இடுகைகள்

#ஏன்?எதற்கு?எப்படி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முட்டையின் சுவை மாறுபட்டுக்கொண்டே இருப்பதற்கு காரணம்! - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
        cc           மிஸ்டர் ரோனி கால்பந்து போட்டிகளை நாம் பார்வையாளர்களின் கூச்சல் இன்றி பார்ப்பது ஏன் வினோதமாக தோன்றுகிறது ? விளையாட்டு மைதானத்தில் நேரடியாக பார்க்க எதற்கு செல்கிறார்கள் . அந்த நேரத்தில் குழுவாக மக்கள் எழுப்பும் பரவசமான கூச்சல் , சந்தோஷம் , கோபம் என உணர்ச்சிகளின் பீறிடலுக்காகத்தான் . அந்த தன்மை டிவியில் பார்க்கும்போது கிடைக்காது . அதேசமயம் பார்வையாளர்களே இல்லாத மைதானத்தில் விளையாடும்போது வீரர்களுக்கு அந்த சூழ்நிலையை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கும் . இனிமேல் நேரடி போட்டியை ஒளிபரப்பினாலும் கூட அதில் செயற்கையான ஒலியை உருவாக்கி பார்வையாளர்களை டிவி சேனல்கள் பார்க்க வைப்பார்கள் . ஆனால் அது நிச்சயம் பொருந்தாத ஒன்று . ஆனால் இன்றைய பெருந்தொற்று சூழலில் நமக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது ? உயிரைக் காத்துக்கொள்வதே முக்கியம் . அதற்குப்பிறகுதான் மற்றவை . பொதுமுடக்க காலத்தில் பலரும் தினசரி நடக்கும் பத்தாயிரம் அடிகள் என்பது ஏழாயிரமாக மாறியுள்ளது . இது ஆரோக்கியத்திற்கு கெடுதலா ? தினசரி பத்தாயிரம் அடிகள் நடக்கவேண்டும் என்பது ஒன்றும் மந்திரச்சொல் அல்ல .

ஆண்களின் வழுக்கைத் தலை அதிகரிப்புக்கு மரபணுக்கள்தான் காரணம்! - மிஸ்டர் ரோனி

படம்
மனிதர்களின் காது அமைப்பு வித்தியாசமாக இருக்கிறதே? இந்த அமைப்பை டிரைகஸ் என்று கூறுவார்கள். மிகப்பெரிய பயன் என்று இந்த அமைப்பில் ஏதும் கிடையாது. கேட்கும் ஒலியை தெளிவாக ஊக்கப்படுத்தி உள்ளே அனுப்புகிற பணியை இந்த அமைப்பு செய்கிறது. கண்களுக்கு கீழே கேரிபேக் போல கருவளையம் உருவாக என்ன காரணம்? உடலில் ரத்த ஓட்டம் சரியாக ஓடவில்லை என்று அர்த்தம். இது முதல் காரணம் என்று கொள்ளுங்கள். அடுத்து சரியான உணவு, தூக்கம், முதுமை ஆகியவை அடுத்தடுத்த காரணங்கள். கண்களுக்கு கீழே கருப்பாக கேரிபேக் போல மாறுவது, அதில் நீர் கோர்ப்பதால்தான். ஆண்களில் அதிகம் பேருக்கு வழுக்கை தலை ஏற்படுவது ஏன்? இதை பெண்களை ஒப்பிட்டு கேட்க நினைத்திருக்கலாம். அனைத்து பிரச்னைக்கும் காரணம் என பிரதமர் மோடி சொல்வது போல நாம் ஹார்மோன், மரபணுக்கள் பக்கள் கைகாட்டுவதுதான் ஒரே வழி. இதில் டெஸ்டோஸ்டிரோன் உச்சமானால் இந்த பாதிப்பு. அதேசமயம் இந்த ஹார்மோன் அளவு பெண்களுகு குறைவாக உள்ளது. அதனால் அவர்களுக்கு தலைமுடி கொட்டி வழுக்கை ஆவது குறைவாக உள்ளது. உடலில் சிராய்ப்பு ஏற்பட்டால் அது ஏன் நீலம் அல்லது மஞ்சள் நிறமாக உள்ளது? சைக்கிள் ஓட்டும்போது

