இடுகைகள்

வினோத் மேத்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உரையாடல்களில் வல்லவரான தேவன் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  24.1.2022 அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். உடல்நலமும் மனநலமும் மேம்பட்டிருக்க பேரிறையை வேண்டுகிறேன். பத்து நாட்களுக்கு முன்னர் ஆர்டர் செய்த வினோத் மேத்தா பற்றிய நூல் இன்றுதான் கைக்கு வந்தது. டிஹெச்எல் ப்ளூடர்ட் ஆட்கள் கூரியரில் கிடைத்தது. அவுட்லுக் பத்திரிகை நிறுவனர், ஆசிரியரின் சுயசரிதை நூல். இனிமேல்தான் படிக்கவேண்டும். அரசின் மின்நூலகத்தில் மறைமலையடிகள் கடித நூலை தரவிறக்கிப் படித்தேன். தமிழ் சொற்களின் பயன்பாடு நன்றாக உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் ஆண்டு அடிப்படையில் தொகுக்கப்படவில்லை. கடிதத்ததில் உரிய பெயர்களும் கூட இல்லை. மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாம் பாகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். மனிதரின் குணத்தை உடனே வெளிப்படுத்தும் தெரிந்துகொள்ளும் வகையிலான உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் வல்லவராக இருக்கிறார். உறவினர்களால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்த வேதாந்தம் எப்படி சென்னைக்கு வந்து பத்திரிகையாளராகி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்பதே கதை. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி அன்பரசு படம் - ஞானசம்பந்தன் வலைத்தளம்

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரி