இடுகைகள்

சுயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தான், பிறர் என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம்?

படம்
  உளவியல் பகுப்பாய்வில் தன்னுணர்வற்ற மனம் என்பதில் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். அதை தன்னுணர்வு மனம் எளிதாக பெறமுடியாது என அறிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், தன்னுணர்வற்ற மனதில் உள்ள நினைவுகள், சிலமுறை வெ்வேறு வழிகளில் தன்னுணர்வு மனத்திடம் தொடர்புகொள்கிறது. இதை கார்ல் ஜங், தனது ஆய்வில் விவரிக்கிறார். கனவுகள், அடையாளங்கள், பல்வேறு வித குணங்கள், பேசும்போது கூறும் பொருத்தமற்ற வார்த்தைகள் ஆகியவற்றை தொடர்புகொள்ளும் வழிமுறைகளாக கூறுகிறார்.  உளவியலில் தான் பிறர் என்பது முக்கியம். ஒரு பெரிய கூட்டத்தில் மனிதர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தனித்தனியானவர்கள்தான். காரணம், அவர்களின் சுயம் வேறுபட்டது. பிறர் என்பது தன்னைக் கடந்த விஷயங்கள், உலகைக் குறிக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்த நொடியில் இருந்து உலகைப் புரிந்துகொள்ள முயல்கிறது. நாம் சில விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோம். எழுதுகிறோம். ஆனால் அதை பிறருக்கு கூறவேண்டுமெனில் இருவருக்கும் பொதுவான ஊடகம் தேவைப்படுகிறது. அதாவது மொழி. மொழி கைவிட்டால் புகைப்படங்கள் சைகைகளை நாடலாம்.  ஜாக்குயிஸ் லாகன் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் பிறந்தவர்.

காதலிக்க, காதலிக்கப்பட செய்யவேண்டியவை - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   எது காதல் என்ற கேள்விக்கு பதிலைத் தேடி   நாம் பயணிக்க வேண்டும் என்றால் பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டுள்ள முன்மாதிரிகள், கருத்துகளை சற்று தள்ளி வைக்கவேண்டும். வாழ்க்கையை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கும், அழிக்கும் விவகாரங்களையும் விட்டு தள்ளிச் செல்ல வேண்டும். இப்போது, காதல் என்று கூறும் தீப்பிழம்பை பற்றி கண்டறிவோம். உண்மையில் அதன் அர்த்தம் என்ன? இதை அறிய முதலில் தேவாலாயம், நூல், பெற்றோர், நண்பர்கள், தனிப்பட்ட மனிதர்கள் ஆகியோர் கூறியுள்ள விஷயங்களை ஒதுக்க வேண்டும். காதல் என்பதை நாமாகவே தேடி அடைய வேண்டும்.   காதல் என்பதை மனிதர்கள் பலநூறு வரையறை கொண்டு கூறமுடியும். காதலை நமக்கு பிடித்தது போல, குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்ட வகையில் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, காதலைப் பற்றி தேடுவதற்கு முதலில் நமக்குள் உள்ள முன்முடிவுகளை, கருத்துகளை விலக்க வேண்டும். நமக்குள் இருக்கும் குழப்பத்திலிருந்து   வெளியே வந்தால்தான், எது காதல் இல்லை என்பதைக் கண்டறிய முடியும். அரசு ‘’ உங்கள் நாடு மீது வைத்துள்ள காதலுக்காக சென்று பிற