இடுகைகள்

மின்நிலையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாய கழிவுகளை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்? பஞ்சாப் அரசு முன்னெடுக்கும் புதிய செயல்முறை

படம்
            வி்வசாயக்கழிவுகள் மூலம் மின் உற்பத்தி ! உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மெல்ல மூடப்பட்டு வருகின்றன . நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகளவு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது . எனவே , உலக நாடுகள் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை மெல்ல மூடி புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்து வருகின்றன . இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா நகரில் செயல்பட்டு வந்த குருநானக் தேவ் மின்னாலை மூடப்பட்டது . அந்த இடமும் கூட விற்கப்பட்டுவிட்ட செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . இந்திய மின்சார ஆணையம் , ஜப்பானிய நிலக்கரி ஆற்றல் மையம் ஆகிய இரு நிறுவனங்களு்ம் இணைந்து இனி விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன . இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு , கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாடும் தடுக்கப்படும் . 2018 ஆம் ஆண்டு மேற்சொன்ன இரு நிறுவனங்களும் செய்த ஆய்வு அடிப்படையில் , 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக

வைக்கோலில் இருந்து மின்சாரம்

படம்
வைக்கோலில் இருந்து மின்சாரம் சாத்தியமா? வைக்கோல்களை எதற்கு பயன்படுத்துவார்கள். மாடு திங்க அல்லது காட்டில் தீ வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். ஆனால் அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதீப் அகர்வால், அனு பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழு, பயோ எத்தனால் அல்லது மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகிறது. பனிரெண்டு மெகாவாட் மின்நிலையத்திற்கு வைக்கோல்களை மிகச்சிறந்த எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என்கிறது பிரதீப், பிரசாந்த் ஜோடி. நம் கண்முன் இதற்கு உதாரணமாக சீனா உள்ளது. அங்கு வைக்கோல்களை மின் நிலையத்திற்கு எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். நன்றி: பிசிக்ஸ். ஆர்க்