இடுகைகள்

இயற்கைவளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள்தொகை பெருகிய உலக நாடுகளின் நகரங்கள்!

படம்
    அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்கள் டோக்கியோ ஜப்பான் 37.34 மில்லியன் நாட்டின் முக்கியமான பொருளாதார அரசியல் தலைநகரம். பிறப்பு சதவீதம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள்தொகை பெருக்கம் என்ற அந்தஸ்தை 2030இல் இழக்க வாய்ப்புள்ளது. டெல்லி இந்தியா 31.18 மில்லியன் முகலாயர்களின் கட்டுமானங்களைக் கொண்ட பழைய நகரம்.   பெயர்களை மாற்றி வைத்தாலும் வரலாற்றை அழிக்க முடியாது அல்லவா?   தொன்மைக் காலத்தில் இருந்தே அரசின் அதிகாரத் தலைநகரம். ஷாங்காய் சீனா 27.80 மில்லியன் சீனாவின் வணிகம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் இந்த நகரில்தான் நடைபெறுகின்றன. விண் முட்டும் கட்டிடங்கள், பல்கலைக்கழகங்கள் என கட்டுமானங்களுக்கு, வணிகத்திற்கு பெயர் பெற்ற நகரம். சாவோ பாலோ பிரேசில் 22.24 மில்லியன் புனிதர் பாலின் பெயர் வைக்கப்பட்ட நகரம். இங்கு 111 இனக்குழுக்கள் வசிக்கின்றனர். மெக்சிகோ சிட்டி மெக்சிகோ 21.92 மில்லியன் சியரா மாட்ரே மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள நகரம்.   கடலுக்கு மேலே 2,240 மீட்டர் உயரத்தில் உள்ளது.   டாக்கா வங்கதேசம் 21.74 மில்லியன் கங்கை ஆற்றுப்பகுதியில் அமைந்த

அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா!

படம்
  இந்தியாவில் தற்போது 106 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 40 ஆயிரம் சதுர கி.மீ. உலகின் முதல் தேசியப்பூங்கா எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா?  அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. இதன் பெயர், யெல்லோஸ்டோன் என தலைப்பில் குறிப்பிட்டதுதான். இதன் பரப்பு, 8,104 சதுர கி.மீ.  இந்த தேசியப் பூங்கா வியோமிங் தொடங்கி மான்டனா, இடாகோ ஆகிய மாகாணங்கள் வரை நீண்டுள்ளது. இங்கு 67 வகை பாலூட்டிகள் வாழ்கின்றன. 322 இன பறவைகள். 16 வகை மீன்கள், 1,100 இயற்கை தாவரங்கள் உள்ளன. 400 வகையான வெப்பத்தை விரும்பும் நுண்ணுயிரி வகைகள் அறியப்பட்டுள்ளன.  இங்கு கால்டெரா எனும் எரிமலை உள்ளது. வெப்ப நீரூற்றுகளும் உண்டு. ஓல்ட் ஃபைத்ஃபுல் என்ற வெப்ப நீரூற்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. 60 அல்லது 90 நிமிடங்களுக்கு நீரை வேகமாக பீய்ச்சி அடித்து வருகிறது. 1870ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்தனர். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் முன்னர் எரிமலை இயக்கம் இருந்திருப்பதாக ஆய்வாளர்கள் தகவல் கூறுகின்றனர். புவித்தட்டுகளில் மோதல் இங்கு எரிமலை உருவாக காரணமாக இருந்திருக்கிறது. இதை ஏன் இப்போது நாம் வாசிக்கிறோம்? மார்ச் 1, 1872ஆம்

வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் உற்பத்தி! - இயற்கையை பாதிக்குமா?

படம்
  ஒன்றிய அரசு, வடகிழக்கு மாநிலங்களில் பாமாயிலை உற்பத்திசெய்ய முடிவெடுத்துள்ளது. சாதாரண பிற எண்ணெய் வித்துகளை விட பாமாயில் விளைவிக்க பனைக் கன்றுகளை ஊன்றுவது எதிர்காலத்தில் பயன் கொடுக்கும் என ஒன்றிய அரசு கருதுகிறது. விவசாயத்துறை இதற்கான அனுமதியை ஏற்கெனவே கொடுத்துவிட்டார்.  சூழலியலாளர்கள், ஒற்றைப் பயிரை மட்டுமே ஒரு இடத்தில் பணப்பயிராக வளர்ப்பது இயற்கை சூழலை கெடுக்கும் என்று கூறிவருகின்றனர். அரசு இதைக் காதுகொடுத்து கேட்கவே இல்லை.  11,040 கோடி ரூபாய் திட்டமாக இதனை பிரதமர் கடந்த வாரமே அறிவித்துவிட்டார். தேசிய சமையல் எண்ணெய்க்கான தேவையாக ஒன்றிய அரசு பாமாயிலை கருதுகிறது. இந்த திட்டம் 1980இல் பரிசீலிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்காக கைவிடப்பட்டது என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  பனை கன்றுகளை மட்டுமே குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஊன்றுவது அங்குள்ள பன்மைத்துவ சூழலை குலைக்கும். நீர் தேவையை அதிகரிக்கும் என பல்வேறு குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. பனைக் கன்றுகள் வடகிழக்கு மாநிலங்களில் விளையும் பயிர் கிடையாது. இதனை அங்கு விளைவிப்பது அதன் இயற்கையான தன்மைய