இடுகைகள்

ஒமிக்ரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒமிக்ரான் அறிகுறி, மருந்துகள்!

படம்
  ஒமிக்ரான் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பெரிதாக அடையாளம் காட்டாது. மூச்சுக்குழலில் ஏற்படும் இருமல், சளி காய்ச்சல் என்றுதான் இதையும் அடையாளம் காண முடியும்.  சுவையுணர்வு, வாசனை முகரும் திறன் இல்லாமல் போவது ஆகியவற்றை பற்றி ஏதும் கூறப்படவில்லை. இதுவரை இதில் இழப்பு ஏதும் தெரியவில்லை.  ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறையப் பேர் இறந்தது போல இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேராது என்று கூறப்படுகிறது.  சிகிச்சை  எல்லாமே அறிகுறிகளின்படிதான். ஓய்வு எடுக்கவேண்டும். உங்கள் மேலாளர் லீவ் அப்ளை செய்தால் தரமாட்டேன். நேராக வந்து லீவ் கேட்டாலும் சரியான காரணத்தை சொல்லவேண்டுமென வாட்ஸ் அப் அறிவிப்பில் கூட மிரட்டலாம். ஒமிக்ரானைப் பொறுத்தவரை இதுபோல எதற்கும் கட்டுப்படாது. ஊட்டச்சத்தான உணவைச் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் போதும்.  கொரோனாவுக்கு கொடுத்த மாத்திரைகளே போதுமானது. மேர்க், ஆன்டி வைரல் மாத்திரையான மோல்னுபிராவிர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மோனோகுளோனல் ஆன்டிபாடியைப் பயன்படுத்தினால் தாக்கம் 77 சதவீதம் குறையும்.  அறிகுறிகள் தென்பட்டால் ஒரே வாரத்தில் ஆன்டிபாடி காக்டெயிலை பயன்படுத்த வேண்டும். வயதானவர்களுக்கு இது மிக அவசியம்.