உடலில் அரிப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால்தான்! - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி உடலில் அரிப்பு ஏற்படுவது எதனால்? உடல் செல்களில் ஒவ்வாமை அல்லது தேனீ கொட்டுவது, எறும்பு கடிப்பது போன்ற செயல்களின்போது நாம் தோலை வேகமாக சொரிகிறோம். காரணம், செல்களில் சுரக்கும் ஹிஸ்டாமைன் என்ற டிரான்ஸ்மிட்டரே இதற்கு காரணம். செல்லிலுள்ள இந்த வகை பொருளே மூளைக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் அரிப்பதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது. கண்களை சிமிட்டுவது எதற்கு? காதலைச் சொல்ல, சில்மிஷங்களை மறைக்க என பல ஜெகஜால வேலைகளுக்கு கண்களை நாம் சிமிட்டுகிறோம். இமைப்பது தானியங்கி செயல்பாடு. உண்மையில் கண்களை நாம் இமைப்பது கண்களிலுள்ள ஈரம் வற்றாமல் இருக்கவும், தூசிகள் உட்புகாமல் தடுப்பதற்கும்தான். ஒருவகையில் கண்கள் சுத்தமாக இருப்பதற்கு கண்சிமிட்டுதல் உதவுகிறது. விபத்தில் கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இழந்தவர்களுக்கு வலி ஏற்படுமா? உறுப்புகளை இழந்திருக்கலாம். ஆனால் அதற்கான நரம்புகள் அங்குதானே இருக்கும். எனவே கண்டிப்பாக அவர்களுக்கு வலி தோன்றும். காரணம் அங்குள்ள நரம்பு செல்கள் மூளைக்கு உறுப்பு காணோமே ப்ரோ என அடிக்கடி டேட்டாபேக் தீர்ந்த போனாக சிக்னல் கொடுக்கும். இதனால் அவர்களுக்கு வலி ஏற

துருவக்கரடிகளை கண்டறிய இன்ஃப்ராரெட் கதிர்கள் உதவாது! மிஸ்டர் ரோனி

படம்
பல்லிகளால் நீர்நிலையில் நடக்க முடியும். அனைத்து பல்லிகளுக்கும் இது சாத்தியமில்லை. மத்திய தெற்கு அமெரிக்காவில் காணப்படும் பாசிலிஸிக் வகை பல்லிகள் நீர்நிலையில் நடந்து செல்கின்றன. இவை நீர்நிலையின் மீது ஏற்படுத்தும் விசையால் குமிழிகள் எழுகின்றன. இதனைப் பயன்படுத்தி முழுகாமல் நீர்நிலையின் மீது செல்கிறது. நுரையீரலின் அளவுக்கு டென்னிஸ் மைதானத்தை ஒப்பிடலாமா? 70 சதுர மீட்டர் அளவுக்கு இதன் திசுக்கள் வரும். டென்னிஸ் மைதானத்தை விட கொஞ்சம் சிறியது. மூச்சுக்காற்றில் பெறும் ஆக்சிஜனை உடலிலுள்ள ரத்த செல்களுக்கு அனுப்பும் பணியை நுரையீரல் செய்கிறது. அதேநேரத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. காற்றைப் பிரித்து அனுப்பும் திசுக்கள் சாதாரண காகிதத்தை விட மென்மையானவை. இன்ஃபிராரெட் கேமராக்கள் மூலம் துருவக்கரடிகளை கண்டறிய முடியுமா? கடினம். பிரச்னை இன்ஃப்ராரெட்டில் இல்லை. துருவக்கரடிகளின் தோல் அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தெர்மல் கேமராக்கள் மூலம் இவற்றைக் கண்டறிய முடியாது. உடலின் வெப்பத்தை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதால்தான் அவற்றால் துருவப்பகுதியில் வாழ முடிகிறது. காம்பஸால் நாம் திசையறிவ

