸ்டூடியோ வந்து அதனை எடிட் செய்து புகைப்படங்களைப் பார்க்க இரண்டு மாதங்கள் ஆனது.  இன்று நீங்கள் பார்க்கும் காட்சிகளை கண்கள் இமைப்பதை விட வேகமாக புகைப்படமாக எடுத்துவிடலாம். ஆனால் காட்சிக்கு பின்னே உள்ள நுட்பம் பற்றி யாருக்கும் தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சியை அவுட் ஆஃப் போகஸ் உத்தியில் அல்லது போகஸ் உத்தியில் எடுக்க நினைத்தால் எப்படி எடுப்பீர்கள் என்றால் பலருக்கும் பதில் தெரியாது. பழைய கால புகைப்பட கலைக்கும் இன்றைக்கும் உள்ள வேறுபாடு இத

இந்தி சினிமாக்களில் விலைமாதுக்களின் நிலை!

படம்
  பாலியல் தொழிலாளிகளையும் மதிக்கவேண்டும். அவர்கள் செய்வதும் தொழில்தான். விலைமாதுக்களையும் கௌரவமாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கௌரவம் நிஜமாக கிடைக்குமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் திரைப்படங்களில் விலைமாதுக்களை காட்டிய சினிமாக்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். இது இந்தி சினிமாக்கள் மட்டுமே.  பேகம் ஜான்  பீரியட் படம்தான். முகேஷ் பட் தயாரிக்க 2017இல் வெளியான படம். சுதந்திரத்திற்கு பிறகான விலைமாதுக்களின் நிலையைப் பேசிய படம் இது. வித்யாபாலன் தான் விலைமாதுக்களின் தலைவி. வங்காளப் படமான ராஜ்கஹினி என்ற படத்தின் இந்தி ரீமேக் இது.  மண்டி  1983ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் உருவாக்கிய படம்தான் மண்டி. படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா படேல், நஸ்ரூதின் ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதன் மூலம் உருது சிறுகதை. ஆனந்தி என்ற சிறுகதையை எழுதியவர் குலாம் அப்பாஸ். விபச்சாரத்தை நடத்துபவராக தலைவியா ஷபனா ஆஸ்மி நடித்திருந்தார். இவரது கட்டுப்பாட்டில் உள்ளவருக்கு உருவாகும்  இன்னொரு உறவால் ஏற்படும் பாதிப்புகள்தான் கதை. காமம், உடல்ரீதியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பேசிய வகையில் முக்கியமான படம். 1984ஆம் ஆண்டு மண்டி ப

காமாத்திபுராவில் பெண்கள் தபால்நிலையம்! - சாதித்த ஸ்வாதி பாண்டே

படம்
  காமாத்திபுரா பெண்கள் அஞ்சல் நிலையம், மும்பை இன்று போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கால வெள்ளத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிற ஆட்கள் போலத்தானே? உணவு, மளிகை எல்லாம் இருபது நிமிஷத்திலிருந்து பத்து நிமிஷத்திற்கு மாறிக்கொண்டிருக்கிற நிலையில் காக்கி டிரஸ் போட்டுக்கொண்டு சைக்கிளில் ஊரை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இவர்கள் தான் நிதானமாக வாழுங்கள் என குறியீடாக தங்கள் உடை, வாழ்க்கை மூலம் உணர்த்துகிறார்களோ என்னமோ? மும்பையில் பிரபலமான ஏரியா காமத்திபுரா. இங்கு பாலியல் தொழில்  நடைபெறுகிறது என்பதை சொல்லும் கடைசி ஆள் நாமாகத்தான் இருக்க முடியும். அகில உலக பிரபலமான ஆதி தொழில் இடம் இதுதான். இங்கு, பிரிவினை காலத்தில் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளின் குடும்பங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென தெரியாமல் விபச்சாரத்தில் இறங்கினர். இப்படித்தான் இங்கு இன்றுவரை விபச்சாரத்தொழில் நடைபெற்று வருகிறது. தொடக்கம் வங்கதேச அகதிகள் என்றால் உள்நாட்டிலும் பெண்களை கடத்தி இந்தியர்களும் தங்கள் பங்கிற்கு தொழிலை வளர்ச்சி பெற செய்ய உதவியுள்ளனர். வரலாற்றில் இதெல்லாம் முக்கியம்தானே?

