இடுகைகள்

சவாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை மாநகராட்சியின் சைக்கிள் பூங்கா

படம்
ஜாலியான சைக்கிள் சவாரிக்கு ரெடியா? செய்தி: சென்னை கார்ப்பரேஷன், விரைவில் சைக்கிள்களை வாடகைக்கு விட 25 சைக்கிள் பூங்காக்களை  அமைக்கவிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக சைக்கிள் பயணங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் சைக்கிள்களில் மக்கள் பயணிக்க தனிப்பாதைகள், வாடகை சைக்கிள் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் சைக்கிள்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்அப்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை கார்ப்பரேஷன் 25 சைக்கிள் பூங்காக்களை அமைக்கவிருக்கிறது. இதன்மூலம்  250 சைக்கிள்களை முதல்கட்டமாக வாடகைக்கு அளிக்க உள்ளது. சைக்கிள் நேச நாடுகள் உலகில் டென்மார்க்கின் கோபன்ஹேகன், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்கள் சைக்கிள் பயணங்களுக்கு புகழ்பெற்றவை. சைக்கிள் பயணங்களுக்கேற்ப பாதைகள் இங்கு உண்டு. திட்டம் வெல்லுமா? தமிழக அரசின் நோக்கம், திட்ட அளவில் நன்றாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நிறைய சிக்கல்களை சந்திக்கவிருக்கிறது. முதலில் சைக்கிளை ஓட்டுவதற்கா