இடுகைகள்

சமூக வலைத்தளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலர்களை போனை மாற்றிக்கொள்ளச் சொல்லும் பெண்ணின் அப்பா! லவ் டுடே - பிரதீப், இவானா

படம்
  லவ் டுடே பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா இசை யு1 இயக்கம் பிரதீப் ரங்கநாதன்   நிகிதா, பிரதீப் என இருவரும் காதலிக்கிறார்கள்.இருவரும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கமாகித்தான் டேட்டிங் சென்று காதலிக்க தொடங்குகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதாக சொல்லிக்கொள்கிறார்கள். கல்யாணம் பற்றி பேசப் போகும்போது நிகிதாவின் அப்பா, இருவரும் ஒரு நாளுக்கு இருவருடைய போன்களையும் மாற்றிக்கொள்ளச் சொல்கிறார். இதனால் ஏற்படும் களேபரங்கள்தான் படம். படத்தை இயக்குநர் பிரதீப் குடும்ப படம் என்றாலும் முழுப்படத்தையும் குடும்ப ஆட்கள் தனித்தனியாக வந்து பார்த்துக்கொள்ளலாம். படம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. 2கே கிட்ஸ்களுக்கான படம். எப்போதும் போனை கையில் வைத்துக்கொண்டே அனைத்து உறவுகளையும் அனைத்து வசதிகளையும் பெற்று நுகரும் ஆட்களுக்கு அதன் வழியாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பேசுகிற படம்.   நேரடியாக ஒருவரைச் சந்தித்துப் பேசுவதும், அதன் வழியாக உறவு வளர்வதும், சமூக வலைத்தளங்களின் வழியாக உறவு வளர்வதும் எப்படியானது என்பதை படத்தில் சில இடங்களில் நகைச்சு

டிஜிட்டல் அடிமைத்தனம் - அறிகுறிகளை அறிவது எப்படி?

படம்
  டிஜிட்டல் அடிமை கொரோனா காலம், நமக்கு டிஜிட்டல் பொருட்கள் மீது பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம். இன்று நீங்கள் குறிப்பிட்ட நூல்களை கையில் எடுத்துச்செல்லவேண்டியதில்லை. அதற்கு பதிலாக போனை கையில் எடுத்துச்சென்றால்போதும். மடிக்கணினி கூட வேண்டியதில்லை. போனில் உள்ள இணைய வசதியை முடுக்கி, தேவையான நூல்களை நீங்கள் பெற்று படிக்கலாம். அதனை பல்வேறு தளங்களில் சோதித்து கூட பார்க்கலாம். புதிய நூல்களைக் கூட பணம் கொடுத்து தரவிறக்கிக்கொள்ளலாம். சுமை ஏதும் நம் தோளில் ஏறாது. புதிதாக கற்றுக்கொள்ள இணைய வழயில் ஏராளமான வழிகள் உள்ளன.  குறிப்பிட்ட ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் அல்லது இண்டர்நெட் ஆர்ச்சீவ் சென்று வாசிக்கலாம். இணையத்தில் வேறு ஏதாவது விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, யூட்யூபில் பிலிப் பிலிப், கிச்சடி மிஸ்டர் தமிழன் போன்ற சேனல்களைப் பார்க்கலாம். நேரத்தை வீண் என்று ஸ்மார்ட்போன் உள்ளவர் எப்போது சொல்ல மாட்டார்.  எதிர்மறை பக்கம் என்பது சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்