இடுகைகள்

சோகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

படம்
  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என கேள்வி கேட்காத மனங்களே உலகில் இருக்காது. அந்தளவு சோகங்களை தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு அதை நினைத்தே வருந்துவது, தாழ்வுணர்ச்சி கொள்வது, விரக்தியாக சுற்றுவது, குடிக்கு அடிமையாவது எல்லாம் நடக்கிறது. உண்மையில் இப்படி நடக்கும் சோகமான விஷயங்களை நேரடியான ஒருவரின் குணம், அதிர்ஷடம் சார்ந்த பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் எதிர்மறையாக நினைப்பதே நடக்கிறது.  உலகில் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கிறது. கெட்டவர்களுக்கு மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என நிறைய மக்கள் முன்முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே, வாழ்க்கையின் போக்கில் நடைபெறும் கருத்துக்கு மாறான ஒரு சம்பவத்தைக் கூட அவர்களால் தாங்கமுடிவதில்லை. இதில் இன்னும் அபாயகரமான விஷயமாக மன அழுத்தம் முற்றி தற்கொலை வரை செல்வதுதான். இதைப் பற்றி விளக்கி மக்களுக்கு சிகிச்சை செய்த உளவியலாளர்தான் டோரத்தி ரோவே.  வேலை இழப்பு, புயல் சேதம், பெற்றோர் இறந்துபோவது என சம்பவங்கள் நடப்பதற்கு தனிநபரை குற்றவாளியாக்க முடியாது. அதை அவரே மனதிற்கு அருகில் வைத்துக்கொண்டு கவலைப்படுவது தவறு. இதில

சிந்தனை, காலத்தைக் கடந்தால் காதல் கிடைக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒருவரின் மனம், தேடுதலில் வேட்கை கொண்ட மனத்தை பெற்றுத்தராது. காதலைப் பொறுத்தவரை மனம் அதை தேடவேண்டும் என்பதல்ல. தேடாமலேயே அது கிடைத்துவிடும். நாமறியாமல் காதல் கிடைத்துவிடும்.காதல் கிடைப்பது மனிதர்கள்   முயற்சி, செய்து பெறும் அனுபவம் போல இருக்காது. காதலை காலத்தைப் பொறுத்து தேடினால் பெற முடியாது. காதலை ஒன்றாக, பலவாக, தனிப்பட்டதாக, பொதுவானதாக பார்க்கலாம். இதை பூவைப் போல கூறலாம். பூக்களின் மணத்தை, அதை கடந்து செல்பவர்கள் பார்க்கலாம். மணத்தை நுகரலாம். பூக்களை தொல்லையாக நினைப்பவர்களும், அதை மலர்ச்சியாக பார்ப்பவர்களும் உண்டு. பூக்களுக்கு அதைக் காணபவர்கள் அருகில் இருந்தாலும் அல்லது வெகுதூரத்தில் இருந்தாலும்   ஒன்றுதான். பூக்களிடம் நறுமணம் உள்ளது. அதை அனைவருக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறது. காதல் என்பது புதியது, உயிரோடு இருப்பது, உற்சாகம் அளிக்கக்கூடியது. இதில், நேற்று, நாளை என்பது கிடையாது. சிந்தனை என்பதைக் கடந்தது. வெகுளித்தனமற்ற உலகில் வாழும் அப்பாவித்தனமான மனது காதலை தெளிவாக அறியும். தியாகம், வழிபாடு, உறவு, உடலுறவு

சோகப்பாடல்களை கேட்கப் பிடிக்கிறதா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி சோகமாக இருக்கும்போது சோக பாடல்களை ஏன் கேட்கிறோம்? சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு சிறகு முளைத்தது பாடலை கேட்டுவிட்டு இந்த பதிலை எழுதுகிறேன். இயல்பாகவே யேசுதாஸின் குரலில் டன் கணக்கில் சோகம் இருக்கும். பாடல் வரிகளும் அதில் சோகத்தை பிழிய, பாடல் ப ப்பரப்பா ஹிட். பொதுவாக நாம் தனியாக இருக்கிறோம், சதியால் வீழ்த்தப்பட்டோம் என்றெல்லாம் மனதில் புலம்பல் நம் காதுக்குள் கேட்க இரவு தேவை. அதில்தான் பகலின் போலித்தனங்கள் எல்லாம் உடையும். எனவே சோகப்பாட்டுகள் அலையலையாக கிளம்புவது இரவில்தான். அந்த நேரத்தில் நாம் பொன்மகள் வந்தாள் ரீமிக்ஸ் கேட்ட முடியாது. நம் மனமே குழம்பிவிடும். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா, அல்லது சோகமாகவா என திகைப்பாகும். லிம்மெரிக் பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியில் இப்படி சோகத்திற்கு சோகப்பாட்டு போட்டு அதிலிருந்து வெளியே வந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சர்வே ஒன்றை எடுத்து வெளியிட்டார்கள். எனவே அந்தந்த நேரத்தில் அந்தந்த உணர்ச்சியோடு இருப்பது ஒன்றும் கொலை குற்றம் அல்ல. நன்றி - பிபிசி