இடுகைகள்

கால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பும் கொலைவெறியும் மனதில் ஊற உருவாகிறான் ஊனக்கால் கொலைகாரன்!

படம்
  ஃபிஸ்ட் டிமோன் ஆஃப் மவுண்ட்குவா  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம். மனம் நிறைய வலியும் வேதனையும் மட்டுமே நிறைந்த நாயகனின் கதை.  கொள்ளையர்கள் ஒரு ஊரை வந்து தாக்குகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவைக் கொல்கிறார்கள். மகனையும் அடித்து உதைத்து குற்றுயிராக்கிவிட்டு அவன் தங்கையைக் கடத்திச்செல்கிறார்கள். அந்த சிறுவனை மவுன்ட் குவாவைச் சேர்ந்த கல்வியாளர் ஹியூன் சோ காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார். கொள்ளையர்களின் தாக்குதல் காரணமாக அவனுக்கு இடதுகால் ஊனமாக மாறுகிறது. இடதுகால் தொய்ய, வலது காலால் அடியெடுத்து வைத்து நகர்வதுதான் அவனது பாணி. அவனுக்கு சியோயங் என பெயர் வைக்கிறார்.  தற்காப்புக்கலைக்கு கால்கள் முக்கியம். அதுவே பழுதானதால், ஹியூன் சோவின் மாணவனாக இருந்தாலும் நொண்டி, அவமானச்சின்னம், நாய் என மவுன்ட் குவா இனக்குழுவில் அனைவருமே அவனை கேலி செய்கிறார்கள். உனக்கெல்லாம் தற்காப்புக்கலை எதற்கு என இழிவுபடுத்துகிறார்கள். ஆனால், சியோயங்கிற்கு ஒரு கிராமத்தை, அதிலும் தன் குடும்பத்தை அழித்த கொள்ளைக்காரர்களை யாரும் தண்டிக்கவில்லை என்ற ஆத்திரம், ஆதங்கம் உள்ளது. ஒரு கிரா

உசைன் போல்டின் வேகத்தை எப்படி கணக்கிடுவது?

படம்
  கணிதம்  உசைன் போல்ட் தடகளத்தில் மின்னலாக பாய்வது எப்படி? கலை என்பது பொய். அதுவே நம்மை உண்மையை உணர வைக்கிறது என்று சொன்னவர் ஓவியர் பாப்லோ பிகாசோ. நுண்கணிதம்(calculus) கூட அப்படித்தான். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பீஜிங்கில் உசேன் போல்ட், நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள ட்ராக்கில் நின்றுகொண்டிருந்தார். உண்மையில் 200 மீட்டரில் ஓடிக்கொண்டிருந்தவர் போல்ட். ஆனால் திடீரென பயிற்சியாளரிடம் நான் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறேன் என பிடிவாதம் பிடித்து பெற்றதுதான் இந்த வாய்ப்பு.  அவரின் கூடவே நின்ற எட்டு தடகள வீரர்களும் நூறு மீட்டரில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. போல்ட் யாரையும் ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. என்ன காரணம், தன்மீதுள்ள நம்பிக்கைதான். கிரிக்கெட் மற்றும் கால்பந்தில் ஆர்வம் காட்டிய போல்டை, அவரது முன்னாள் பயிற்சியாளர் தடகளத்தில்  முயற்சிக்கலாமே என்ற வழிகாட்டினார். அன்றையை ஓட்டத்தில்  எட்டு வீரர்களில் ஏழாவதாக ஓடிக் கொண்டிருந்தவர், 30 மீட்டர் தூரத்தில் வித்தியாசத்தைக் காட்டினார். புல்லட் ரயிலாக பாய்ந்தவர் 9.69 நிமிடங்களில் நூறு மீட்டரைக் கடந்தார்.  இவர் நூறுமீட்ட

ஜாலி திருவிழாக்கள்! - கால்களால் போட்டியாளரின் காலைத் தோற்கடித்தால் வின்னர்!

படம்
  வீடு, ஆபீஸ் என உழைத்தாலும் கிடைக்கும் நேரத்தில் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுத்தருபவை திருவிழாக்கள்தான். உறவுகள்,நட்புகள் ஒன்றுசேர்வதோடு, ஆடியும் பாடியும் மகிழ்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது உடலுக்கும் மனதையும் உற்சாக டானிக்.  அப்படிப்பட்ட சில வினோத விழாக்களில் சில.   லா டொமாட்டினோ (ஸ்பெயின்) ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழாவை உலகமே இன்று கவனிக்கத் தொடங்கிவிட்டது. வாலென்சியா அருகிலுள்ள புனோல் கிராமத்தில் தக்காளி கொண்டு வந்து குவிக்கப்படுகிறது. உடனே பாய்ந்து தக்காளியைக் கையில் எடுக்கும் மக்கள், ஒருவருக்கொருவர் வீசி எறிந்து விளையாடுவார்கள். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதற்காகவே ஸ்பெயினில் குவிகிறார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தொடங்கும் இவ்விழா பெரும் புகழ்பெற்றது.  பர்னிங் மேன் (அமெரிக்கா) அமெரிக்காவின் ரெனோ நகருக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் பர்னிங் மேன் திருவிழா நடைபெறுகிறது. இருவாரங்கள் நடைபெறும் திருவிழாவுக்கு உலக நாடுகளிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள்  குவிகின்றனர்.  இதில் பல்வேறு கலைஞர்கள், புதுமையான கலைப் படைப்புகளை உருவாக்கி காட்சிக்கு வைக்கின்