பாலியல் தொழிலில் ஈடுபடும் சிறுமிகளை மீட்கும் பெண்மணி! - சோனல் கபூரின் மகத்தான சாதனை

படம்
  சோனல் கபூர், பிராட்சகான் இந்தியா பௌண்டேஷன் இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட சோனல் கபூரால் அந்த நாட்களை மறக்கமுடியவில்லை. அந்த நாட்கள் என்று சொல்லுவது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவம்தான். அப்போது சோனல் கபூர் குடிசைப்பகுதிக்கு தனது விளம்பர பணி காரணமாக சென்றிருந்தார். அங்குதான் ஒரு பெண்ணை சந்தித்தார். அவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். ஏழாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். இத்தனை குழந்தைகள் இருந்தால் இவர்களுக்கான உணவிற்கு என்ன செய்வது? வறுமையில்தான் இருந்தார்கள்.  வேறு வழியில்லாத அந்த தாயார் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தார். இதைப் பார்த்த சோனல் கபூர் அதிர்ந்து போனார். இப்படியெல்லாம் நடக்குமா என்றவர், அதை சரி செய்ய முயன்றார். இதற்காகவே மும்பையின் சேரி பகுதியில் திறன்களை வளர்ப்பதற்கான ஒற்றை அறை கொண்ட அலுவலகத்தை தொடங்கினார். இதன் மூலமே ஏராளமான சிறுமிகளை பாலியல் தொழிலிலிருந்து மீட்டு சமூகத்தில் பொறுப்பான பகுதியில் வாழும்படி செய்திருக்கிறார். இப்படித்தான் பிராட்சகான் இந்தியா என்ற அமைப்பு உருவானது. இதன் மூலம் 81 ஆயிரம் ஏழை சிறுமிகள் பயன் பெற்றிருக்கிறார்

முதியவர்களைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனை தொடங்கிய மருத்துவர்! - மருத்துவர் மகாலஷ்மி

படம்
மருத்துவர் மகாலஷ்மி  மகாலஷ்மிக்கு அப்போது 30 வயது. அந்த நேரத்தில்தான் தனது பெற்றோரை இழந்தார். அவர்களது இறப்பிற்கு பிறகு, சிறிது காலத்தில் அவரது மாமனார், மாமியார் ஆகியோரையும் இழந்தார். இதெல்லாம் அவரை அடுத்து செய்யவிருந்த மருத்துவமனை பணிகளைத் தடுக்கவில்லை.  அதுவரை சம்பாதித்த பணத்தையும், வங்கி கடன்களையும் இணைத்து பாலாஜி மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். இதுகூட வயதானவர்களை வேலை காரணமாக சரியாக கவனித்துக்கொள்ள முடிவதில்லை. வயதான காலத்தில் நோயும் சேர்ந்துகொள்ள அவர்களை பார்த்துக்கொள்ள மருத்துவமனை உதவியாக இருக்கும் என்றே மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்.  மருத்துவர் மகாலஷ்மி, பாலாஜி ஹெல்த்கேர் நாம் எல்லோரும் பிறக்கிறோம், வளர்கிறோம், வேலைக்கு போகிறோம், திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுகிறோம். நான் இதைத் தாண்டி ஏதேனும் ஒன்றை செய்ய நினைத்தேன் என தனது செயல்பாட்டை விளக்குகிறார் மகாலஷ்மி. 2011 ஆம் ஆண்டு மும்பைக்கு வெளியே பாட்ஷா ஆற்றுப் புறத்தில் தொடங்கிய மருத்துவமனையில் முதலில் நான்கு பேர் நோயாளிகளாக இருந்தனர். இப்போது 74 பேர் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷிசோபெரேனியா, டிமென்

சூழல் சார்ந்த கவனம் கொள்ளும் இளைய தலைமுறை - ஆதித்ய தாக்கரே- மகாராஷ்டிரம்

படம்
தாக்கரே குடும்பத்தில் அடுத்த அரசியல் வாரிசு, ஆதித்ய தாக்கரே. தேர்தலில் வென்றுவிட்டு சுற்றுச்சூழல் அமைச்சராகியிருக்கிறார். குடும்ப அரசியல் என்றாலும் கூட சூழல் குறித்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். அதுவே இவரைப் பற்றி நாம் இங்கே எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 13 முதல் சூழல் சார்ந்த பாடத்தை பள்ளிக்கல்வியில் கொண்டு வர முயற்சிசெய்து வென்றிருக்கிறார். மஜிதி வசுந்தரா என்பது இதன் பெயர். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுப்பியவர் ஆதித்யா. பின்னர், அப்பா முதல்வர் ஆன பிறகு சூழல் அமைச்சகத்தின் தலைவராக ஆனார். பிறகுதான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். மின் வாகனங்களை மும்பை சாலைகளில் ஓட்டுவதை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். கவிதை நூல் ஒன்றை பதிப்பித்துள்ளார். தனியாக ஆல்பம் ஒன்றை தயாரித்தவர், அதில் எட்டு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். சுற்றுலாவை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை மனதில் வைத்திருக்கிறார். ஹோட்டலை தொடங்க இதற்கு முன்னர் 70 முதல் 100

போதைப்பொருட்களை எப்படி வாங்குவது? - புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டால் போதும்!

