இடுகைகள்

நைட்ரஜன் அபாயம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்படாமல் அதிகரிக்கும் நைட்ரஜன்!

அபாய அளவில் நைட்ரஜன் ! கார்பன் வெளியீடு பற்றி உலகே பயந்துகொண்டிருக்க நைட்ரஜன் அளவு அபாயகர அளவை எட்டிக்கொண்டிருக்கிறது . கார்பன் , ஆக்சிஜன் , நைட்ரஜன் , பாஸ்பரஸ் , சல்பர் ஆகிய வேதிப்பொருட்கள் பூமியில் நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமானவை . வளிமண்டலத்திலுள்ள 78% நைட்ரஜனை நேரடியாக பயன்படுத்தமுடியாது . இதனை அம்மோனியம் அல்லது நைட்ரேட் அயனிகளாக்கி பயன்படுத்தலாம் . தாவரங்கள் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடை நேரடியாக உள்ளிழுக்கும் ஆனால் நைட்ரஜனை அப்படி செய்யமுடியாது . மூன்று அணுக்களால் இணைக்கப்பட்ட நைட்ரஜன் உயர் வெப்பநிலையில் மட்டுமே உடையும் . நீர் , நிலம் , காற்று மூன்று இடங்களிலும் மனிதர்களின் பயன்பாட்டில் நைட்ரஜன் அளவு சத்தமின்றி அதிகரித்துவருகிறது . பாக்டீரியா  மூலம் நைட்ரஜனை உடைக்கலாம் அல்லது மின்னல் மூலம் நைட்ரஜனை ஆக்சிஜனுடன் இணைத்து நைட்ரஜன் ஆக்சைடாக மாற்றி பயன்படுத்தலாம் . N,Nr என இருவகை நைட்ரஜன்கள் உண்டு . அம்மோனியா , அம்மோனியம் , நைட்ரஜன் ஆக்சைடு , நைட்ரிக் ஆக்சைடு , நைட்ரஸ் ஆக்சைடு , நைட்ரேட் ஆகியவற்றோடு யூரியா , புரோட்டீன் , நியூக்ளிக் அமிலங்களில் நைட்ரஜன் உண்ட