டைனமைட் உருவாக வேர்க்கடலை உதவுகிறதா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி டைனமட்டில் பருப்புகள் உள்ளன டைனமைட்டிலுள்ள முக்கியமான பருப்பொருள், நைட்ரோகிளிசரால். இதற்கான முக்கிய ஆதாரப்பொருளான கிளிசரால், வேர்க்கடலையிலிருந்து பெறப்படுகிறது. இந்த வழியன்றி வேறு வகையிலும் கிளிசரால் தயாரிக்கப்பட்டு பெறப்படுகிறது. மூளைக்கு வலி தெரியாது உண்மைதான். உங்களுக்கு தலை வலிக்கிறது என்றால் மூளையைச் சுற்றியுள்ள பகுதியுள்ள தசையில் பாதிப்பு என்று பொருள். பொதுவாக ஓரிடத்தில் வலி என்றால், அதைப்பற்றி தகவல்களை நோசிசெப்டர்ஸ் என்ற உணர்விகள் மூளைக்கு அல்லது தண்டுவடத்திற்கு தகவல் கொடுக்கின்றன. இதன் அடிப்படையில் வலி ஏற்படுகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட பாதிப்பை நாம் கவனித்து சரி செய்கிறோம். இப்படி வலி ஏற்படாதவிட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை நாம் அடையாளம் காண்பது கடினம். நீருடன் இணையும்போது சில உலோகங்கள் வெடிக்கும் சோடியம், லித்தியம், பொட்டாசியம், சீசியம், ரூபிடியம் ஆகிய உலோகங்கள் நீரில் பட்டால் உடனே ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து வெடிக்கும். இவை காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து வெடிக்கும் தன்மையை பெறுகின்றன.

மூச்சுக்காற்றை நம்மால் பார்க்க முடிவது எப்படி? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி வானவில் வானில் எத்தனை மணி நேரம் நீடித்திருக்கும்? இதற்கு காலவரையறை ஏதுமில்லை. மழை, நீர்த்திவலைகள் மீது ஒளி எவ்வளவு நேரம் பிரதிபலிக்கிறதோ அதைப்பொறுத்து வானவில் வானில் நீடிக்கும். சூரிய ஒளி திவலைகளின் மீது படும் கோணத்தைப் பொறுத்து வானவில்லின் வளைவு அமைகிறது. மண்வாசனைக்கு காரணம் என்ன? மண்ணில்  வாழும் ஆக்டினோமைசீட்ஸ் என்ற பாக்டீரியாக்கள் மழை நீர் பட்டு காற்றில் மேலெழுவதே இதற்கு காரணம். புயல் நிலப்பரப்பிற்கு தோராயமாக எவ்வளவு மழையைக் கொண்டுவருகிறது? புயல் உருவாகும்போது, 1330 பரப்பளவிற்கு மழையைக் கொடுக்கிறது. 22 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களிலுள்ள நீரின் அளவுக்கு   சமமான மழை இது. அனல் காற்று, பஞ்சம் என்ற இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? மழைபொழிவு குறைந்தால் பஞ்சம் ஏற்படுகிறது. அரசு தானியங்களை ஏற்றுமதி செய்து உள்நாட்டு மக்களுக்கு உணவின்றி உருவாக்கப்பட்ட பஞ்சங்களே வரலாற்றில் அதிகம். இயற்கையின் சுழற்சியில் பயிர்களுக்கு பாய்ச்ச நீரின்றி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அனல் காற்று ஏற்படுவது, சூரியவெப்பம் சில மாதங்களில் நினைத்துப் பார்க்க முடியாதபடி திடீரென அதிகரிப்

