இடுகைகள்

சவப்பெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வைத்தியரின் கல்லறையைத் திருடச்செல்லும் நல்லவர்களின் கூட்டம்!

படம்
  மெடிசின் கிங் காபின் சீன திரைப்படம்  ஒருமணிநேர படம்  நாயகன், சிறு மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு ஒரு இளம்பெண் வருகிறாள். வந்தவள், தன்னுடைய மாமா, நாயகனின் அப்பாவுடன் மெடிசின் காபின் பள்ளத்தாக்குக்கு சென்றார். ஆனால் திரும்பவில்லை. உன்னுடைய அப்பா தான் வராதபோது மகன் உன்னை அழைத்துக்கொண்டு அதே இடத்திற்கு செல்லச்சொன்னார் என கடிதம் ஒன்றைக் காட்டுகிறாள். நாயகனின் உதவியாளர் அவளை கிண்டல் செய்து பேச, மருத்துவமனையில் சண்டை தொடங்குகிறது.  நாயகியின் இனக்குழுவில் 35 வயதுக்கு மேல் யாருமே வாழ்வதில்லை. ஆயுள் முடிந்துவிடும் சாபம் உள்ளது. அதை சரிசெய்யவே அவள், நாயகனை அழைத்துக்கொண்டு பள்ளத்தாக்குக்கு சென்று நோய்க்கு தீர்வறிய நினைக்கிறாள். கூடவே, வெளிநாட்டு மருத்துவர்களின் வற்புறுத்தலில் ரவுடி ஒருவரும் நாயகனை அதே இடத்திற்கு செல்லலாம் வா என்று அழைக்கிறார். நாயகனுக்கு அங்கு செல்வதில் பெரிய விருப்பமும் இல்லை. மறுப்பும் இல்லை. அவன் அங்கு சென்று எதையும் பெறவேண்டும் என நினைக்கவில்லை.  நாயகன், நாயகி, கூடவே மொட்டைத்தலை வெளிநாட்டுக்காரர்களின் கையாள் ஆகியோரோடு போகும்போது, சிறு கொள்ளைக்கூட்டமும் அவர்களோடு