இடுகைகள்

சீன அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளிநாட்டில் தேடிய வணிக வாய்ப்புகளும், சவால்களும்!

ஹூவெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என இருப்பது ரென் கிடையாது. ரிலையன்ஸின் திருபாய் அம்பானி போன்ற டெக்னிக்தான். ஊழியர்கள் தான் உரிமையாளர்கள். மொத்தம் 1 லட்சம் பேர். அவர்களின் பெயர்களைக் கூட பொறித்து வைத்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஐந்து நண்பர்கள் ஹூவெய் நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர். பிறகு 2000ஆம் ஆண்டிற்குள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.    அமெரிக்காவில் முக்கியமான நிறுவனம் ஏடி அண்ட் டி. இந்த நிறுவனத்தின் பெல் லேப்ஸில் ஆய்வு செய்து ஏராளமான காப்புரிமைகளை பெற்று வந்தனர். இவர்களின் துணை நிறுவனமாக லூசென்ட் டெக்னாலஜி என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்ப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொடங்கிய  இந்த நிறுவனம், 2006ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இத்தனைக்கும் எம்ஐடியின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்ற நிறுவனம் தான் லூசென்ட் டெக்னாலஜி.   பின்னாளில் சரிவை தடுத்து நிறுத்த அல்காடெல்லுடன் லூசென்ட் டெக்னாலஜி சேர்க்கப்பட்டது. ஆனாலும் பயனில்லை. நஷ்டப்பட்டு திவாலாகும் வங்கியை, நன்றாக இயங்கும் வங்கியோடு சேர்த்தால் அது சிறந்த ராஜதந்திரமாகுமா என்ன? அப்ப

முஸ்லீம்களை உளவு பார்க்கும் சீன அரசு!

படம்
நேர்காணல் சீனா, தன் நாட்டிலுள்ள இய்கூர் மற்றும் துருக்கிய முஸ்லீம்களை கவனமாக பார்த்து கட்டுப்படுத்த குறிப்பிட்ட ஆப்பைப் பயன்படுத்துகிறது. இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தால் ஒருவரின் மின்கட்டணம் இணையம் முதற்கொண்டு கண்காணிக்க முடியும்.  ஐஜேஓபி பற்றி கூறுங்கள்.  நாடு முழுக்க ஒரே கணினியில் கொண்டுவரும் கண்காணிப்புத் திட்டம் இது. செக் போஸ்ட்,மக்கள் ஒன்றுகூடும் இடங்கள், பள்ளிகள் தெரு என அனைத்து இடங்களிலும் இந்த கண்காணிப்பு உண்டு. ஜின்ஜியாங் பகுதியில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது ஆபத்தான கண்காணிப்பு திட்டமாக மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. ஆப்பின் செயல்பாடு பற்றிக் கூறுங்கள்.  நீங்கள் அரசு கூறும் விதிகளை மீறீனாலே ஆப் தானாகவே அருகிலுள்ள அதிகாரிக்கு செய்தி அனுப்பி விடும். நீங்கள் என்ன வலைத்தளத்தை பார்க்கிறீர்கள். அதில் வன்முறையைத்தூண்டும் விஷயங்கள் உண்டா? விபிஎன் பயன்படுத்துகிறீர்களா? வேறு என்ன ஆப் பயன்படுத்துகிறீர்கள் என அத்தனை விஷயங்களையும் கண்காணிப்பு ஆப் பதிவு செய்யும்.  எப்படி இந்த ஆப் இப்படி கண்காணிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது? ஐஜேஓபி என ஆப் ஸ்டோரில் த

மாணவர்களின் விரல்ரேகைகளை விற்கிறதா சீனா?

படம்
ஐக்யூ ஸ்கேனர்கள் உண்மையா? சீனாவில் சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்தது பரபரப்பான நிகழ்வாகியுள்ளது. இதன் விளைவாக,  கல்வித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. சென்ஷென் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி மீது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஷாங்காய் ஆவோடியன் இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ற நிறுவனம் இந்த ஐக்யூ மெஷினை உருவாக்கியுள்ளது.  இவர்கள் மாணவர்களின் விரல்ரேகைகளை பெறுவதாக தகவல்கள் கிளம்பியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒருவரின் பலம், பலவீனத்தை அறியலாம் என்று கூறுகின்றனர். தலையில் சென்சார் கொண்ட கருவியை மாட்டி அதனை விரலால் அழுத்தினால் இக்கருவி ஐக்யூவை அளவிடுகிறது. நாடு முழுவதுமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இச்சோதனைக்கு உட்பட்டுள்ளனர். ஒரு குழந்தைக்கு 30 டாலர்களை வசூலிக்கிறது. சுரண்டல் ஐக்யூ ஸ்கேனர் நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தாலும் கம்பெனி அதனை உறுதியாக மறுத்துவிட்டது. மேலும் இக்கருவியை கல்வித்துறை அங்கீகரித்துள்ளதும் மற்றொரு வலுவான காரணம். நன்றி: சீனா மார்னிங் போஸ்ட்.