இடுகைகள்

இனவெறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அநீதியான செயல்பாட்டை நியாயப்படுத்த முடியுமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வில்ஃபிரட் பியான் என்பவர் யார்? குழு உளவியல் சிகிச்சை சார்ந்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர். குழுவின் மனநிலை என்பது தனிநபர்களின் அனுபவங்களிலிருந்து பெறப்படுகிறது. முதிர்ச்சியான ஒருவர் உலகம் முழுக்க கருப்பு, வெள்ளை இயல்பு கொண்ட மனிதர்கள் மட்டும் கிடையாது என முடிவுக்கு வருவார். அவருக்கு உலகில் உள்ள பல்வேறு குண இயல்பு கொண்ட நல்லவர்கள், கெட்டவர்கள் என பலரையும் அறிந்த அனுபவம் கைவந்திருக்கும்.  முன்முடிவு, இனவெறி என இரண்டையும் எப்படி வகைப்படுத்துவது? குழு உளவியலில் முன்முடிவு, இனவெறி என இரண்டுமே எதிர்மறையான கருத்தை அடிப்படையாக கொண்டது. வட இந்தியாவில் குறிப்பிட்ட முறையில் முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட நாடகம் நடைபெறுகிறது. முதலில் முஸ்லீம் இளைஞர், இந்துகடவுள் ஏதாவது ஒன்றை சேதப்படுத்துவதாக பச்சை செயலியில் வதந்தியைப் பரப்பவேண்டும். அதை வைத்து சிறுபான்மையினர் கடைகளை, வணிகத்தை முற்றாக புறக்கணிக்கவேண்டும். கடைகளை உடைத்து, சொத்துக்களை கொள்ளையடித்து, பெண்களை மானபங்கப்படுத்தி, வழிபாட்டுதலங்களில் பேய்க்கூச்சல் எழுப்பி அவர்களை வாழும் இடத்தில் இருந்து ...

இந்தியர்களுக்கு உண்மையை விட சாதியே பெரிது!

படம்
 இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினராக உள்ள பத்து சதவீதம் பேர் மீதியுள்ள பெரும்பாலான மக்களை வறுமையிலும், நோயிலும், அவலத்திலும் உழலுமாறு மாற்றியுள்ளதை வெளிப்படுத்தும் கட்டாயம் நமக்குள்ளது. வெளியே உள்ள உலகம், இங்குள்ள மூன்றாயிரம் ஆண்டு தீண்டாமை என்ற பிரச்னையை பற்றி அறியமாட்டார்கள். இதுபற்றிய உண்மைகளை நீங்கள் அறிய நேர்ந்தால், உங்களுக்கு கண்ணீர் வரக்கூடும். தடுக்காமல், அதை இனிமேல் சிந்தலாம். இந்தியாவின் மீது இரக்கம் கொண்டுள்ள வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் உள்ளனர். தொன்மை குடியேற்ற நாடு என பெருமை கொண்ட இந்தியா எப்படி உலக நாடுகளிடையே நோயாளியாக உள்ளது என அவர்களும் புரிந்துகொள்ள உதவும்.   இந்திய அதிகார வர்க்கத்தில் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், கலாசார, மதவாத தலைவர்கள், சாமியார்கள், இந்துமத தலைவர்கள், நிதித்துறை நபர்கள், காந்தியின் அகிம்சையைப் போற்றுபவர்கள், உண்மை, சகிப்புத்தன்மை, நீதி, சுதந்திரம்,சமத்துவம் பற்றி பேசுபவர்கள் உள்ளடங்குவார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் உலகிலேயே சரியாக இயங்குவது எந்த நாட்டில் என்றால் இந்தியாவை ச...

இந்தியர் என்ற இனவெறி பாகுபாட்டால், இசைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை!