படம்
  மும்பை, புனேவில் போதைப்பொருட்கள் கிடைக்கும் இடம், ஸ்கோர் அட்டா என குறிக்கப்பட்டுள்ளது போதைப்பொருட்களை விற்பதும், வாங்குவதும் இப்போது வேறு லெவலில் மாறியுள்ளது. இதனைச் செய்ய குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமாக புத்திசாலித்தனமும் தேவை. கோதிம்பிர், பிகாச்சு, ஹலோ கிட்டி, அஜினமோட்டோ, சாவல், டேண்ட்ரஃப், ஜங்கிள் பாய் ஆகிய குறியீட்டுச் சொற்களை யாராவது பேசினால் உஷாராக இருங்கள். இவைதான் போதைப் பொருட்களை வாங்குவதற்கான முக்கியமான சொற்கள்.  பொதுவாக இந்த வார்த்தைகளை கேட்கும் யாருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு போறாங்க போல, தலையில் டேண்ட்ரஃப் இருக்குதாட்ட, காமிக்ஸ் நிறைய படிப்பார் போல என நினைப்பார்கள்.  வீடு மற்றும் பள்ளிகளில் யாருக்கும் தெரியாமல் போதைப்பொருட்களை வாங்கவே இப்படி சீக்ரெட் வார்த்தைகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள் இளைஞர்கள், பள்ளிச்சிறுவர்கள்.  கோதிம்பிர் என்றால், மரிஜூவானா, டேண்ட்ரஃப் என்றால் கொகைன், பிகாச்சு என்றால் எல்எஸ்டி மாத்திரை, ஹலோ கிட்டி என்றால் எம்டிஎம்ஏ, ஜங்கிள் பாய் என்றால் கஞ்சா என்று அர்த்தம். டாஃபி என்றால் எக்டஸி மாத்திரை, ஸ்னோமேன் என்றால் கொகைன் ஏன் இமோஜி

தோல் புற்றுநோயைக் கண்டுபிடித்து மைக்ரோசாப்ட் விருது வென்ற மும்பை இளைஞர்கள்!

படம்
  மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தோல் புற்றுநோயை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இமேஜைன் விருதை வென்றுள்ளனர்.  ஆசிம் கான், சித்தார்த்தா ஜெயின் ஆகிய இருவரும் தங்களது கண்டுபிடிப்பிற்காக இமேஜைன் ஜூனியர் ஏஐ விருதை வென்றுள்ளனர். பதினேழு வயதாகும் இருவரும் ஆன்மை ஓன் டெக்னாலஜி என்ற பெயரில் கண்டுபிடிப்பு மையம் ஒன்றில் போட்டியில் பங்கு பெற்றனர். டீம் ஜிபோர்ஸ் என்பது இவர்களது குழுவின் பெயர்.  புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதனை ஆரம்ப நிலையில் அறிகுறிகளை வைத்து ஒருவர் அடையாளம் கண்டால் அதை எளிதாக குணப்படுத்த முடியும். புற்றுநோயை கண்டுபிடிக்க திசு செல்களை எடுத்து சோதிக்கிறார்கள். ஆனால் பிறப்புறுப்பில் இருக்கும் திசுக்களை எடுத்து சோதிப்பது வலி நிரம்பிய செயல்முறை. எனவே, புற்றுநோய் இருப்பதாக சந்தேகப்படும் இடங்களை புகைப்படம் எடுத்து அதனை சோதித்து உறுதி செய்யும் ஏஐ முறை பலரையும் கவர்ந்துள்ளது.  நோயைக் கண்டுபிடிக்கும் மாதிரியுடன் மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப

நான் செய்த விஷயம் காலத்திற்கும் நிலைத்து நிற்கவே நூல் எழுதினேன்! - சோனு சூட் , இந்தி நடிகர்

படம்
                சோனு சூட் திரைப்படங்களில் நடித்து வில்லனாக பெற்ற புகழை விட மனிதநேய உதவிகளால் உலக நாடுகள் வரை பாராட்டப்படும் ஆளுமை . மும்பையில் இவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரிடமே உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமைச்சர்களே சொல்லத்தொடங்கினர் , ஆனால் மாநில அரசு அவரை பாஜகவின் ஆளாக பார்த்து விமர்சித்தது . பின்னர் சோனுசூட் முதல்வரை சந்தித்த பிறகு நிலைமை மாறியது . அதெல்லாம் விடுங்கள் . ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோனு சூட்டிற்கு மனிதநேய உதவிகளை மக்களுக்கு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது . அதேநேரம் ஐயம் நோ மேசியா என தன்னுடைய சுயசரிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் . இப்படி புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது ?   பேராசிரியராக பணியாற்றி என் அம்மாதான் இதனைச் சொன்னார் . உன்னுடைய வாழ்க்கையை நீ காகித்ததில் எழுதி வைக்கவேண்டும் . அதுதான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றார் . இந்த நூலின் மூலம் கர் பேஜோ திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டவது என பலரும் அறிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன் . இதன்மூலம் பலரது வாழ்க

குழந்தைகளைக் கொல்லும் இந்திய மாவட்டம்!