அறிவியல் செய்திகளில் எது உண்மை? எது பொய்? மிஸ்டர் ரோனி

படம்
நம்பிக்கையும் உண்மையும்!  வைரங்களை வைரங்களால்தான் வெட்ட முடியும் வைரங்களை அறுக்கும் தொழிற்சாலைகள்தான், வைரங்களை அறுக்கும் கருவிகளில் இதனைப் பயன்படுத்துகின்றனர். வைரங்களின் அமைப்பு காரணமாக அதனை கடினமானது என்று கூறுகின்றனர். ஆனால் அனைத்து வைரங்களும் வலிமையானவை என்று கூற முடியாது. வைரத்தின் வடிவமைப்பில் பலவீனமான தன்மைகளும் உண்டு. வண்ணத்துப்பூச்சி கால்களின் மூலம் சுவை அறிகிறது வண்ணத்துப்பூச்சி, பூவின் மீது அல்லது இலையின் மீது அமர்ந்து டார்சி என்ற தனது கால்களின் மீது அதன் சுவையை அறிகிறது. இதற்கு அதன் கால்களிலுள்ள கீமோரெப்டார்ஸ் உதவுகின்றன. இதன்வழியாக அந்த இலை அல்லது பூவிலுள்ள தேனை உண்ணலாமா, வேண்டாமா என்பதை வண்ணத்துப்பூச்சி முடிவெடுக்கிறது. லேசர் கதிர்களை விண்வெளியில் பார்க்க முடியாது ஒளிக்கற்றைகளில் வலிமையானது லேசர் கதிர்கள். இவற்றை நாம் பார்ப்பது, சூழல்களில் உள்ள தூசிகள் மூலம்தான். அதில் லேசர் கதிர்கள் படும்போதுதான், அதன் போட்டான் துகள்களை நம் கண்களால் பார்க்க முடியும். விண்வெளியில் உள்ள வெற்றிடத்தில் லேசர் கதிர்கள் பாய்ந்தாலும் நம்மால் பார்க்கமுடியாது. காரணம், அங்கு லேசர் கதிர்க

நெப்போலியன் வாட்டர்லூ போரில் வென்றிருந்தால் மாறியிருக்குமா வரலாறு? - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
கிகா மிஸ்டர் ரோனி சில விலங்குகளுக்கு மூன்று கண் இமைகள் இருப்பது ஏன்? தூசி, வறட்சி ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாப்பதற்குத்தான். பறவைகளுக்கு இந்த வகை இமை அதிக உயரத்தில் பறக்கும்போது கூர்மையாக தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்கவும் உதவுகிறது. இங்கிலாந்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹியர் ஹியர் என்று கூறுவது ஏன்? பதினேழாம் நூற்றாண்டிலிருந்து இந்த வழக்கம் அங்கு உள்ளது. அதிமுக அமைச்சரவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை பாராட்ட மேசையைத் தட்டி பாராட்டுவார்களே, அதைப்போன்றதுதான் இதுவும். நாம் தட்டி பாராட்டுகளை சொல்லுகிறோம். அவர்கள் வார்த்தை வழியாக தங்களது தலைவரைப் பாராட்டுகிறார்கள. டைனோசர்கள் என்ன மாதிரியான ஒலிகளை எழுப்பி வாழ்ந்திருக்கும்? அவை வாழ்ந்த காலம் 65 மில்லியன் ஆண்டுகாலம் என மதிப்பிட்டுள்ளனர். நாம் அப்போது வாழ்ந்திருந்தால் ரசூல் பூக்குட்டி அல்லது தபஸ் நாயக்கை வைத்து ஒலியை பதிவு செய்திருக்கலாம். நாம்தான் அப்போது இல்லையே! நாம் டைனோசர்களின் பல்வேறு படிமங்களை ஆராய்ந்ததில் அவற்றுக்கு கேட்கும் திறன் சிறப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது. அடுத்து அவற்றின் குரல்வளையும் ந