படம்
    இசைக்கலைஞர் பார்வதி பால் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பால் இசைக்கலைஞர்களின் பாரம்பரிய இசையை உலக நாடுகளுக்கு பயணித்து கொண்டுசென்றிருக்கிறார். சனாதன் தாஸ் பால் என்பவரின் மாணவர் என்று கூறுகிறார். தான் இசைக்கலைஞர் அல்ல பால் பாரம்பரியத்தை பிரசாரம் செய்பவள் என்று கூறிக்கொள்கிறார். முதன்முதலில் எப்போது சர்வதேச மேடையில் நிகழ்ச்சி செய்தீர்கள்? 1999ஆம் ஆண்டு, எனக்கு அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கும். மனதில் அப்போது சோகமும், பயமும் இருந்தது. லெபனான் சென்று பிறகு பெய்ரூட் சென்றடைந்தேன். விமானநிலையத்தில் இறங்கி நகருக்குள் சென்றபோது, குண்டுவீச்சால் நொறுங்கிய ஏராளமான கட்டடங்களைக் கண்டேன். மக்கள் திரளான எண்ணிக்கையில் தெருவில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலைமையைப் பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சால்வடோர் டாலியின் ஓவியம் போல வினோதமான சர்ரியலிச நிலையை அ்ங்கு பார்த்தேன். இப்படியொரு நாடு இருக்கமுடியுமா என்று அன்றுதான் யோசித்தேன். கைகால்களை இழந்த குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சாலையெங்கும் பிச்சையெடுத்தபடி மக்கள் அலைந்தனர். ராணு...

பெண்கள் தங்கள் உரிமைக்காக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை - ஏஞ்செலிகா அரிபம்

படம்
        எழுத்தாளர் ஏஞ்செலிகா அரிபம் இவர், அண்மையில் பிஃப்டீன் என்ற நூலை ஆகாஈ் சத்தியவாலியோடு இணைந்துஎழுதி வெளியிட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம். பெண்கள் அரசியலில் பங்கு பெற்று பாலின பாகுபாடு, இனவெறி ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறார்கள். இதைப் பற்றிய உங்களது கருத்து என்ன? சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்த பெண் என்ற வகையில், அன்னி மஸ்கரின், பேகம் அய்ஸாஸ் ரசூல், தக்சாயணி வேலாயுதன் ஆகியோரின் போராட்டங்களை அடையாளம் கண்டுள்ளேன். ஆனால் இன்று அவர்களைப் போல தேசிய அரசியலில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. இன்றைய சூழலில் பாலின பாகுபாடு, இனவெறி தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன. சின்கி, சோமெயின், மோமோஸ் என பட்டப்பெயரிட்டு என்னை இழிவுபடுத்திவருகின்றனர். எதற்கு நீ அரசியலுக்கு வந்தாய், உன்னுடைய இனத்தைச் சேர்ந்த பெண்கள் கடைகளில் விற்பனை பெண்களாக, பரிசாரகர்களாக சிறப்பாக பணியாற்றுகிறார்களே என்ற பாகுபாடான கேள்விகளை எதிர்கொண்டுள்ளேன்.   இங்கு ஆண்களே பெண்களுக்கான வேலைகளை உருவாக்குகிறார்கள். அதை செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். பெண்கள், தங்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என குரலுயர்த்தி உரிம...

டைம் 100(2024) - சுகாதாரத்தில் இனவேறுபாடு தொடங்கி கருத்தரித்தல் ஆராய்ச்சி வரை - நான்கு சாதனையாளர்கள்

படம்
    டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் சுகாதாரத்தில் இனவேறுபாட்டை எதிர்ப்போம் ரேச்சல் ஹார்டேமன் rachel hardeman அமெரிக்காவில் கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் இனவெறி சார்ந்து இயங்குபவர்களால், கருப்பின பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் இதைக் கூற தயங்கினாலும் ரேச்சல் தைரியமாக உண்மையைக் கூறி அதற்கான தீர்வைத் தேட முயன்று வருகிறார். இனவெறியை எதிர்த்து செய்யும் ஆராய்ச்சி சார்ந்து சுகாதாரத்துறையில் உள்ள ஆழமான பிரச்னைளை அடையாளம் கண்டு மக்களுக்கு கூறுகிறார். அவர் உருவாக்கியுள்ள மாம்னிபஸ் மசோதா மூலம் கர்ப்பிணிகள் இனவேறுபாடின்றி பயன் பெற முடியும். குழந்தை பிறப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்கவும் இதில் வழியிருக்கிறது. லாரன் அண்டர்வுட் 2 போராட்டம் வழியாக நன்மை - ஷான் ஃபைன் shawn fain கடந்த ஆண்டு செப்டம்பரில் மிச்சிகன் நகரில், யூஏடபிள்யூ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர், ஷான் ஃபைன். முறையான ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதே உழைப்பாளர்களின் வாதம். சங்கத்தில் உறுப்பி...