படம்
தி வீக் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், வேதனையான விஷயங்களுக்கு முதன்மை பெற்றுள்ளது. ஆம் இங்கு ஏறத்தாழ 2016-18 காலக்கட்டத்தில் மட்டும் 1, 100 குழந்தைகள் இறந்துபோயுள்ளனர். காரணம் வறுமை, வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைதான். ஏழு வயதான ஜானேஷ் என்ற சிறுவனின் எடை பத்து கிலோ. தன் தாய் தலைவருடினால் மட்டுமே கண்திறந்து பார்க்கிறான். புன்னகைக்க மட்டுமல்ல அழக்கூட உடலில் சத்தில்லை. அவனுக்கு தர ஊட்டச்சத்தான சோறு தாயிடம் இல்லை. என்ன செய்ய முடியும்? இங்குள்ள ஐந்து பழங்குடி கிராமங்களில் குழந்தைகள் தினத்தன்று செய்த ஆய்வில் மருத்துவர்களே அதிர்ந்து போனார்கள். அங்கு வந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தது. பால்கர் மாவட்டம் எங்கோ தூரதேசத்தில் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். மும்பையிலிருந்து நூறு கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விரைவில் அமைக்கப்படவிருக்கும் புல்லட் ரயில் இந்த ஊரின் பாதையில்தான் அமையவிருக்கிறது. இதற்கான மதிப்பீடு 2 லட்சம் கோடி ரூபாய்கள். மும்பை தன் வருமானத்தில் 15 ஆயிரம் கோடிக்கும் குறைவாகத்தான் மக

சைக்கோ கொலைகாரர்கள் - 3 (நிலமெங்கும் ரத்தம்)

படம்
Add caption சைக்கோ கொலைகாரர்கள் 3 ரேணுகா ஷிண்டே - சீமா கவிட் ரேணு - சீமா இருவருமே தாய் அஞ்சனாபாயினால் திருட்டு பழகினர். பின்னர் குழந்தைகளை வைத்து திருடினர், ஏதாவது இடத்தில் சிக்கினாலும் தப்பிக்க கேடயம் குழந்தைகள்தான். இதற்காகவே குழந்தைகளை கடத்த தொடங்கினார்கள். சிக்கல் அங்குதான் உருவானது. 1990 - 96 முதல் ஆறு குழந்தைகளை போட்டுத்தள்ளினர். ஏம்மா கொன்னீங்க என்று கேட்டதற்கு, எத்தனைப் பேரை கொன்றோம் என எண்ணிக்கை தெரியவில்லை என கைகளின் அத்தனை விரல்களையும் விரித்தனர் கொலைகார சகோதரிகள்.தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். தக் பேஹ்ராம் 1840 ஆம்ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட கொள்ளையர். மத்திய இந்தியா வரையில் பயணித்த இக்கொள்ளையரின் ஒரே ஹாபி, வழியில் உள்ள பயணிகளை கர்ச்சீப்பினால் கழுத்தை இறுக்கி நொடியில் கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடிப்பது. இப்படி கொன்றவர்களின் எண்ணிக்கை 931(1790-1840). ஆனால் இவர் ஒப்புக்கொண்டது 125 மட்டுமே. கிளாசிக் கொலைகாரர் என சொன்னால் இவரைத்தான் சொல்லவேண்டும். ராஜேந்திர ஜாக்கல், திலிப் சுதார். சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தப், ம

சூப்பரான பயணங்களுக்கு ஏற்ற நகரம் எது?

படம்
pinterst பொதுவாக ஒரு நாட்டிற்கு எதற்கு செல்கிறீர்கள்? அங்கு அழகான இடங்கள் இருப்பதோடு, அந்நாட்டின் கலாசாரமும் ஈர்ப்பாக இருக்கும். அது ஒரு முக்கியமான காரணம்தானே? அண்மையில் எடுக்கப்பட்ட வணிகம் மற்றும் ஜாலி டிராவல் திட்டத்தில் ஜப்பானின் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின் டில்லி, மும்பையும் அதன் கலாசார விஷயங்களால் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முன்னிலை பெற்றிருந்த சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகள் கீழே சரிந்துள்ளன. அதேநேரம் பாதுகாப்பான நாடு என்றால் சிங்கப்பூரை சந்தேகமின்றி கைகாட்டலாம். போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வணிக விஷயங்களிலும் சிங்கப்பூரே டாப் ஸ்பாட். நன்றி: டைம்ஸ்