இடுகைகள்

கன்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

படம்
            உண்மையும் உடான்சும்! பசு , தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது ரியல் : உண்மைதான் . எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ , அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு . பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள் . இது அனுபவத்தால் ஏற்படுவது . 2014 ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம் , நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர் . மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும் ரியல் : உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும் . இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது . இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது . தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம் . உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு , அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள் , இரவில் போதிய தூக்கமின்மை ஆகியவையும் மாலையில் உடல