இடுகைகள்

சத்யாநாதெள்ளா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பன்மை கலாசாரத்தை விரும்பும் இந்தியன் நான்! - சத்யா நாதெள்ளா

படம்
infinityleap சத்யா நாதெள்ளா , மைக்ரோசாப்ட் இயக்குநர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைத் தாண்டி , புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாதித்த சாதனைகள் அதிகம் . மைக்ரோசாப்டின் குறைகளை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு அந்நிறுவனப் பிரிவுகளை ஒருங்கிணைத்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சத்யா . அவரிடம் டெக் துறை , வளர்ச்சி , இந்தியா பற்றி பேசினோம் . செயற்கை நுண்ணறிவு பற்றி நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள் . அதாவது , அத்துறைக்கான விதிகளை வகுக்குமாறு பேசியிருந்தீர்கள் . டெக் நிறுவனங்கள் பயனர்களின் பிரைவசி விஷயங்களை சரியாக கடைபிடிக்கின்றனவா ? தொழில்நுட்பம் என்பது ஒரேமாதிரிதான் . ஆனால் அதனை கடைப்பிடிக்க சில விதிமுறைகள் தேவைப்படுகின்றன . உணவுபாதுகாப்புத் துறைக்கு விதிகள் இருப்பது போலவே , விமானத்துறைக்கும் விதிகள் உண்டு . அதேபோல செயற்கை நுண்ணறிவு துறைக்கும் தனியான விதிகள் இயற்றப்படவேண்டும் . பயனரின் அந்தரங்கம் என்பது அவரின் உரிமை . அது பாதுகாக்கப்படவேண்டும் . நாங்கள் ஐரோப்பாவின் விதிமுறைகளை உலகம் முழுக்க பின்பற்றுகிறோம் . கடு

உண்மையைப் பேசிய சுயசரிதை! - சத்யா நாதெள்ளாவின் ஹிட் ரெஃப்ரெஷ்

படம்
பிசினஸ் இன்சைடர் ஹிட் ரெஃப்ரெஷ் சத்யா நாதெள்ளா தமிழில்: பூ. சோமசுந்தரம் வெஸ்ட்லேண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் வாழ்க்கையை செலவழித்து முடித்தவர் சுயசரிதையை எழுதினால் அது இயல்பானது. முக்கியமான அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்டில் இயக்குநராக தொடரும்போது, ஒருவர் தன் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார் என்றால் அது பலராலும் புதுமையாகத்தானே பார்க்கப்படும்.  அப்படித்தான் நூலை நான் படிக்கத்தொடங்கினேன். இது எப்போதும்போலான ஒரு சுயசரிதை நூலாக இல்லை. காரணம் இதனை எழுதியுள்ள சத்யாவின் எண்ணங்களும் எழுத்துக்களும்தான். தொழில்சாதனைகளைப் பேசுபவர்கள் அவ்வளவு எளிதில் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மூச்சு விடமாட்டார்கள். சத்யா, பிற மேற்கத்திய ஆட்களிடமிருந்து வேறுபடுவது இங்குதான். இயல்பாக தன் மூளைவாத குழந்தை பற்றியும், அப்போதைய அலுவலக நெருக்கடியையும் பதிவு செய்கிறார். கூடவே மறக்காமல் நிறுவனம் பினதங்கியுள்ள விஷயத்தையும் நறுக்கென சுட்டிக்காட்டுகிறார். விசுவாசம் என்பதை விட எதைக் கவனிக்காமல் விட்டோம், எங்கே தவறினோம் என்று பதிவு செய்த முதல் நூலாக இது இருக்கலாம். தனது சொந்த வாழ்க்கை, மூளைவாத குழந்