இடுகைகள்

எர்டோகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எர்டோகனுக்கு ஆதரவில்லாத நிலைமை - உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

படம்
  துருக்கியில் அதிபருக்கு எதிரான நிலை - உள்ளூர் நிர்வாகத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி துருக்கியில் அதிபராக உள்ளவர் ரிசெப் எர்டோகன். இவரது கட்சி, நீதி மேம்பாட்டு கட்சி. அண்மையில் அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிகாரத்தை சுவைத்து வரும் எர்டோகனுக்கு இது பெரிய சறுக்கல்.  துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, குடியரசு மக்கள் கட்சி. இந்த கட்சியினர், உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு 36 முனிசிபாலிட்டிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், புர்சா, அன்டால்யா ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளடங்கும்.  தேசிய அளவிலான தேர்தலில் எர்டோகன் வென்று ஓராண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் அதிபருக்கும், அவரது கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தேர்தலில் எதிர்க்கட்சிகள் 37 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 2019ஆம் ஆண்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிபரின் நீதி மேம்பாட்டுக் கட்சி, 36 சதவீத வாக்குகளை உள்ளூர் தேர்தலில் பெற்றது. அதிபரின் கட்சி, இஸ்தான்புல் நகரை இழந்துள்ளது குறிப்பிடத்தக

எர்டோகனின் தோல்வி கூறுவது என்ன?

படம்
துருக்கி அதிபர் எர்டோகன்\ தி எகனாமிஸ்ட் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், அங்காராவில் தோற்றுப் போய் உள்ளார். 2003 ஆம் ஆண்டிலிருந்து அதிபராக இருந்து வருபவர், எர்டோகன். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு மக்கள் கட்சி 51 சதவீத வாக்குகளுடன் வென்றிருக்கிறது.  நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடந்த கலகத்திற்கு பிறகு இது துருக்கி அதிபரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. எர்டோகன் இன்றும் 44 சதவீத ஆதரவுடன் வலுவாகவே இருக்கிறார். அண்மையில் நடந்த மேயர் தேர்தல், மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் என்பதையே உணர்த்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு எர்டோகனுக்கு எதிராக நடந்த கலகத்தை அவரே முன்னின்று ஒடுக்கினார். அதிலிருந்து அமெரிக்காவுக்கு எதிரான போரை நடத்தத்தொடங்கினார் இதனால், நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கி சரிந்துள்ளது. எர்டோகனுக்கு இப்போது எதிரான மனநிலை உருவாகியுள்ளது. குர்தீஷ் மக்கள் ஜனநாயக கட்சி இதற்கான பலன்களைப் பெறப்போகிறது. இதன்விளைவாக, முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்யவே தயங்குகின்றனர். அரசியல்