இடுகைகள்

நோய்த்தாக்குதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணுமாற்ற உணவுகள்!

படம்
  மரபணு மாற்ற உணவுகள் உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப உணவுப்பயிர்களை விளைவிப்பது கடினம். எனவே, விளையும் பயிர்களிலுள்ள மரபணுக்களை மாற்றியமைத்து அதனை ஊட்டச்சத்து கொண்டதாக மாற்றுவதை அறிவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். இதைத்தான் மரபணுமாற்ற பயிர்கள் (GM Foods) என்கிறார்கள். மரபணு மாற்ற பயிர்களில் பூச்சித்தாக்குதல் குறைவு, சத்துகள் அதிகம், குறைந்த நீரே போதுமானது என நிறைய சாதகமான அம்சங்கள் உண்டு. இவை பல்வேறு தரப்பரிசோதனைகளைச் சந்தித்து சந்தைக்கு வருகின்றன. ஆனால் சூழலியலாளர்கள் மற்றும் இயற்கை விவசாயிகளில் சிலர், நீண்டகால நோக்கில் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கூறிவருகின்றனர்.  தொண்ணூறுகளில் ஹவாய் தீவில் பப்பாளித் தோட்டங்களை ரிங்ஸ்பாட் என்ற வைரஸ் தாக்கியது. இதன் விளைவாக, அங்கு பப்பாளி தோட்டங்கள் வேகமாக அழியத் தொடங்கின. இதைத் தடுக்க அறிவியலாளர்கள் ரெயின்போ (Rainbow Papaya) என்ற பெயரில்  பப்பாளியை உருவாக்கினர். இது வைரஸ் தாக்கமுடியாதபடி மரபணுக்களை அமைத்து உருவாக்கியிருந்தனர். இதனால் அங்கு மீண்டும் பப்பாளித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.   

சுவையூட்டப்பட்ட தக்காளி ரெடி!

மரபணு மாற்றப்பட்ட தக்காளி! தக்காளி முக்கியமான காய்கறி என்பதில் சந்தேகமில்லை. நாட்டுத்தக்காளி என்பது பழுப்பதும் தெரியாது, கெட்டுப்போவதும் தெரியாது. எனவே ஷெல்ஃபில் வைத்தால் காலகாலத்துக்கும் கண்ணுக்கு இனிமையாக அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதானே லாபம் பார்க்க முடியும். இதற்காகவும் நோய்த்தாக்குதல்களைக் குறைக்கவும் மரபணு மாற்றப்பட்ட தக்காளிகளை உருவாக்கினர். பாய்ஸ் தாம்சன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நாட்டுத்தக்காளியின் மணம், சுவையைக் கொண்ட 725 என்ற மரபணுக்களைக் கொண்ட தக்காளி இது. 4873 மரபணுக்களைக் கண்டறிந்து அதிலிருந்து இதனை உருவாக்கி உள்ளனர். விவசாயிகள் இதன்மூலம் சுவையான தக்காளிகளை உருவாக்கலாம்.  நாங்கள் உருவாக்கிய தக்காளிகளின் வரிசை 2012 இல் வெளியானது. 35 ஆயிரம் மரபணுக்களை ஆராய்ந்துள்ளோம். இவற்றை வரிசைப்படி பட்டியலிட்டுள்ளோம். இவ்வகையில் 166 வரிசைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். புதிய மரபணுக்கள் மூலம் உருவாக்கியுள்ள தக்காளிகளை நீங்கள் பயிரிட்டு எலைட் தக்காளிகளை உருவாக்கலாம். மேலும் இதில் நோய்த்தாக்குதலும் குறைவாக இருக்கும் என்கிறார் அறிவியலாளர் ஜேம்ஸ் ஜியோவன்னோனி. நன்றி: பிசிக்ஸ்