விளக்கு ஒளியைப் பார்த்தால் தும்மல் வருகிறதா? - மிஸ்டர் ரோனி

படம்
  கிகா உடல் நீலம் அல்லது சாம்பல் பூத்தது போல தெரிகிறதா? இதனை ஆர்க்கியா என்று அழைப்பார்கள். வெள்ளி உடலுக்குள் செல்லும்போது உடலிலுள்ள தோலின் நிறம் மாறுகிறது. வெள்ளி ரத்தவோட்டத்தில் உப்பாக கலக்கும்போது தோலின் வழியாக நீலம் அல்லது பழுப்பு நிறத்தில் தெரிகிறது. பாதிப்புக்கு நீங்கள் சரியான சிகிச்சையை செய்தால் குணமடையலாம். தேனுக்கு காலாவதி தேதி கிடையாது தேன் காலாகாலத்திற்கும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. அதன் சுவை மாறுபாடு அடையும். இதில் ஈரப்பதம் குறைவு என்பதால் பாக்டீரியாக்கள் இதனை தாக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் தேனில் பாக்டீரியாக்களை தடுக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு வேதிப்பொருள் உள்ளது. இதனால்தான் தேன் பெரிதாக பிற உணவுப்பொருட்கள் போல கெட்டுப்போவதில்லை. நமது உடலில் தங்கம் இருக்கிறது. நமது உடலில் சிறிதளவு தங்கம் இருப்பது உண்மைதான். இதன் அளவு அதிகரிக்கும்போது நச்சாக மாறும் வாய்ப்புள்ளது. சோடியம் ஆரோத்திரமலேட் என்ற வேதிப்பொருளில் தங்கம் உள்ளது. ஆர்த்தரைட்டிஸ் நோயாளிகளுக்கு தங்கம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. உடலில் தங்கத்தின் பயன்பாடு பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வர

பதற்றமாக இருக்கும்போது சிரிப்பு வருவது ஏன்? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
cc மிஸ்டர் ரோனி மைக்ரோ ஓவனில் வைத்தால் சூப் ஏன் வெடித்து சிதறுகிறது? மைக்ரோ ஓவனில் சமச்சீரற்ற முறையில் வெப்பம் பரவுவதால் சூப்பில் குமிழ்கள் தோன்றி, உள்ளே வெடிக்கிறது. இதற்கு காரணம், சூப் நீர் தன்மையைக் கொண்டுள்ளதுதான். எனவே சூப்பை உள்ளே வைத்துவிட்டு நெட்பிளிக்ஸ் பார்க்க அமர்ந்துவிடாமல் ஐந்து நிமிடத்தில் டக்கென எடுத்துவிட்டால் மைக்ரோ ஓவனை வாஷிங்மெஷினுக்கு உள்ளே போட்டு கழுவும் அவசியம் நேராது. கடலில் தோன்றும் அலைகள் குமிழ்களோடும் பாறைகளில் மோதி சிதறும்போதும் வெள்ளையாக தெரிவது ஏன்? கடல் பரப்பில் உள்ள காற்று அழுத்தமே இதற்கு காரணம். மேலும் இதில் புவியின் ஈர்ப்புவிசையும் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, அலைகள் உருவாகி குமிழ்கள் உருவாகிறது. வெள்ளையாக தெரிவதற்கு காரணம், வெளிச்சம் அதன் மீது செயல்படும் முறைதான். உடற்பயிற்சி செய்து முடிந்ததும் உடலில் வெங்காயத்தின் வாசனை வருகிறதே ஏன்? அபோகிரைன், எக்கிரைன் என்ற இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் உடலில் உள்ளன. அபோகிரைன் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடை இடுக்கு ஆகியவற்றில் உள்ளன. இவை மனதில் பதற்றம், வலி ஆகியவை ஏற்படும் அபரிமிதமாக சுரக்கின்றன. எக

குறட்டையொலி கேட்டு நாம் ஏன் எழுவதில்லை? - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி விலங்குகளுக்கு மதம் உண்டா? மனிதர்கள் தவிர்த்த விலங்குகளுக்கு மதம் கிடையாது. ஆனால் அவை தம் இனம் சார்ந்த விலங்குகளுக்கு ஆபத்து நேரும் போது குறிப்பிட்ட முறையில் அதனை எதிர்கொள்கின்றன. இதில் முக்கியமானது, யானை. தன் இனத்தைச் சேர்ந்த யானை விபத்தில் பலியானால் தம் கூட்டத்தை கூட்டி அஞ்சலி செலுத்தும். ஆர்கா திமிங்கலம் தனது குட்டி ஒன்றை பறிகொடுத்துவிட்டது. இறந்துபோன அதன் உடல் அருகே இரு வாரங்கள் சுற்றி வந்துவிட்டு பின்னரே சென்றது. விலங்குகள் தங்களுடைய மகிழ்ச்சியை, வேதனையை பல்வேறுவிதமாக வெளிப்படுத்துகின்றன. அவற்றின் மூளையை நெருக்கமாக ஆராய்ந்தால்தான் இதற்கு என்ன பதில் என்று கண்டறிய முடியும். நாம் குறட்டை விடும்   ஒலி நமக்கே கேட்பதில்லையே ஏன்? காரணம், நாம் விடும் குறட்டை ஒலி நம் காதுகளுக்கு கேட்டாலும் அதனை தீவிரமாக உணராதபடி மூளை செயல்பட்டுக்கொண்டிருக்கும். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது பெயரைக் கேட்டால் நீங்கள் உறக்கம் கலைந்து எழுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஒலி கூட மூளைக்கு குறைவாக கேட்கும். இதனால் வேறுபுறம் திரும்பி படுப்பது நடக்கும். க

