இடுகைகள்

அறிவியல்- தொழில்நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றவாளிகளுக்கு வலைவீசும் அமேஸான்!

படம்
போலீசுக்கு உதவும் அமேஸான் ! அமேஸான் இணையத்தில் நூல்கள் , பொருட்கள் விற்பதோடு மென்பொருட்களையும் விற்கத்தொடங்கியுள்ளது . அதில் ஒன்றுதான் Rekognition எனும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் கொண்ட முகமறியும் மென்பொருள் . விரைவில் இதனை காவல்துறைக்கு அமேஸான் வழங்கவிருக்கிறது . அமெரிக்க சிவில் லிபர்டிஸ் யூனியன் (ACLU) வெளியிட்ட அறிக்கை மூலம் இத்தகவல் கிடைத்துள்ளது . விரைவில் அமெரிக்க மாநிலங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் அமேஸான் கைகோர்க்கவிருக்கிறது . தற்போது அமேஸானின் மென்பொருள் வாஷிங்டனில் பயன்பாட்டிலிலுள்ளது . பாதுகாப்பு மற்றும் போலீசாரின் சீருடையிலுள்ள கேமராக்களையும் அமேஸான் மென்பொருள் கட்டுப்படுத்தும் என்பதால் போலீசாரின் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் குறையக்கூடும் . இங்கிலாந்தில் நடைபெற்ற இளவரசர் ஹாரி திருமணத்தில் அமேஸான் மென்பொருளின் வீடியோவில் நூறுபேரின் முகங்களை அடையாளமறியும் திறன் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது . அமேஸானில் பல லட்சம் குற்றவாளிகள் கொண்ட தகவல்தளம் மூலம் குற்றவாளிகள் இனி பிடிபடுவது உறுதி . 

பாலினத்தை கணிக்கும் தொழில்நுட்பம்!

படம்
பாலினத்தை கணிக்கும் தொழில்நுட்பம் ! பாலம் ஒன்றில் பைக்கில் செல்கிறீர்கள் . அருகிலுள்ள பர்கர் விளம்பரத்தில் நீங்கள் பார்க்கும்போது அசைவ ஐட்டங்களும் , பெண்கள் பார்க்கும்போது விளம்பரம் மாறி சாலட் ஐட்டங்களும் வந்தால் எப்படியிருக்கும் ? எதிர்காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது .  பாலினத்தை மைக்ரோ கேமராக்கள் மூலம் கணித்து அதற்கேற்ப டிஜிட்டலாக விளம்பரங்களை ஒளிபரப்பும் கலாசாரம் தொடங்கிவிட்டது . நார்வேயைச் சேர்ந்த பீட்ஸா இதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது . தானியங்கியாக ஒருவரை ஆணா , பெண்ணா என கண்டறிந்து விளம்பரங்களை ஒளிபரப்பும் இத்தொழில்நுட்பம் சோதனைமுறையில் உள்ளது . மாற்றுப்பாலினத்தவர்கள் , கருப்பினத்தவர் ஆகியோரை தொழில்நுட்பம் மூலம் விலக்குவது நடந்துவரும் நிலையில் இந்த ஆராய்ச்சி அதனை இன்னும் வேகமாக்கும் . கேமராக்கள் , மைக்ரோபோன்கள் மற்றும் கணினிகள் மூலம் ஒருவரின் நடை , உடை , உடல்மொழி ஆகியவற்றை இன்று எளிதாக கணிக்க முடியும் . மேலும் வீடுகளில் கடைகளில் வைக்கப்படும் பாதுகாப்பு கேமராக்களில் ஒருவர் பதிவாகாமல் நகரில் ஒருவரின் தினம் முடிவடைவதில்லை . ஆசியர்கள் பலரது ம