இடுகைகள்

சிறுபான்மையினர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமியர்கள் மீது இந்திய அரசு எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை - முக்தார் அப்பாஸ் நக்வி

முக்தார் அப்பாஸ் நக்வி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அரசு பல்வேறு மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வற்புறுத்தி வருகிறது. இதற்கு அவர்களின் எதிர்வினை என்ன? ரம்ஜான் விழா, இஃப்தார் விருந்து ஆகியவற்றை முடிந்தவரை கூட்டமின்றி கொண்டாட முஸ்லீம் தலைவர்களிடம் வற்புறுத்தியுள்ளேன். வக்பு வாரியம், பல்வேறு மத தலைவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோரோடு உரையாடி, அரசு வகுத்துள்ள விதிமுறைகள்படி செயல்பட வலியுறுத்தி விழிப்புணர்வு செய்து வருகிறோம். அரசு விதிமுறைகளை கடைபிடிக்காதபோது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கு, சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை நான் பல்வேறு மத தலைவர்களிடம் பேசியுள்ளேன். தப்லிக் ஜமாத் மாநாடு பற்றி உங்களுடைய கட்சியில் உள்ளவர்களே வெறுப்புவாத செய்திகளை பரப்புகிறார்களே? கட்சியில் உள்ளவர்கள் சமூக இசைவை, ஒற்றுமையை கலைக்கும் விதமாக செயல்பட்டால் அவர்கள் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை. தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் நிலைமையை புரிந்துகொள்ளாமல் செய்த செயலால் நோய் பாதிப்பு தீவிரமாகியுள்ளது. இதற்கான

சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்த ராபர்ட் கென்னடி!

படம்
ராபர்ட் கென்னடி ராபர்ட் கென்னடி ஜான் எஃப் கென்னடியின் சகோதரர். 1925 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர். சகோதர ருக்குப் பின்னர் தேர்தலில் நிற்க நினைத்தார். ஆனால் சதிகார ர்களால் படுகொலை செய்யப்பட்டார். சகோதர ரின் ஆதரவுடன் அவரது ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாக, பதவி வகித்தார். 1925 ஆம் ஆண்டு பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் கென்னடி, 1960 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். பின்னர், சகோதரர் படுகொலையான பின்னர் நியூயாரக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் முயற்சியிலும் இருந்தார். 1968 ஆம் ஆண்டு ஜூன் 5 தாக்கப்பட்டு படுகாயமுற்றார். அடுத்தநாள் இறந்துபோனார். ராபர்ட்டின் தந்தை ஜோசப் சீனியர், தொழிலதிபர். இவரின் அம்மா ரோஸ், போஸ்டன் நகர மேயர். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் அனைவரும் செல்வச்செழிப்பான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். ஜோசப்பிற்கு பிரிட்டனில் அமெரிக்கத்தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் ஏற்க, குடும்பம் இங்கிலாந்திற்கு பயணமானது. பின்னர் இரண்டாம் உலகப்போர் வெடிக்க, வேகமாக அமெரிக்காவுக்குத

முஸ்லீம் எழுத்தாளர்களை மிரட்டும் பயம் என்ன?

படம்
முஸ்லீம் எழுத்தாளர்கள் அஞ்சுவது ஏன்? பாஜக அரசு கருத்தியல் ரீதியாக தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவு எப்படியிருக்கிறது? அரசு அளிக்கும் தடுப்பூசியைக் கூட தன் இனத்தை அழிக்கும் முயற்சியாக பயப்படும் அளவுக்கு சென்றிருக்கிறது. இது மட்டுமல்லாமல் முஸ்லீம் மக்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்வது, உரிமை கேட்பவர்களை பாகிஸ்தானுக்கு செல்லக்கூறுவது என நிலைமை எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட ஒருவரைக் குறைசொல்வதை விட நாட்டின் நிலை அப்படி யோசிக்க சொல்லுகிறது என புரிந்துகொள்ளலாம். நாட்டின் நிராதரவான நிலையை எப்படி மக்களிடம் அரசு ஒப்புக்கொள்ளும்.? உடனே பாகிஸ்தான்தான் பிரச்னைக்கு காரணம், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்தான் இந்தியாவின் பிரச்னைக்களுக்கு மூல ஊற்று என பற்றி வைத்தால் போயிற்று. அனைத்து ஊடகங்களும் கைப்பிடியில் இருக்க கவலை என்ன? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய குழந்தையை நான் பெற்றெடுத்தேன். அப்போது அவளை முஸ்லீம் பெயரைச் சொல்லி எப்படிக்கூப்பிடுவது பிரச்னை ஏற்படுமா என்றுகூட பயந்துகொண்டிருந்தேன் என கூறுகிறார் எழுத்தாளர் நாசியா எரும். மதரிங