இடுகைகள்

கைரேகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நின்றுகொண்டே தூங்கும் விலங்குகள், கோலா கரடிகளின் கைரேகை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா? விலங்குகள் நின்றுகொண்டே ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்கின்றன! உண்மையல்ல. குதிரை, பசு,வரிக்குதிரை, யானை ஆகிய விலங்குகள் நின்றுகொண்டே தூங்குவது நிஜம். இப்படி தூங்குவது மெல்லிய தூக்கம்தான். முழங்காலை நேராக்கி நின்றுகொண்டே தூங்குவது, திடீரென எதிரிகளால் ஆபத்து ஏற்படும்போது அதை எதிர்கொள்ளத்தான். படுத்துள்ள நிலையில்தான் பசு, குதிரை ஆகிய விலங்குகள் ஆழமான உறக்கத்தைப் பெறுகின்றன.   கோலா கரடிகளின் கைரேகை மனிதர்களைப் போன்றது! உண்மை.  1996ஆம் ஆண்டு தடவியல் வல்லுநர் மாசிஜ் ஹென்னபெர்க், கோலா கரடியின் கைரேகைகள் மனிதர்களைப் போலவே உள்ளது என்று இண்டிபென்டன்ட் நாளிதழில் கூறினார். 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலூட்டி இனங்களும்(Mammals), உடலில் பைகொண்ட பாலூட்டி இனங்களும் (Marsupials) பிரிந்துவிட்டன. இப்படி பிரிந்துவிட்ட இனங்களில் காணப்படும் ஒத்த பரிணாம வளர்ச்சி அம்சங்களுக்கு, ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி  (Convergent Evolution)என்று பெயர்.   https://www.sciencefocus.com/nature/how-many-animals-can-sleep-standing-up/ https://wildlifeinformer.com/animals-that-sleep-standing-up/ http

தலைவிதியை மாற்றி எழுத முடியுமா? - காதலைக் காப்பாற்ற போராடும் கைரேகை நிபுணன்- ராதேஷ்யாம்

படம்
  ராதே ஷ்யாம்  ராதாகிருஷ்ண குமார் மனோஜ் பரம ஹம்சா இசை - ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி - தமன் எஸ்  புகழ்பெற்ற கைரேகை வல்லுநரான விக்ரம் ஆதித்யாவிற்கு, சொந்த வாழ்க்கையில் நடக்கும் காதலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதும்தான் கதை.  படம் எழுபது, எண்பதுகளில் நடக்கும் கதை. ராதே ஸ்யாம் என்பதற்கு கிருஷ்ணன் அல்லது ராதா கிருஷ்ணன் என பொருள் கொள்ளலாம். ஏன் இயக்குநர் தனது பெயரைக் கூட முதல் படத்திற்கு வைத்துக்கொண்டார் என நினைக்கலாம். வேத பாடசாலையில் உள்ள குருவான சத்யராஜ், பார்வையற்றவர். கைரேகையை தொட்டுணர்ந்து சொல்லும் தீர்க்கமான ஆற்றலுடையவர். இவரது சீடர் தான் விக்ரம் ஆதித்யா. இவருக்கும் இஸ்ரோ விஞ்ஞானியான தலைவாசல் விஜய்க்கும் நடக்கும் விவாதமே படத்தின் போக்கை சொல்லிவிடுகிறது. இதில் சத்யராஜ் ஜோதிட சாஸ்திரத்தை நம்பினாலும், மனிதனின் சிந்திக்கும் அறிவு செய்யும் மாயத்தை உணர்ந்தே இருக்கிறார். இதில் இவரது கிரேட் சிஷ்யரான விக்ரம் ஆதித்யா, சற்று மாறுபட்டு விதியை கணித்தால் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  இதனால் நிறைய பிரபலங்களிடம் அப்படியே உண்மையை சொல்லி வம்பு தும்புகளை சம்பாதித்துக்கொள்கிறார்

உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா தடுப்பூசி? - உண்மையும் உடான்ஸூம் அறிவோம்!

படம்
              உண்மையும் உடான்ஸூம்! ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் சென்ற கருப்பின அடிமைகள் உலகம் முழுக்க பரவினார்கள் ரியல் : ஆப்பிரிக்கா என்பது ஓர் நாடு என சிலர் நினைப்பது போலவே இதுவும் தவறான நம்பிக்கை . ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் கருப்பினத்தவர்கள் விற்கப்படவில்லை . ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியிலிருந்துதான் கருப்பினத்தவர்கள் அடிமை வணிகம் தொடங்கியது . தங்கம் தேடி ஆப்பிரிக்காவிற்கு சென்ற போர்ச்சுக்கீசியர்கள் 1442 ஆம் ஆண்டு தங்கள் நாட்டிற்கு பத்து ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர் . பின்னர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கானாவில் எல்மினா எனும் அடிமைகள் விற்குமிடத்தை தொடங்கினர் . அங்கு அடிமைகள் விற்பனையோடு , தங்கம் , யானைகளின் தந்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்கப்பட்டன . 1619 ஆம் ஆண்டுவாக்கில் ஐரோப்பியர்களால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர் . நம் கைகளிலுள்ள கைரேகைகள் பொருட்களை இறுக்கமாக பிடிக்க உதவுகின்றன ரியல் : நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் நம்பிய நம்பிக்கை இது . ஆனால் இது உண்மையல்ல .