இடுகைகள்

பார்க்கின்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனை முகரும் திறன் - சில சுவாரசியங்கள்

படம்
  கோவிட் வந்தபிறகு ஒருவருக்கு வாசனை உணரும் திறன் போய்விட்டாலே அருகிலிருப்பவர் உடனே அலுவலகத்தில் மனிதவளத்துறை மேலாளருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு மாநகராட்சி வார் ரூமுக்கு போன் செய்து சொல்லிவிடுகிறார்.அந்தளவு மரணபயத்தை கோவிட் -19 ஏற்படுத்திவிட்டது.  யாராவது இருமுறை தும்மினாலோ, இருமினாலோ கூட அவர் பாக்கெட்டில் கையைவிட்டு ஸ்ரீ  ராம் மெடிக்கலில் போய் டாபர் ஹனிடசை வாங்கி வந்து கொடுத்து கூட காப்பாற்றிவிடுவார்கள். அந்தளவு பாழும் பயம் மனதை பாடாகப் படுத்துகிறது. எதுவாக இருந்தாலும் சரி, நாம் இங்கு வாசிக்கப்போவது வாசனை பற்றி மட்டும்தான்.  கோவிட் -19 வந்தவர்களை கண்டுபிடிக்க காய்ச்சலை சோதிப்பது கூட ஒருகட்டத்தில் குறைந்துபோய் வாசனை சோதனைகளை செய்திருக்கின்றனர். அதுவும் அறிகுறிகளில் ஒன்றுதானே என்பதுதான் காரணம். நோய்த்தாக்கம் குறைந்தபிறகு வாசனைகளை முகரும் திறன் மெல்ல இயல்புக்கு மீண்டு வந்திருக்கிறது.  வயதாகும்போது இயல்பாகவே வாசனைகளை முகரும், இனம் கண்டுபிடிப்பது குறைந்துவிடும். செல்கள் அழியத் தொடங்குகிறது அல்லவா?  அதனால்தான்.  வாசனை முகர்ந்து பார்த்து கண்டுபிடிப்பது குறைந்து வந்தால் அதனால என்னப்பா என ச

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நினைவுகளை பாதிக்கும்- இரு நோயாளிகளிடம் செய்த பரிசோதனைகள்

படம்
                  மூளையும் நினைவுகளும் மருத்துவத்துறையில் மூளை நரம்பியல் இன்று வெகுவாக முன்னேறிவிட்டது . ஆனால் அதில் ஏற்பட்ட துல்லியமான அனைத்து மாற்றங்களையும் வெகுஜன மக்கள் அறியமுடியாது . திரைப்படங்கள் அந்த வேலையை செய்தன . தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்தவர் , பைத்தியம் ஆனவர் , கோமா நிலைக்கு சென்றவர் என பல்வேறு மனிதர்களை செல்லுலாய்டில் உலவ விட்டனர் . இதில் சுந்தர் சி போன்ற இயக்குநர்களின் படங்களில் கட்டையால் அடித்தால் கண்டிப்பாக ரத்த த்தைவிட மயக்கம்தான் வரும் எனும் டுபாக்கூர் விஷயங்களும் வெளிவந்தன . பின்னாளில் அவரே தன்னுடைய படத்தில் லாஜிக் பார்த்தால் எப்படி என்று சொல்லிவிட்டதால் , அவரை விமர்சிக்க ஏதுமில்லை . இப்போது ஒரு நோயாளி பற்றி பார்ப்போம் . அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி மொலைசன் . இவரது ஏழு வயதில் மோட்டார் பைக் விபத்தில் தலையில் அடிபட்டது . அதிலிருந்து டெம்பொரல் லோப் பகுதி பாதிக்கப்பட்டு வலிப்பு பிரச்னைஉருவானது . வலிப்பு தொடர்பான மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினார் . ஆனாலும் 27 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது . மருத்துவர் ஸ்கோவில்லே இவருக்கு