இன்னும் எத்தனை கோடிப் பேர்களை பூமி தாங்கும்? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி நாக்கை கடித்துக்கொண்டால் வேகமாக குணமாவது எப்படி? இதற்கு காரணம், நமது எச்சில்தான். அதிலுள்ள ஹிஸ்டாடின் 1 என்ற அமினோ அமிலம் சேதமடைந்த செல்களை வேகமாக மாற்றி புதிய செல்களை அங்கு உருவாக்குகிறது. காயமான உடலிலும் கூட இந்த அமினோ அமிலம்தான் புதிய செல்களை உருவாக்கி காயத்தை ஆற்றுகிறது.  ஆப்பிளை கடித்தவுடன் அதன் நிறம் பழுப்பாக மாறுவது ஏன்? அதிலுள்ள டானிஸ் என்ற என்சைம் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து பழுப்பு நிறத்தை உருவாக்குகிறது., எனவே ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே விடாமல் முழுக்க சாப்பிட்டால் இதுபோன்ற கேள்விகளை உங்களுக்கு கேட்கத் தோன்றாது. ஆப்பிளிலுள்ள என்சைம் அதன் வகைகளைப் பொறுத்து மாறும். ஆப்பிள் நீங்கள் அணில் போல கடித்து கொறித்த தடம் மாறாமல் இருக்க, அதனை நீரில் அல்லது சர்க்கரையில் வைக்கவேண்டும். இப்போது ஆக்சிஜன் மூலம் ஏற்படும் வேதிவினை நிகழாது.  எத்தனை கோடி மக்கள் வாழ்வதற்கு பூமி உதவும்? பத்து அல்லது பதினொரு பில்லியன் மக்கள் வாழ பூமி உதவும். இப்போது நாம் 7 பில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டோம். இந்த எண்ணிக்கையும் இப்போது கூடி வருகிறது.பூமி மாதா எப்போது வாயைப் பிளப்பாள் என்று தெரியவி

வாசனையை அறிய முடியாத மனிதர்களும் உண்டா? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
dailymail மிஸ்டர் ரோனி மாலையில் உடல் ஏன் சோர்வாகிறது? உடல் சோர்வாகி உங்களுக்கு கொட்டாவி விடத்தோன்றுகிறது என்றால் அதற்கு உயிரியல் கடிகாரத்தின் இயக்கம்தான் காரணம். இதன் செயல்பாடுபடி, மதிய உணவுக்குப் பிறகு 2 -4 மணிக்குள் உங்களை தூக்கம் அசத்துகிறது. இதற்கு உடலில் தூக்கத்தை வரவழைக்க உருவாகும் மெலடோனின் சுரப்பு காரணம். இந்த சுரப்பு, உடலின் வெப்பநிலையைக் குறைத்து தூங்குவதற்கான மனநிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக மதிய உணவில் அதிக மாவுச்சத்தை எடுத்துக்கொண்டால், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு ஏற்பட்டு தூக்கம் வரலாம். 30 நிமிடங்கள் தூங்கி எழுந்துவிட்டு பணிகளை எப்போதும் போல செய்யலாம். இந்த முறையை அனைத்து அலுவலகங்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, வெயிலில் சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தால் தூக்கச்சோர்வு இருக்காது. 2 வாசனையை அறிய  முடியாத மனிதர்களும் உண்டா? அரிதானதான். வாசனையை நுகரமுடியாத மனிதர்களும் இந்த உலகில் பிறப்பது உண்டு. இதனால் அவர்களது வாழ்க்கை வீணாவது இல்லை. காபி தயாரித்தால் அதன் மணத்தை முகர்ந்து பார்த்து பருக முடியாது. கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு வாசனை அறியும் திற