சீனாவின் சிந்தனைகளை எண்ணவோட்டங்களை அறிய உதவும் கட்டுரை நூல்!

படம்
           கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் கட்டுரை நூல் ஆசிரியர்: மு.இராமனாதன் ♦ ♦ முதல் பதிப்பு: டிசம்பர் 2022 ♦ வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001 இந்த கட்டுரை நூல் மொத்தம் 34 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதன் வழியாக சீனா, ஹாங்காங், மியான்மர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சீனாவில் தணிக்கை முறை அமலில் உள்ளதால், அதைப்பற்றிய கட்டுரைகள் அங்குள்ள சமூக சூழல், அரசியல் அமைப்பு, கட்டுப்பாடுகள், விதிகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலில் அமெரிக்கா, மியான்மர், ஹாங்காங்கை விட சீனாவைப் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்த்தவையாக இருந்தன. இந்தியாவும் சீனாவும் ஒரே ஆண்டில்தான் சுதந்திரம் பெற்றன என்றாலும் சீனா இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உயர்ந்துவிட்டது இதை அமெரிக்கா ஏற்கிறது ஏற்காமல் போகிறது என்பது விஷயமல்ல. பல்வேறு தடைகள் இருந்தாலும் உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் தயாரித்து அதை வெளி...

இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதன் பின்னால் இரண்டு மோசமான கெட்ட விஷயங்கள் இருக்கும்!

படம்
  sly stone ஸ்லை ஸ்டோன்  அமெரிக்க இசைக்கலைஞர்  ஸ்டோன் அண்மையில் தனது எண்பது வயதில் சுயசரிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் பேசினோம்  தற்போதைய வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்? மனம் என்பதைப் பொறுத்தவரை நலமாகவே இருக்கிறேன். ஆனால் உடல்தான் சரியான நிலையில் இல்லை. எனது நுரையீரலில், பிற உறுப்புகளில் சில பிரச்னைகள் உள்ளன. இந்த ஆண்டில் காது கேட்கும் கருவியை வாங்கி அணியும்வரை ஒருவர் பேசுவது கேட்காமல்தான் இருந்தது.  நீங்கள் எழுதியுள்ள சுயசரிதையில், சில்வெஸ்டர் ஸ்டீவர்ட் திரும்ப வந்து ஸ்லை ஸ்டோனின் கதையை கூறியுள்ளதாக கூறியுள்ளீர்களே? மக்கள் என்னைப் பார்த்து எனக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். நான் மறுவாழ்வு முகாமில் இருந்தபோது அங்கிருந்த மருத்துவர் உனக்குள் உள்ள சில்வெஸ்டர் சந்திப்புகளை விரும்புகிறான். ஆனால் ஸ்லை அதை தவிர்க்கிறான் என்று கூறினார். என் அப்பாவும் இரண்டு மனிதர்களுக்கு என தனி நாட்கள் உண்டு என்று கூறினார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறேன். மக்கள் சிலவகை கடந்தகால கதைகளை கேட்க விரும்புகிறார்கள...

டைம் வார இதழ் / செயற்கை நுண்ணறிவு சாதனையாளர்கள், ஆய்வாளர்கள், தொழிலதிபர்கள் - இறுதிப்பகுதி

