இடுகைகள்

சீண்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் சீண்டல் வழக்குகளில் நேரடி சாட்சியங்களின் உண்மைத்தன்மை!

படம்
  1979ஆம் ஆண்டு, லாஃப்டஸ் ஐவிட்னஸ் டெஸ்டிமோனி என்ற நூலை எழுதினார். இதில் விபத்து நடக்கும்போது அதைப் பார்க்கும் நேரடி சாட்சியங்கள் எப்படி தகவல்களை தவறாக புனைந்து கூறுகிறார்கள் என்பதை செய்த ஆய்வுகளின் மூலம் விளக்கியிருந்தார்.  பின்னாளில் லாஃப்டஸ், தடயவியல் உளவியல் மீது ஆர்வம் கொண்டார். 1980ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் பற்றிய வழக்கில் அவர் வல்லுநராக இயங்கி இருந்தார். நினைவுகள் என்பது காலப்போக்கில் பல்வேறு தவறான தகவல்களால் மாறுகிறது. தவறான தகவல்களால் நிரம்புகிறது என்பதை அடையாளம் கண்டார். ஆனால் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது எளிதாக இல்லை.  தொண்ணூறுகளில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இதில் ஜார்ஜ் ஃபிராங்களின் என்பவர், தனது மகள் எய்லீனின் தோழியைக் கொன்றார் என்பது காவல்துறையின் வழக்கு. ஆனால் இதில் நேரடி சாட்சியான எய்லீன் கூறிய தகவல்கள் நிறைய மாறுபட்டன. பல்வேறு முறை அவை தவறாகவும் இருந்தன. ஆனாலும் நீதிமன்ற ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்தனர். தவறுதலாக பல்வேறு விஷயங்களை சேர்த்து, இணைத்து நினைவுபடுத்திக் கூறுவதைஃபால்ஸ் மெமரி சிண்ட்ரோம் என்று உளவிய

உள்ளாடைகளைத் திருடும் சீரியல் கொலைகாரர்கள்!

படம்
  சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை சீரியல் கொலைகார ர்களைப் பற்றி பொதுவாக கூறப்படுவதில் முக்கியானது, அவர்கள் தங்களின் அம்மாவுடன் வாழ்கிறார்கள் என்பது. ஆங்கில திரைப்படங்களில் நார்மன் பேட்ஸ் இதற்கு முக்கியமான உதாரணமாக காட்டப்பட்டது. பிறகு இந்த பாணியை அடுத்து வந்த ஹன்னிபால் லெக்சர் உடைத்தார்.  பெண்கள் எப்படி சீரியல் கொலைகார ர்களை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் இரக்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறார்கள். இப்படி ஈர இதயம் கொண்டவர்களாக இருப்பதால்தான் சீரியல் கொலைகார ர்களைக் கூட தன்னை அறியாமல் காப்பாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். அம்மா என்ற இடத்தில் பையன் தவறு செய்தால் அதை மறைத்து அவனைக் காப்பாற்றுகிறவளாகவே இருக்கிறாள். இது உலகம் முழுக்க மாறாத விஷயம். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.  இந்த பெண்கள்தான் சீரியல் கொலைகார ர்களுக்கான அலிபியை உருவாக்குகிறார்கள். இவர்க்களின் மதநம்பிக்கை, குற்றவுணர்ச்சியை கொலைகா ர்கள் பயன்படுத்திக்கொண்டு பணம், வாகனம், தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெண்களோடு இணைந்து இருப்பதை விரும்பாதபோதும் கிடைக்கின்ற உதவிகளை எங்கே பெறு

குழந்தைகளின் உளவியலை சிதைக்கும் பாலியல் சீண்டல், வல்லுறவு!

படம்
                பாலியல் சீண்டல் இதில் வயது வந்தோர்களை உள்ளடக்கவில்லை . முழுக்க குழந்தைகளை எப்படி வயது வந்தோர் பயன்படுத்தி காம வெறியை , ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள் . அதனால் அவர்களின் பின்னாளைய வாழ்க்கை உளவி்யல் குறைபாடுகளோடும் தீர்க்க முடியாத சிக்கல்களோடும் அமைவதை பார்க்கலாம் . குழந்தை ஆரோக்கியமாக வளர நல்ல உணவு மட்டும் அளித்தால் போதாது . குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் . பெற்றோர்களுக்கு நல்ல மனநிலை வாய்த்திருப்பதோடு பக்கத்தில் இருக்கும் ஆட்களும் ஒழுங்கானவர்களாக அமையவேண்டும் . அப்படி சரியான விஷயங்களை அமையவில்லை . நல்லதும் அல்லதும் பெற்றோர்களால் சொல்லித் தரப்படவில்லை என்றால் குழந்தை வளர்ந்தபிறகு உலகை விரோதமாகவே பார்க்கும் . நட்பை , உறவை அனைத்தையுமே சந்தேகமாக பார்க்கும் . அனைத்து உறவுகளுமே அன்பினால் , மரியாதையால் , நட்பால் உருவாக்கப்படுவதில்லை . சில உறவுகள் அதிகாரத்தால் , வலியால் , அவமானப்படுத்துதல்களாலும் உருவாகும் . வலியை மகிழ்ச்சியாக ஒருவர் உணரத் தொடங்கும்போதுதான் அவருக்குள் உளவியல் குறைபாடுகள் மெல்ல முளைவிடத் தொடங்குகிறது . சிறுவயதில் பெற்றோர