கர்ச்சீஃபை விட டிஷ்யூ தாள்களே சிறந்தவை! - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி விலங்குகளின் கண்மணி மாறுபட்டிருப்பதற்கு என்ன காரணம்? விலங்குகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடும் பழக்கம் கொண்டவை. எனவே அதற்கேற்ப அதன் கண்கள் இரையைப் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பாம்புகளுக்கு மட்டுமல்ல, எலிகளுக்கும் இதே போன்ற கண் அமைப்புகள் உண்டு. யார் விழிப்புணர்வாக இருக்கிறாரோ அவரே இந்த திறன் மூலம் வெல்வார். வென்றால் உலகில் வாழும் வாய்ப்பு கிடைக்கும். மனிதர்களின் கண்களில் இருக்கும் தசைகளை விட கூடுதலாக தசைகள் இதற்கு தேவைப்படுகின்றன. விலங்குகள் அதனால்தான் சிறப்பாக வேட்டையாட முடிகின்றது. தூங்கும்போது கனவில்தான் கிரியேட்டிவிட்டியான விஷயங்கள் கிடைக்குமா? பொதுவாக முக்கியமான கண்டுபிடிப்பாளர்கள், தங்களின் சாதனைகள் பற்றி பேசும்போது இப்படி சொல்லியிருக்க கூடும். கனவுகளில் வரும் விஷயங்களுக்கு பொதுவாக லாஜிக் கிடையாது. ஆனால் அதனை நீங்கள் லாஜிக்கோடு பொருத்தி யோசித்தால் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. எழுவதற்கும் தூங்குவதற்கும் இடைப்பட்ட ஹிப்னோஜோகிக் நிலையில்தான் பெரும்பாலும் கிரியேட்டிவிட்டி மடை உடைத்து பாய்கிறது.   ஃபிராங்கன்ஸ்டைன் நாவல் எழுதிய மேரி ஷெல்லி கூட   இந்த

திருமண வாழ்க்கையின் இன்பம் ஏழே ஆண்டுகள்தானா? மிஸ்டர் ரோனி பதில்

படம்
ஜிபி மிஸ்டர் ரோனி   எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது ஏழு ஆண்டுகள்தான் என நண்பன் கேலி செய்து சிரிக்கிறான். இது உண்மையா? ஆறு ஆண்டுகள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்களே? இதுவல்லவா பெரிய விஷயம். மகிழ்ச்சியான திருமண உறவு ஏழு ஆண்டுகள் என்று சொல்வது உளவியல் சார்ந்த ஆய்வுகள் படிதான். அதில் உண்மையும் இருக்கிறது. 1999ஆம்ஆண்டு ரைட் ஸ்டேட் பல்கலைக்கழகம் திருமணமாகி பத்தாண்டுகள் ஆனவர்களை சோதித்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தம்பதிகளின் மகிழ்ச்சி குறைந்து அவர்களின் வாழ்க்கை உறைந்து போனதை ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில்தான் ஏழு ஆண்டு இன்பம் கான்செப்ட் தோன்றியது. கணவன், மனைவி இருவருக்குமான கெமிஸ்ட்ரி என்பது உங்கள் மனப்பொருத்தத்தைப் பொறுத்தது. உங்களின் நோக்கம், தொழில், மனைவியின் கனவு, பிறந்த குழந்தைகள், அவர்களுக்கான கல்வி என பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இயல்பாகவே நமது நோக்கம் மாறியபடியே இருக்கும். அதற்கேற்ப நீங்கள் அனுசரித்துச் செல்வதுதான் முக்கியம். உங்களின் செயல்பாடுகளை விளக்காமலேயே இன்னொரு உயிர் புரிந்

