இடுகைகள்

திறந்தவெளி சிறை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திறந்தவெளி சிறைகள் ஏன் தேவை?

படம்
மனிதர்களை சுதந்திர பறவையாக்கும் திறந்தவெளிசிறைகள்!  ஆங்கிலேயர் காலகட்ட வெளிச்சம் வராத, துண்டுதுக்கடா இடத்தில் மூட்டைப்பூச்சிகளுடன் வாழ்ந்த பரிதாபம் இனி கைதிகளுக்கு கிடையாது. கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம், பெருமளவு திறந்தவெளி சிறைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய அரசியலைப்பு சட்டப்படி, தண்டனைக் குற்றவாளியை சிறைவைப்பது, தவறை உணர்ந்து திருந்தி சமூகத்திற்கு திரும்பி வரச்செய்வதே தவிர, தவறுசெய்தவரை ஒழித்துக்கட்டுவதல்ல. காலனியாதிக்க சட்டங்களில் மரணதண்டனை இன்னும் இந்தியாவில் இருந்தாலும் அவை ஒருவருக்கு விதிக்கப்படுவது அரிதானவையே. திறந்தவெளி சிறைச்சாலை என்ற கான்செப்ட் நமக்கு புத்தம் புதிதான ஒன்றல்ல. 1957 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான Do Aankhen Barah Haath. எனும் திரைப்படத்திலேயே திறந்தவெளி சிறை கருத்து பெரும் புகழ்பெற்றது. கௌரவ் அகர்வால் என்ற வழக்குரைஞரின் பொதுநலவழக்கில்தான் திறந்தவெளி சிறை குறித்த அறிவுறுத்தலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது 63 திறந்தவெளி சிறைகள் செயல்பட்டு வருகின்றன. எதற்

"கைதிகளை பழிவாங்குவது நீதியின் நோக்கமல்ல"

படம்
"குற்றவாளிகளை கருணையோடு அணுகாவிட்டால் அவர்கள் மாபெரும் குற்றவாளிகளாக மாறுவார்கள்" மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் குற்றங்களை அணுகும் விதம் நிச்சயம் வேறுபடும்.  பெரும்பாலான குற்றங்களுக்கு  இந்திய நீதிமன்றங்கள் சிறைதண்டனைகளையே விதிக்கின்றன. காரணம், குற்றவாளிகளை திருத்துவதே நீதித்துறையின் நோக்கம். குற்றவாளிகளை முழுமையாக அழிப்பதல்ல. ஆனால் மேற்கத்திய நாடுகளில் மின்சாரமா, விஷ ஊசியா, தோட்டக்களா என்ற தேர்வு மட்டுமே குற்றவாளிகளின் சாய்ஸ்.  அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் திறந்தவெளி சிறைகளை உருவாக்கினர். இந்தியாவில் 1953- 1955 காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் திறந்தவெளி சிறைகள் உருவாயின. இன்றுவரையும் இந்தியாவில் இயங்கும் 63 திறந்தவெளி சிறைகளில் பெஸ்ட் , ராஜஸ்தானுடையதுதான். அங்கு 29 சிறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மட்டுமல்ல; கேரளா, மகாராஷ்டிரா தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் திறந்தவெளி சிறைகள் உண்டு.  ராஜஸ்தான் சிறைகளின் வெற்றிகளை பார்த்தே உச்சநீதிமன்றம் கடந்தாண்டு திறந்தவெளி சிறைகளை மாநில அரசுகள் உருவாக்கி வி