படம்
  ராஜி ரம்மன் சௌத்ரி யி ஸெங் சீன அறிவியல் துறை, பேராசிரியர் சீனாவைச் சேர்ந்த பேராசிரியர். யுனெஸ்கோவில் ஏஐ சார்ந்த பாதுகாப்பு விதிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை வேண்டும் என கூறுகிற மனிதர். மனிதர்களின் மூளையைப் போல செயற்கை நுண்ணறிவை உருவாக்க மெனக்கெட்டு வருகிறார். வில் ஹென்ஷால்   ரம்மன் சௌத்ரி இயக்குநர், நிறுவனர் – ஹியூமன் இன்டெலிஜென்ஸ் முன்னாள் ட்விட்டர் ஊழியர். எலன் மஸ்கால் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் அங்கு, எந்திரவழிக் கற்றல் கொள்கை சார்ந்த குழுவில் வேலை செய்தார். தற்போது ஹியூமன் இன்டெலிஜென்ஸ் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அண்மையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிய நான்காயிரம் ஹேக்கர்களை வைத்து சோதித்தார். இதன் வழியாக அதன் பாதிப்புகளை எளிதாக கண்டறிய முடிந்தது. ரம்மன் சௌத்ரிக்கு அமெரிக்க அரசு கொடுத்த ஆதரவால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.   குறைகளை கண்டறிந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்ட...

தடை செய்யப்பட்ட நூல்களை படிக்க உதவிய நூலகர்! - டைம் 100 போராளிகள்

படம்
  நிக் ஹிக்கின்ஸ் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் நிக் ஹிக்கின்ஸ்   45 புத்தக விற்பனையாளர் சங்கமே மாஃபியா குழு போல நடந்துகொண்டு சில நூல்களை விற்க கூடாது என மிரட்டும் சூழல் இருக்கிறது. சில இடங்களில் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கொண்ட நூல்களை விற்க கூடாது என காவல்துறை அதிகாரமீறல்களை செய்வது உண்டு. இந்த சூழலில் நூல்களை காப்பாற்றி வைத்து அதை வாசகர்களுக்கு கொண்டு செல்வது வேறு யார்? நூலகர்கள்தான். ப்ரூக்ளின் பொது நூலக தலைவரான நிக் ஹிக்கின்ஸ், பல்வேறு மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட நூல்களை சேகரித்து அதை டிஜிட்டலாக சேமித்து வாசகர்கள் படிப்பதற்கு உதவுகிறார். பொதுவாகவே உலகின் பல்வேறு நாடுகளில் பழமைவாதிகள், பழமைவாத அரசுகள் அமைந்து வருகின்றன. எனவே, ஏராளமான நூல்களை தடை செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக நிக் ஹிக்கின்ஸ் நிற்கிறார். நிக்கும் அவரது குழுவினரும் தடை செய்யப்பட்ட நூல்களை வாசகர்கள் படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தணிக்கை செய்வது, தடை செய்வது என்பது குழந்தைகள், வயது வந்தோர் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே ஆகும். இப்படி...

25 ஆண்டுகளாக மறக்கமுடியாத இனவெறி கொலை - கல்லறையை சேதப்படுத்தி வரும் வெள்ளையின இனவெறியர்கள்

படம்
  ஜேம்ஸ் பைர்ட் ஜேம்ஸ் பைர்டின் கல்லறை டெக்ஸாஸில் பெருகும் இனவெறி- மறக்க முடியாத இனவெறி கொலை 1998ஆம் ஆண்டு. ஜேம்ஸ் பைர்ட் என்பவர் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று விட்டு ஜாஸ்பர் கவுன்டிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மூன்று வெள்ளையினத்தவர்கள் அவருக்கு லிஃப்ட் கொடுப்பதாக கூறினார்கள். அதை நம்பி ஏறியவரை அடித்து உதைத்து இரும்புச்சங்கிலியில் கைகளைக் கட்டி, பிக் அப் டிரக்கோடு பிணைத்து சாலையில் இழுத்து சென்றனர். மூன்று கி..மீ. தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட ஜேம்ஸ் பைர்டின் எலும்புகளை அடுத்தநாள் காவல்துறை வந்து பொறுக்க வேண்டியிருந்தது. உயிர் போனதோடு, அவமானகரமான இறப்பு. அவரை அடித்துக்கொன்ற வெள்ளையர்கள் வெள்ளை இனவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள். விவகாரம் தேசிய அளவில் பேசப்பட வேறுவழி இல்லாமல் ஜேம்ஸ் பைர்ட்டைக் கொன்ற குற்றவாளிகளில் இருவருக்கு மரணதண்டனை, ஒருவருக்கு ஆயுள் சிறை கிடைத்தது. அவரது பெயரில் இனவெறுப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. ஆனாலும் கூட ஜேம்ஸ் பைர்ட் இன்று வரையில் நிம்மதியாக இல்லை. அவரது கல்லறை இருமுறை வெள்ளை இனவெறியர்க...