ரியலும் ரீலும் - நமது நம்பிக்கைகளில் எவை உண்மை, எது உடான்ஸ்? - மிஸ்டர் ரோனி பதில்கள்

மிஸ்டர் ரோனி ரியலும் ரீலும் 1. கேரட் சாப்பிட்டால் கண்பார்வை நன்றாக தெரியும் ரியல் - உண்மையில் வைட்டமின் ஏ சத்தை உடலுக்கு ஈர்த்து கொடுக்கும் பீட்டா கரோட்டின் கேரட்டில் உள்ளது . ஆனால் உடல் கேரட்டை கிலோ கணக்கில் நீங்கள் சாப்பிட்டாலும் குறிப்பிட்ட அளவோடு உட்கிரகிப்பதை நிறுத்திவிடும் . எனவே கேரட்டை மட்டும் சாப்பிடாமல் அதோடு சேர்த்து பச்சைக் காய்கறிகளை நிறைய சேர்த்து சாப்பிடுங்கள் . கண்களும் உடலும் சேர்ந்து பலம் பெறும் . 2. சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடும் ரியல் - சர்க்கரையில் செய்த பலகாரங்களை அல்லது சர்க்கரையை அள்ளி தின்றால் நேரடியாக உடல் பாதிக்கப்படாது . உடல்பருமன் பிரச்னை ஏற்படும் இதன் மறைமுகவிளைவாக நீரிழிவு நோய் ஏற்படும் . இதனால் லட்டு , ஜிலேபி , பால்கோவா , பாதுஷா ஆகிய பலகாரங்களை இலவசமாக கொடுத்தாலும் அளவோடு சாப்பிடுங்கள் . மூக்கு பிடிக்க சாப்பிட்டால் கஷ்டப்படப்போவது நீங்கள்தான் . 3. தீப்புண்ணுக்கு ஐஸ் வைக்கக்கூடாது ரியல் - ஆம் அப்படி வைத்தால் அப்புண் மேலும் பெரிதாகி பிரச்னை தரும் . தீப்பட்ட புண்ணை சாதாரண நீரில் கழுவி ஆன்டி செப்டிக் க்ரீ

உடலைக் காக்கும் பசி!

படம்
giphy மிஸ்டர் ரோனி பசி எடுக்கும்போது வயிற்றிலிருந்து பல்வேறு ஒலிகள் கேட்கிறதே? டிடிஎஸ் மிக்சிங் செய்யும்போது ஸ்டூடியோவில் வரும் ஒலியெல்லாம் கேட்கும். காரணம், உங்கள் குடல் இயல்பாகவே உணவை குடலுக்கு தள்ளிவிட முயற்சிக்கும். உணவு இருக்கும்போது சத்தம் வராது. உணவு இல்லாமல் வயிறு காலியாக இருக்கும்போது இந்த சத்தம் உங்களுக்கு மட்டுமன்றி, பக்கத்து சீட்டுக்காரருக்கும் கேட்கும். உடனே ஓடிப்போய், அருகிலுள்ள ஓட்டலில் சாப்பிட்டு விடுங்கள். வயிற்றில் வரும் அரவை மில் சத்தத்தை இப்படித்தான் நிறுத்த முடியும். உணவு இல்லாத பல்வேறு பொருட்களை ஒருவர் சாப்பிடக் காரணம் என்ன? உடல் உங்களுக்கு பசி, ஊட்டச்சத்து பற்றிய பல்வேறு சமிக்ஞைகளைக் கொடுக்கும். அதில் ஒன்றுதான் பற்றாக்குறையான சத்துக்களை நிறைவு செய்ய மாவுக்கற்கள், சாக்பீஸ் போன்றவற்றை சிலர் சாப்பிடுவார்கள். அவர்களைக் கேட்டால் ஏன் என்று சொல்லத் தெரியாது. அவர்களை சோதித்து பார்த்தால் உடலில் சத்துகள் பற்றாக்குறையாக இருப்பது தெரியும். ஆனால் இப்படி சாப்பிடும் பொருட்களால் மூளையில் டோபமைன் சுரக்கலாம். ஆனால் உடல் ஆலமரம் போல விரிவடைவதற்கான சிக்கல் இரு