ஆசிரியர் வேலையா, வேண்டவே வேண்டாம் என பதறும் அமெரிக்க மாணவர்கள்!

படம்
  அமெரிக்காவில் ஆசிரியர் வேலையை கைவிடும் தலைமுறையினர்! அமெரிக்காவில் ஆசிரியர் தொழிலை கையில் எடுத்து பணியாற்றும் ஆட்கள் படிப்படியாக குறைந்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் என பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச்சூடு, குறைந்த சம்பளம், அதிகவேலை ஆகியவற்றைக் காரணமாக கூறலாம். நமது ஊரின் டெலிகிராம், டெய்லிபுஷ்பம் ஆகிய நாளிதழ்களில் வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உழைப்பு கதையெல்லாம் அமெரிக்காவில் கூட நடந்து வந்தவைதான். ஆனால், இப்போது அதுபோல எந்த மாணவரும் பேட்டி கொடுப்பாரா என தெரியவில்லை. ஒரு ஆசிரியரே பல்வேறு பாடங்களை எடுக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு ஆசிரியரின் மாணவர்களையும் சேர்த்து பார்க்கவேண்டியதிருக்கிறது என பிரச்னைகள் நீள்கின்றன.   ஆசிரியர் வேலைக்கு குறைந்தபட்ச சம்பளம் என்பது மாகாணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.அது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாறும் சம்பளம் விலைவாசிக்கு ஏற்றபடி இருக்கிறதா என்றால் இல்லை. ஆண்டுக்கு 48 ஆயிரம் டாலர்கள் என்பது மிக குறைவான சம்பளம். இதை வைத்து ஆசிரியர், அவரது மனைவி, குழந்தை என மூன்று பேர் கொண்ட குடும்பத்தை பசி, பட்டினியின்றி ஓட்டுவதே மிக கடி...

இனவெறி கொடுமைக்கு இழப்பீடு வேண்டும்! - இது பார்படோஸ் புரட்சிக்குரல்

படம்
  பார்படோஸிலுள்ள தேவாலயம் இனவெறிக்கும் கொத்தடிமைத்தனத்திற்கும் இழப்பீடு வேண்டும்! பார்படோஸ், இன்று குடியரசு நாடு, ஆனால், அங்கு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பின கொத்தடிமைகளை கொண்டிருந்தது. அங்கு விளைந்த கரும்பை விளைவித்தவர்கள் கறுப்பினத்தவர்கள்தான். கரும்பு விளைச்சலுக்கு டிராக்ஸ் ஹால் என்ற பகுதி புகழ்பெற்றது. லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக வேலை பார்க்கவைக்கப்பட்டனர். இப்படி வந்தவர்களில் வெள்ளையர்களின் கொடுமை, காலநிலை, நோய் என பல்வேறு சிக்கல்களால் முப்பதாயிரம் பேருக்கும் மேல் இறந்தனர். இந்த தொழிலாளர்களைப் பற்றிய ஆவணங்களைக் கூட வெள்ளை முதலாளிகள் மறைத்து, பின்னர் அதை நெருப்புக்கு இரையாக்கினர். அதனால் பெரிதாக நிலைமை ஏதும் மாறிவிடவில்லை. வெள்ளையர்கள் இன்றும் வசதியானவர்களாகவே வாழ்கின்றனர். கறுப்பினத்தவர்கள் இழப்புகளை சந்தித்து அதிலிருந்த மீண்டு வர பல தலைமுறைகள் ஆகிவிட்டது. இன்று அங்கு வேலை செய்தவர்களின் பேரன், பேத்திகள் என அனைவரும் இணைந்து தங்கள் முன்னோர் அங்கு கொத்தடிமைகளாக இருந்து உழைத்த உழைப்பிற்கு இழப்பீடு கேட்டு வருகின்றனர...